Word |
English & Tamil Meaning |
|---|---|
| வல்லுநர் | vallunar n. <>வல்லு-. Capable persons; வல்லோர். வல்லாராயினும் வல்லுநராயினும் (புறநா. 27). |
| வல்லுப்பலகை | vallu-p-palakai n. <>வல்1+. See வல்லப்பலகை. வல்லுப்பலகை யெடுத்து நிறுத்தன்ன (கலித். 94). . |
| வல்லுயிர் | val-l-uyir n. <>id.+. Diehard person or animal; எளிதிற் சாகமாட்டாத பிராணி. (யாழ். அக.) |
| வல்லுரம் | valluram n. <>vallura. (யாழ். அக.) 1. Jungle; காடு. 2. Desert; 3. Grassy place; lawn, turf; 4. Field; 5. Sand; 6. Bunch of flowers; 7. Flesh of the wild hog; 8. cf. வல்லி5. Loneliness; |
| வல்லுவப்பை | valluva-p-pai n. <>வல்லுவம் + பை4. 1. Large betel-pouch with several sections; வெற்றிலைப்பை. (W.) 2. Purse of cloth tied round the waist; |
| வல்லுவம் | valluvam n. <>வட்டுவம். See வல்லுவப்பை, 1. (W.) . |
| வல்லுளி | val-l-uḷi n. perh. வல்1 + உள்2. Boar, swine; பன்றி. (பிங்.) |
| வல்லூகம் 1 | vallūkam n. <>bhallūka. Bear; கரடி. (உரி. நி.) |
| வல்லூகம் 2 | val-l-ūkam n. <>வல்1 + ஊகம்1. (W.) 1. Male monkey; ஆண்குரங்கு. 2. Large ape; |
| வல்லூரம் | vallūram n. <>vallūra. (யாழ். அக.) 1. Flesh; இறைச்சி. 2. See வல்லுரம்,2. 3. Uncultivated field; |
| வல்லூற்று | val-l-ūṟṟu n. <>வல்1 + ஊற்று2. Mountain spring; பாறையிடையினின்று வரும் நீரூற்று. வல்லூற்றுவரில் கிணற்றின்கட் சென்றுவப்பர் (நாலடி, 263). |
| வல்லூற்றுக்குருவி | vallūṟṟu-k-kuruvi n. <>வல்லூறு+. See வல்லூறு. (W.) . |
| வல்லூறு | val-l-ūṟu n. prob. வல்1 + ஊறு2. Royal falcon, Falco peregrinator; இராசாளி. கொக்கு வல்லூறு கண்டென்ன விலவிலத்து (தனிப்பா. i, 171, 23). |
| வல்லெழுத்து | val-l-eḻuttu n. <>id.+. (Gram.) See வல்லினம். வல்லெழுத்தென்ப கசட தபற (தொல். எழுத். 19). . |
| வல்லெனல் 1 | val-l-eṉal n. Expr. signifying hardness or severity; வன்மையாதற் குறிப்பு. வல்லென்ற நெஞ்சத்தவர் (நான்மணி. 33). |
| வல்லெனல் 2 | val-l-eṉal n. Expr. signifying speed; விரைதற்குறிப்பு. |
| வல்லே | vallē adv. <>வல்2. Quickly, promptly; விரைவாக. ஒன்றின வொன்றின வல்லே செயிற் செய்க (நாலடி, 4). |
| வல்லேறு | val-l-ēṟu n. <>வல்1 + ஏறு3. Thunderbolt; இடி. விசும்பின் வல்லேறு சிலைப்பினும் (பெரும்பாண்.135). |
| வல்லை 1 | vallai n. <>id. 1. Strength, power; வலிமை. (சூடா.) 2. Extensive thicket; big forest; 3. Hillock, mound; 4. Fort, fortress; 5. See வல்லைக்கட்டி. (இங். வை. 124.) 6. Trouble, pain, distress; 7. Battle-of-Plassey tree. 8. Circuit, circle; |
| வல்லை 2 | vallai adv. <>வல்2. See வல்லே. வல்லைக்கெடும் (குறள், 480). . |
| வல்லைக்கட்டி | vallai-k-kaṭṭi n. <>வல்லை1+. Ovarian tumour; வயிற்றுக்கட்டிவகை. (சீவரட்.) |
| வல்லையம் | vallaiyam n. See வல்லயம். வல்லையப் போருக் கொதுங்கேன் (கூளப்ப. 181). . |
| வல்லொட்டு | val-l-oṭṭu n. <>வல்1+. (யாழ். அக.) 1. That which is barely sufficient; போதும்போதாதென்றிருப்பது. 2. Rarity; that which is rare; |
| வல்லொற்று | val-l-oṟṟu n. <>id.+ ஒற்று. (Gram.) See வல்லினம். வல்லொற்றுத் தொடர் மொழி. (தொல். எழுத். 409). . |
| வல்லோன் | vallōṉ n. See வல்லான். வல்லோன் கூருளிக்குயின்ற (நெடுநல். 118). (பிங்.) . |
| வல்வருத்தம் | val-varuttam n. <>வல்1+. Excessive pain; கடுவருத்தம். (யாழ். அக.) |
| வல்வழக்கு | val-vaḻakku n. <>id.+. See வல்லடிவழக்கு. . |
| வல்வாயசரணன் | val-vāy-acaraṇaṉ n. perh. id.+ வாய் + a-caraṇa. A kind of snake; பாம்புவகை. (யாழ். அக.) |
| வல்வாயன் | val-vāyaṉ n. <>id.+ id. One who is tongue-doughty; eloquent man, orator; வாக்குவன்மை யுள்ளவன். (W.) |
| வல்விடம் | val-viṭam n. <>id.+. Deadly poison; கடுநஞ்சு. (யாழ். அக.) |
| வல்விரை - தல் | val-virai- v. intr. <>வல்2+. To hurry; to hasten; மிக வேகமாதல். வள்ளலை வல்விரைந் தெய்த (சீவக. 328). |
