Word |
English & Tamil Meaning |
|---|---|
| வழியலை - த்தல் | vaḻi-y-alai- v. tr. <> வழி+. To rob on the highway; ஆறலைத்தல். (பொருந. 21, உரை.) |
| வழியளவை | vaḻi-y-aḷavai n. <> id.+. Proof by inference; அநுமானப்பிரமாணம். ஆன்றோராற் செய்யப்பட்ட மிருதி முதலியவற்றிற்கு மூலவேதம் உண்டென்று வழியளவையா லுணரப்படு தலின் (சி. போ. பா. அவையடக். பக். 16). |
| வழியன் | vaḻiyaṉ n. prob. வழி2-. Leper; குட்டரோகி. (யாழ். அக.) |
| வழியனுப்பு - தல் | vaḻi-y-aṉuppu- v. tr. <>வழி+. To see one off; பயணப்படுத்திவிடுதல். |
| வழியாயம் | vaḻi-y-āyam n. <> id.+ ஆயம்3 . Toll; சுங்கம். (Insc.) |
| வழியிரங்கு - தல் | vaḻi-y-iraṅku- v. intr. <> id.+. To repent; பின்னிரங்குதல். கற்றொறுங்கல்லாதே னென்று வழியிரங்கி (பழமொ. 2). |
| வழியிலார் | vaḻiyilār n. <> id. Descendants; சந்ததிகள். சாத்தனும் இவன் வழியிலாரும் பெறக்கடவதாகவும் (Insc. Pudu. 11). |
| வழியுணவு | vaḻi-y-uṇavu n. <> id.+. See வழிச்சோறு, 1. (பிங்.) . |
| வழியுரை - த்தல் | vaḻi-y-urai- v. intr. <> id.+. To speak as an ambassador; தூதுசொல்லுதல். வழியுரைப்பான் பண்பு (குறள், 688). |
| வழியுரைப்பான் | vaḻi-y-uraippāṉ n.. <>வழியுரை-. Ambassador; தூதன். (பிங்.) |
| வழியெச்சமறு - தல் | vaḻi-y-eccam-aṟu- v. intr. <>வழி+எச்சம்1+. See வழியெஞ்சு -. இத்தர்மம் அழிவுசெய்வான் வழியெச்சமறுவான் (S. I. I. v, 83). . |
| வழியெஞ்சு - தல் | vaḻi-y-ecu- v. intr. <>id.+. To become extinct, as a family; வமிசமற்றுப்போதல். வழியெஞ்சு லெஞ்ஞான்று மில் (குறள், 44.) |
| வழியெதுகை | vaḻi-y-etukai n. <>id.+. (Pros.) Agreement in rhyme of the first, the second and the third foot in every line of a stanza; ஒரு செய்யுளில் அடிதோறும் முதன்மூன்று சீர்க்கண்ணும் வரும் எதுகைவகை. (காரிகை, ஒழிபி. 6, உரை, பக்.158.) |
| வழியொழுகு - தல் | vaḻi-y-oḻuku- v. intr. <>id.+. 1. To follow; பின்செல்லுதல். 2. To go along the right path; 3. To obey, as a direction; |
| வழியோன் | vaḻiyōṉ n. <>id. See வழித்தோன்றல். (பிங்.) . |
| வழிவகை | vaḻi-vakai n. <>id.+. (W.) 1. Resources and convenieneces; இடம்பொருளேவல்கள். வழிவகையுள்ளவன். 2. Expedients, means; |
| வழிவந்தான் | vaḻi-vantāṉ n. <>வழிவா-. 1. Descendant; வமிசத்திற் பிறந்தவன். 2. Follower; 3. One born of a goof family; |
| வழிவருத்தம் | vaḻi-varuttam n. <>வழி+. Fatigue or weariness from journey; பிரயாணத்தாலுண்டான சிரமம். வழிவருத்தந் தீர்ந்திருந்த இரவல (சிறுபாண். 40, உரை). |
| வழிவழி | vaḻi-vaḻi adv. <>id.+. From Generation to generation; பரம்பரையாய். பழிதீர் செல்வமொடு வழிவழிசிறந்து (தொல். பொ. 422). |
| வழிவழியாய்ப்போ - தல் | vaḻi-vaḻi-y-āy-po-pō- v. intr. <>id.+வழி+ஆ-+. To go in different directions; வெவ்வேறு வழியாகக் பிரிந்துபோதல். (W.) |
| வழிவா - தல் [வழிவருதல்] | vaḻi-vā- v. intr. <>id.+. 1. To be hereditary; பரம்பரையாய் வருதல். வழிவருகின்ற வடியரோர்க்கருளி (திவ். திருவாய். 9, 2, 2). 2. To be handed down from generation to generation; 3. To come of a good family; 4. To follow; to abide by; 5. To follow strictly the precepts of the šāstras; |
| வழிவிடு - தல் | vaḻi-viṭu- v. <>.id.+. tr. See வழியனுப்பு-. நேச வெகுமானங்கள் செய்தெழுதல் வழிவிடுதல் (திருவேங். சத. 58). - intr. . 1. To make or open a way; 2. To Stray from the right path; 3. To devise means; to find a way out, as from a difficult situation; 4. To remove obstacles; 5. To perform certain ceremonies when a person is at the point of death; |
| வழிவை - த்தல் | vaḻi-vai- v. intr. <>id.+. 1. To commence a journey; பயணந் தொடங்குதல். (யாழ். அக.) 2. To begin first; to set an example; 3. To plot one's ruin; |
