Word |
English & Tamil Meaning |
|---|---|
| வல்வில் | val-vil n. <>வல்1+. The skill of piercing many objects by a single arrow; ஒரே காலத்திற் பல பொருள்களை ஊடுருவிச் செல்லும்படி ஒரம்பை எய்யும் திறமை. வற்பார் திரடோளைந் நான்குந் துணித்த வல்விலிராமன் (திவ்.பெரியதி. 5, 1, 4). (புறநா. 152, 6, அடிக்குறிப்பு.) |
| வல்வில்லி | valvilli n. <>வல்வில். Skilful archer, able to pierce many objects by a single arrow; ஒரே காலத்திற் பல பொருள்களை ஊடுருவிச் செல்லும்படி ஒர் அம்பை எய்யும் திறனுடையவன் (புறநா. 150, அடிக்குறிப்பு.) |
| வல்விலங்கு | val-vilaṅku n. <>வல்1+. Elephant; யானை. (பிங்.) |
| வல்விலோரி | valvil-ōri n. <>வல்வில்+. A liberal chief. See ஓரி, 8. (புறநா. 152, தலைப்பு.) |
| வல்வினை | val-viṉai n. <>வல்1+. 1.The law of karma, as irresistible; வலியதாகிய ஊழ். தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும் (தேவா, 4, 4). 2. Bad karma; 3.Wicked deed; 4. Mighty act or deed; |
| வல 1 - த்தல் | vala- 12 v. tr. cf. val. 1. To encircle, surround; சுற்றுதல். புலவுநாறு நெடுங்கொடி ... வாங்குசினை வலக்கும் (புறநா. 52). 2. To spin, as a spider its thread; to plait; to weave; 3. To string in a series; 4. To tie, bind; 5. To bend; |
| வல 2 - த்தல் | vala- 11 v. intr. <>bala. To grow fat; கொழுத்தல். (திவா.) |
| வல 3 - த்தல் | vala- 12 v. tr. cf. valk. To say, tell; to narrate; சொல்லுதல். மருமகன் வலந்ததும் (சீவக. 187). |
| வலக்கட்டாயம் | vala-k-kaṭṭāyam n. <>வலம்1+. [T. balakadddāyamu.] Compulsion, force; பலவந்தம். |
| வலக்காரம் 1 | valakkāram n. <>balāt-kāra. 1. Force; compulsion; பலவந்தம். 2. Might, power, authority; 3. Success, victory; |
| வலக்காரம் 2 | valakkāram n. prob. வல1- + காரம்2. 1. Wile, trick; தந்திரம். சிறுவலக்காரங்கள் செய்தவெல்லாம் (திருக்கோ. 227). 2. Falsehood; |
| வலக்கால்வாத்துவாதனம் | vala-k-kāl-vāttu-v-ātaṉam n. <>வலம்1 + கால்1+. A posture in which the right leg is stretched out and the chest is made to touch the ground; வலக்காலை மாத்திரம் நீட்டி மார்பு நிலத்திலே தோயக் கிடக்கும் இருக்கைவகை. (தத்துவப். 108, உரை.) |
| வலக்கை | vala-k-kai n. <>id.+ கை5. 1.Right hand; வலது கை. வலக்கையின் மலைந்தான் (கம்பரா. சம்புமா. 25). 2. Right side; |
| வலக்கைகொடு - த்தல் | valakkai-koṭu- v. intr. <>வலக்கை+. 1. To support, as by extending the right hand; உதவியளித்தல். 2. See வலக்கையடி-. Loc. |
| வலக்கைதா - தல் [வலக்கைதருதல்] | valakkai-tā- v. intr. <>id.+. See வலக்கை கொடு-. வலக்கை தந்து நிலத்தில் வந்தவதரித்த (இராமநா. உயுத். 3). . |
| வலக்கையடி - த்தல் | valakkai-y-aṭi- v. intr. <>id.+. To make a solemn affirmation, as by striking hands; உறுதி கூறுதல். Loc. |
| வலகுடியஞ்சாலி | valakuṭiyacāli, n. A petty cess; வரிவகை. Nā. |
| வலங்கம் | valaṅkam n. [T. balaṅgamu K. Tu. baḷaga.] Large family; பெருங்குடும்பம். வலங்கமுடையான். (W.) |
| வலங்கமத்தார் | valaṅkamattār n. prob. வலங்கை. cf. வலங்குலத்தார். Title of the righthand section of the Paṟaiya caste; பறையருள் ஒருபிரிவினரின் சிறப்புப்பெயர். (W.) |
| வலங்கமர் | valaṅkamar n. See வலங்கமத்தார். (யாழ். அக.) . |
| வலங்காரம் | valaṅ-kāram n. <>வலம்1 + காரம்1. That side of a mirutaṅkam, to which mārccaṉai is applied; மத்தளத்தின் மார்ச்சனை பூசின பக்கம். (யாழ். அக.) |
| வலங்குலத்தார் | valaṅkulattār n. <>வலங்குலம். See வலங்கை, 2. (W.) . |
| வலங்குலம் | valaṅ-kulam n. <>வலம்1+. See வலங்கை, 2.(யாழ். அக.) . |
| வலங்கை | valaṅ-kai n. <>id.+ கை5. 1. Right hand; வலப்பக்கத்துக் கை. 2. The righthand castes among the Tamils; |
| வலங்கைமத்தர் | valaṅkaimattar n. See வலங்கமத்தார். (சினேந். 140.) . |
