Word |
English & Tamil Meaning |
|---|---|
| வல்லிகம் 2 | vallikam n. prob. vallīja. 1. See வல்லிசம். (யாழ். அக.) . 2. Turmeric; |
| வல்லிகை 1 | vallikai n. <>வல்லி2. 1. Halter of a horse; குதிரைக்கழுத்தில் கட்டும் வடம். நீல மணிக்கடிகை ... வல்லிகை (கலித். 96). 2. An ear-jewel; |
| வல்லிகை 2 | vallikai n. prob. vallakī. Lute; யாழ். (அக.நி.) |
| வல்லிசம் | vallicam n. <>vallī-ja. Black pepper; மிளகு. (தைலவ.) |
| வல்லிசாதகம் | valli-cātakam n. <>வல்லி2 + சாதகம்1. A kaṟpakam creeper; கற்பகத்திற் படரும் கொடிவகை. (சங். அக.) |
| வல்லிசாதம் | valli-cātam n. <>id.+ சாதம்1. See வல்லிசாதகம். (திருமுரு. 101, வேறுரை, பக். 47, கீழ்க்குறிப்பு.) (W.) . |
| வல்லிசாதி | valli-cāti n. <>id.+ சாதி 6. Divine creeper; தெய்வத்தன்மையுள்ள கொடி. கற்பகவல்லி சாதி போல்வாள் (தக்கயாகப். 77, உரை). |
| வல்லிசூரனை | valli-cūraṉai n. perh. id.+ cūrṇā. A kind of greens; கீரைவகை. (சங். அக.) |
| வல்லிசை 1 | val-l-icai n. <>வல்1 + இசை 5. 1. (Mus.) Treble or high note; உச்சவிசை. (பிங்.) 2. (Gram.) Sound of the hard consonants; |
| வல்லிசை 2 | vallicai n. prob. valli-ja. Snake; பாம்பு. (அக. நி.) |
| வல்லிசைவண்ணம் | vallicai-vaṇṇam n. <>வல்லிசை1+. (Pros.) A rhythm marked by frequent use of val-l-eḻuttu; வல்லெழுத்து மிக்கு பயின்றுவருஞ் சந்தம். (தொல். பொ. 528.) |
| வல்லிதின் 1 | vallitiṉ n. <>வல்1. See வல்லாங்கு. வல்லிதின் விருந்து புறந்தருதலும் (தொல். பொ. 152). . |
| வல்லிதின் 2 | vallitiṉ adv. <>வல்2. Rapidly, quickly; விரைவாக. வல்லிதி னாடி வலிப்பதே (பழ. 261). |
| வல்லிமண்டபம் | valli-maṇṭapam n. <>வல்லி2+. Bower, arbour; கொடிப்பந்தல். ஓர் மாதவி வல்லிமண்டபத்தில் (இறை. 2, பக். 28). |
| வல்லிமரம் | valli-maram n. <>id.+. Mainmast; கப்பலின் தலைப் பாய்மரம். Naut.. |
| வல்லிமொடி | vallimoṭi n. cf. வல்லிக்கொடி. A climber. See பெருமருந்து. (மலை.) |
| வல்லியம் 1 | valliyam n. perh. வல்1. 1. Tiger; புலி. (பிங்.) பைங்கண் வல்லியங் கல்லளைச் செறிய (அகநா. 362). 2. See வல்லியம்பொருப்பு. (பிங்.) |
| வல்லியம் 2 | valliyam n. <>வல்லி2. 1. See வல்லி2, 1. (அக. நி.) . 2. Purple yam. 3. Turmeric; |
| வல்லியம் 3 | valliyam n. perh. vallabha. cf. வல்லி3. Shepherds' quarters; இடைச்சேரி. (பிங்.) |
| வல்லியம்பொருப்பு | valliyam-poruppu n. <>வல்லியம்1+. Mt. Kolli, a hill in the Cēra country; கொல்லிமலை. (பிங்.) |
| வல்லியை | valliyai n. <>balyā. Indian winter cherry. See அமுக்கிரா. (தைலவ.) |
| வல்லிவன்னி | valli-vaṉṉi n. <>vallī + vahni. Ceylon leadwort. See கொடுவேலி. (தைலவ.) |
| வல்லிவனம் | valli-vaṉam n. prob. id.+. The third court of camavacaraṇam; சமவசரணத்தின் மூன்றாம் பிராகாரம். காதமகல் வல்லிவனத்தைச் சார்ந்தார் (மேருமந்.1057). |
| வல்லினம் | val-l-iṉam n. <>வல்1+. (Gram.) The class of hard consonants, viz., k, c, ṭ, t, p, ṟ; க், ச், ட், த், ப், ற் என்ற வல்லோசையுள்ள மெய்யெழுத்துக்கள். (நன். 68.) |
| வல்லினவெதுகை | valliṉa-v-etukai n. <>வல்லினம்+. (Pros.) Rhyme in which the second letter of each line of a stanza is a hard consonant; எல்லாவடிகளின் முதற்சீர்க்கண்ணும் வல்லெழுத்து எதுகையாக ஒன்றிவரும் தொடை. |
| வல்ல¦கம் | vallīkam n. <>vāhlika. Asafoetida; பெருங்காயம். (நாமதீப. 393.) |
| வல்ல¦சம் | vallīcam n. See வல்லிசம். (சங். அக.) . |
| வல்ல¦ட்டுக்குற்றி | val-l-īṭṭu-k-kuṟṟi n. prob. வல்1 + இடு-+. 1. Mallet; கொட்டாப்புளி. (J.) 2. Log placed under another as a support; 3. A wedge for splitting palmyra stem, etc.; |
| வல்ல¦ற்று | val-l-īṟṟu n. <>id.+. Cow that calves once in several years, dist. fr. āṭṭīṟṟu; பலவாண்டுக்கு ஒருமுறை ஈனும் பசு. Loc. |
| வல்லு - தல் | vallu- 5 v. tr. <>id.+. To be able; to be possible; செய்யமாட்டுதல். வல்லினும் வல்லேனாயினும் (புறநா. 161). |
| வல்லுதல் | vallutal n. prob. id. Propriety, discipline; ஒழுங்கு. (W.) |
