Word |
English & Tamil Meaning |
|---|---|
| வழிப்படு 1 - தல் | vaḻi-p-paṭu v. <>id.+. intr. 1. To go on one's way; பயணமாதல். 2. To be reformed; 3. To meet; 1. See வழிபடு1-, 2. அமரர்கோன் வழிப்பட்டால் (திவ். திருவாய், 3, 1, 8). 2. See வழிபடு1-, 1. |
| வழிப்படு 2 - த்தல் | vaḻi-p-paṭu- v. tr. Caus. of வழிப்படு1-. 1. To send on a journey; to despatch; பயணப்படுத்துதல். மதிநுதலியைவழிப்படுத்து (திருகோ. 214, கொளு). 2. To set on the right path; 3. To regulate; to reduce to order; to reform; 4. To bring under control; 5. To cause one to reverence; |
| வழிப்பயணம் | vaḻi-p-payaṇam n. <>வழி+. Journey; பிரயாணம். Loc. |
| வழிப்பறி 1 - த்தல் | vaḻi-p-paṟi- v. tr. <>id.+. To waylay and rob; இடைவழியிற் கொள்ளையிடுதல். (சூடா.) |
| வழிப்பறி 2 | vaḻi-p-paṟi- n. <>வழிப்பறி-. Highway robbery; வழிக்கொள்ளை. (பிங்.) |
| வழிப்பிரிவு | vaḻi-p-pirivu n. <>வழி+. Crossways; place where two or more roads meet; பலவழி கூடும் இடம். (W.) |
| வழிப்புப்புழுகு | vaḻippu-p-puḻuku n. <>வழி4-+புழுகு1. Civet taken out of the ventricle of the civet cat; புனுகுப்பூனையின் பிருட்டப்பையினின்று வழித்தெடுத்த புனுகு. (W.) |
| வழிப்புரை | vaḻi-p-purai n. <>வழி+புரை6. Rest-house; traveller's bungalow; வழிப்போக்கர் இளைப்பாறத் தங்குமிடம். (ஏலாதி, 2.) |
| வழிப்பெருந்தேவி | vaḻi-p-peruntēvi n. <>id.+. Junior queen; பட்டமகிஷிக்கு அடுத்த தேவி. சேதியர் பெருமகன் வழிப்பெருந் தேவியொடு (பெருங். வத்தவ. 3, 110) . |
| வழிப்பொதி | vaḻi-p-poti n. <>id.+ பொதி2. See வழிச்சோறு, 1. Loc. . |
| வழிப்போ - தல் | vaḻi-p-pō- v. <>id.+. intr. 1. See வழிப்படு-, 1.-tr. . 2. See வழிபடு-, 1. |
| வழிப்போக்கர்வாழை | vaḻippōkkar-vāḻai n. <>வழிப்போக்கன்+. Traveller's palm. See. நீர்வாழை. Mod. |
| வழிப்போக்கன் | vaḻi-p-pōkkaṉ n. <> வழிப்போக்கு. Wayfarer; traveller; பிரயாணி. வழிப்போக்கர் புகுந்தாடாநிற்பர்களே (ஈடு, 4, 4, 6). |
| வழிப்போக்கு | vaḻi-p-pōkku n. <> வழி + போ-. 1. Going along the path, proceeding on the way; வழியிற் போகை. 2. Path; 3. Footpath in the fields; 4. Waste land; |
| வழிப்போவான் | vaḻi-p-pōvāṉ n. <> id.+. id. Traveller, wayfarer. See வழிச்செல்வோன். |
| வழிபடு 1 - தல் | vaḻi-paṭu- v. <> id.+. tr. 1. To follow, adhere to; பின்பற்றுதல். வழிபடுதல் வல்லுதலல்லால் (நாலடி, 309). 2. To reverence, worship; 3. See வழிப்படு1-, 1. (W.) |
| வழிபடு 2 - த்தல் | vaḻi-paṭu- v. tr. Caus. of வழிபடு2-. See வழிப்படு1-. (W.) . |
| வழிபடுகடவுள் | vaḻipaṭu-kaṭavul n. <> வழிபடு1-+. Tutelary deity; the deity which a man worships as his own God or the God of his family or caste, dist. fr. ēṟpuṭai-k-kaṭavuḷ; ஒருவன் தன் குலத்துக்கும் தனக்குமுரித்தாக வணங்கும் கடவுள். வழிபடு கடவுளையாதல் . . . ஏற்புடைக்கடவுளையாதல் வாழ்த்து தல். (குறள், அவ.). |
| வழிபடுதெய்வம் | vaḻipaṭu-teyvam n. <> id.+. See வழிபடுகடவுள். வழிபடு தெய்வ நிற்புறங் காப்ப (தொல். பொ. 422). |
| வழிபண்ணு - தல் | vaḻi-paṇṇu- v. intr. <>வழி+. See வழிசெய்-. . |
| வழிபய - த்தல் | vaḻi-paya- v. tr. <> id.+. 1. To result ultimately in; பிற்பயத்தல். (தொல். பொ. 424.) 2. To give without refusal; |
| வழிபறி 1 - த்தல் | vaḻi-paṟi- v. tr. <> id.+. See வழிப்பறி-. . |
| வழிபறி 2 | vaḻi-paṟi n. <> வழிபறி-. See வழிப்பறி. வழிபறியுண்ட விடத்தே தாய்முகங் காட்டினாற்போலே (ஈடு, 6, 1, 1). . |
| வழிபாடு | vaḻipāṭu n. <> வழிபடு1-. 1. Proceeding on the way; வழியிற்செல்லுகை; 2. Following; 3. Reverence, adoration; 4. Ritual; worship; 5. Use, custom, habit; 6. Religious system; |
| வழிபார் - த்தல் | vaḻi-pār- v. <> வழி+. tr. 1. To expect; to look forward to; எதிர்பார்த்தல், நாடோறும் வழிபார்த்திரங்கி மனந்தளர்ந்தேன் (அருட்பா. v, வேட்கை). 3). -intr. 2. To find a way out; to devise means; 3. To watch for an opportunity; |
