Word |
English & Tamil Meaning |
|---|---|
| வல்லபி 2 | vallapi n. <>வல்லபம்2. 1. Skilful person; சாமர்த்தியமுள்ளவ-ன்-ள். (யாழ். அக.) 2. See வல்லவி2, 2. |
| வல்லபை | vallapai n. <>vallabhā. 1. See வல்லவை, 1. (W.) . 2. Mistress; 3. See வல்லவை, 2. வல்லபைத்திருவோடுனைவழிபட (காஞ்சிப்பு. அனேகதந். 10). |
| வல்லம் 1 | vallam. n. <>வன்-மை. Power, strength; ஆற்றல். வல்லம்பேசி வலிசெய் மூன்றூரினை ... நூறினான் (தேவா. 380, 6). |
| வல்லம் 2 | vallam n. prob. vallabhā. See வல்லவை, 1. (அக. நி.) . |
| வல்லம் 3 | vallam n. 1. A šiva shrine in the North Arcot District; வடவாற்காடு ஜில்லாவிலுள்ள ஒரு சிவஸ்தலம். 2. A town in the Tanjore district; 3. See வல்லத்துவில்லை. 4. Plantain; 5. cf. வள்ளம். Ola basket; 6. A weight=2 macāṭi; |
| வல்லம்பன் | val-l-ampaṉ n. perh. வல்1 +அம்பு1. A cultivating caste in Tanjore, Trichinopoly and Ramnad districts; தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி இராமநாதபுரம் ஜில்லாக்களிலுள்ள விவசாயஞ் செய்து சீவிக்கும் ஒருசாதி. |
| வல்லமை | vallamai n. <>id. Power; prowess; வலிமை. காதுசிலை வல்லமைகள் (திருக்கலம். 72). |
| வல்லயம் | val-l-ayam n. perh. id.+ அயம்6. [T. ballemu, K. ballega.] A kind of spear; ஈட்டிவகை. வல்லயந்தனி லுடைவாளில் (கந்தபு. தருமகோ. 24). |
| வல்லரி | vallari n. <>vallarī. 1. Budding shoot; தளிர். (சூடா.) 2. Green fruit; 3. Cluster of fruit; 4. Bunch of flowers; 5. Creeper; |
| வல்லவட்டு | vallavaṭṭu n. See வல்லவாட்டு. (W.) . |
| வல்லவன் 1 | vallavaṉ n. <>vallabha. 1. Husband; கணவன். மலைமாது வல்லவன் வாணன் (தஞ்சைவா. 164). (பிங்.) 2. Shepherd, cowherd; |
| வல்லவன் 2 | vallavaṉ. n. <>வல்1. 1. Strong man; வலிமையுள்ளவன். 2. Capable man, man of ability; |
| வல்லவன் 3 | vallavaṉ. n. <>vallava. 1. Cook; சமைப்பவன். (W.) 2. Name assumed by Bhīma when he lived incognito in Virāṭa; |
| வல்லவாட்டு | vallavāṭṭu n. <>T. valle-vāṭu. 1. Upper cloth worn loosely over the left shoulder and across the chest; பூணூல். போல இடத்தோளின் மேலிருந்து அணியும் ஆடை. சந்திரகாவிச்சேலை வல்லவாட்டுக்குட் டதும்பி (தனிப்பா. i, 260, 1). 2. Scarf gracefully hung round the neck; |
| வல்லவாறு | valla-v-āṟu adv. <>வல்ல + ஆறு1. See வல்லாங்கு. வல்லவாறு சிவாய நமவென்று ... நாதனடி தொழ (தேவா, 470, 6). . |
| வல்லவி 1 | vallavi n. <>vallabhā. See வல்லவை, 1. (பிங்.) . |
| வல்லவி 2 | vallavi n. 1. See வல்லபி2, 1. (W.) . 2. Strong person; |
| வல்லவை | vallavai n. <>vallabhā. 1. Wife; மனைவி. (சூடா.) 2. Wife of Gaṇēša; |
| வல்லவைமன் | vallavai-maṉ n. <>வல்லவை + மன்2. Gaṇēša, as the husband of Vallavai; விநாயகன். (நாமதீப. 28.) |
| வல்லா | vallā n. <>வல்லு- + ஆ neg. Impossibilities; முடியாதவை. வல்லா கூறினும் (தொல். பொ. 425). |
| வல்லாங்கு | vallāṅku adv. <>வல்ல + ஆங்கு. To the best of one's power; இயன்றவளவில். வல்லாங்குப் பாடி (புறநா. 47). |
| வல்லாட்டு | val-l-āṭṭu n. <>வல்1 + ஆட்டு. Horse-play; rude pranks; குறும்பு. ஜவர் கண்ட கர்தம் வல்லாட்டை யடக்கும் (திருவாச. 40, 8). |
| வல்லாண்முல்லை | vallāṇ-mullai n. <>வல்லாண்மை+. (Puṟap.) Theme of appealing to and exciting the manly virtues of a person by praising his family, his native place, and his great qualities; ஒருவனது குடியையும் பதியையும் இயல்புகளையும் புகழ்ந்து அவனது ஆண்மைபெருகச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை. (பு. வெ. 8, 23.) |
| வல்லாண்மை | val-l-āṇmai n. <>வல்1 + ஆண்-மை. Manliness; great ability; பேராற்றல். வல்லாண்மை செல்வமென் றிவ்வெல்லாம் (திருக்கலம். 76). |
| வல்லாத துக்கம் | vallāta-tukkam n. <>வல்லு- + ஆ neg.+. 1. Trouble suffered unjustly; நியாயமின்றி உண்டாந் துயரம். (யாழ். அக.) 2. Insufferable grief; |
