Word |
English & Tamil Meaning |
|---|---|
| வலுமை | valumai n. <>வலிமை. 1. Strength; பலம். வலுமைக்கு வழக்கில்லை. (W.) 2. Force, violence; |
| வலுமோசம் | valu-mōcam n. <>வலு+. Great deception; பெருமோசம் . (W.) |
| வலுவந்தம் | valuvantam n. <>bala-vat. (W.) 1. Compulsion; வலாற்காரம். 2. Might, power; |
| வலுவந்தரம் | valuvantaram n. See வலுவந்தம். (யாழ். அக.) . |
| வலுவன் | valuvaṉ n. <>வலு. Powerful person; பலவான். வலுவர் கருணீகர் மிகு பாகஞ்செய் தன்னமிடு மடையர் (அறப். சத். 92). |
| வலுவாயன் | valu-vāyaṉ n. <>id.+வாய். See வல்வாயன். (W.) . |
| வலுவுயரம் | valu-v-uyaram n. <>id.+. Great height; மிக்க உயரம். (W.) |
| வலூகம் | valūkam n. <>valūka. The root of the lotus plant; தாமரைக்கிழங்கு. (யாழ். அக.) |
| வலை | valai n. <>வல1. [ T. M. vala, K. bale.] 1. Net, trammel; பிராணிகளை யகப்படுக்குங் கருவி. புலிகொண்மார் நிறுத்த வலையுள் (கலித். 65). 2. Trick, fraud; 3. Ornament worn on the forehead by the wife of the chief sacrificer; |
| வலைக்கண் | valai-k-kaṇ n. <>வலை+. Mesh of a net; வலையின் சிறுதுவாரம். (W.) |
| வலைக்கயிறு | valai-k-kayiṟu n. <>id.+. See வலை, 1. (பிங்.) . |
| வலைக்காசு | valai-k-kācu n. <>id.+ காசு3. Net-money, a contribution paid by fishermen to a temple; செம்படவர் கொடுக்குங் கோயில் மகமைப்பணம். Loc. |
| வலைக்குணுக்கு | valai-k-kuṇukku n. <>id.+. Metal weight attached to a net; வலையை நீருள் தாழச்செய்யும் உலோகவுருண்டை. (W.) |
| வலைகாரம் | valaikāram n. perh. வலு+ காரம்1. A kind of salt; வெடிகாரம். (மூ. அ.) |
| வலைகாரன் | valai-kāraṉ n. <>வலை+காரன் 1. See வலைஞன். (W.) . |
| வலைகொள்(ளு) - தல் | valai-koḷ- v. tr. <>id.+. To surround; சூழ்தல். வலைகொண்ட மானம் வேறென் (இரகு. இரகுவு. 50). |
| வலைச்சி | valaicci n. Fem. of வலையன். 1. Fisherwoman; செம்படவப்பெண். 2. Woman of the maritime tract; |
| வலைச்சியார் | valaicciyār n. <>வலைச்சி. A section in kalampakam, which describes the hero as making love to a fisherwoman; கலம்பக வுறுப்பினுள் தலைவன் ஒரு வலைச்சியிடம் காமக்குறிப்புப்படக் கூறும் பகுதி. (குமர. பிர. மதுரைக்கலம். 66.) |
| வலைச்சேரி | valai-c-cēri n. <>வலை+. Fishermen's quarters; வலைஞர் வாழிடம். |
| வலைஞன் | valaiaṉ n. <>id. Fisherman; மீன்பிடிப்போன். கொடுமுடி வலைஞர் (மதுரைக். 256). |
| வலைதடு - த்தல் | valai-taṭu- v. tr. <>id.+. To prevent fish from being caught in the net; மீன் வலைப்படாமற் றடுத்தல். (யாழ். அக.) |
| வலைநாற்றம் | valai-nāṟṟam n. <>id.+. Foul stench; துர்நாற்றம். துணி வலை நாற்றம் நாறுகிறது. |
| வலைப்படு - தல் | valai-p-paṭu- v. intr. <>id.+. 1. To be caught in a net; வலையில் அகப்படுதல். 2. To be cheated by a trick; |
| வலைப்பாடு | valai-p-pāṭu n. <>வலைப்படு-. Fishing with nets; வலையால் மீன்பிடிக்கை. (யாழ். அக.) |
| வலைப்பூச்சி | valai-p-pūcci n. <>வலை+. Spider; சிலந்தி. (W.) |
| வலைப்பை | valai-p-pai n. <>id.+ பை4. Netting, net-bag; வலைபோற் கண்களுள்ள பை. |
| வலையசேரி | valaiya-cēri n. <>வலையன்+. 1. Maritime tract; நெய்தனிலம். (யாழ். அக.) 2. See வலைச்சேரி. |
| வலையப்பறையன் | valaiya-p-paṟaiyaṉ n. <>id.+. A sect of Paṟaiyas who live by netting birds; வலைகளாற் பறவைகளைப் பிடிக்கும் பறையர் வகுப்பினன். |
| வலையம் | valaiyam n. See வலயம். (W.) . |
| வலையன் | valaiyaṉ n. <>வலை. 1. Inhabitant of maritime tracts; நெய்தனிலத்தான். (பிங்.) 2. Fisherman; person of a caste which lives by netting fish, birds and beasts, one of 18 kuṭi-makkaḷ q.v.; 3. See வலையன்சாமை. (யாழ். அக.) |
