Word |
English & Tamil Meaning |
|---|---|
| வழிபோ - தல் | vaḻi-pō- v. tr. & intr. <> id.+. See வழிப்போ-. வழிபோன வருத்தத்தை (பொருந. 93). . |
| வழிபோவார் | vaḻipōvār n. <> வழிபோ-. Travellers; பிராயாணிகள். வழிபோவார் தம்மோடும் வந்து (தேவா. 916, 2). |
| வழிமடக்கு - தல் | vaḻi-maṭakku- v. tr. <> வழி+. See வழிமறி-. மாடுகளை வழிமடக்கினான். . |
| வழிமடக்கு | vaḻi-maṭakku n. <> id.+. (Rhet.) A figure of speech; அணிவகை. (பிங்.) |
| வழிமறி - த்தல் | vaḻi-maṟi- v. tr. <> id.+. To obstruct, hinder or prevent, as a person, from going; செல்வதைத் தடுத்தல். |
| வழிமார்க்கம் | vaḻi-mārkkam n. <> id.+. Good behaviour; civility; நல்லொழுக்கம். |
| வழிமுட்டு | vaḻi-muṭṭu n. <> id.+. Blind track or path; செல்லமுடியாத வழி. வழிமுட்டா யிருக்கும் இடங்களும் (குறிஞ்சிப். 258, உரை). |
| வழிமுட்டுதல் | vaḻi-muṭṭutal n. <> id.+ முட்டு-. Termination or extinction of a line of heirs; சந்ததி யற்றுப்போகை. Loc. |
| வழிமுதல் | vaḻi-mutal n. <> id.+. 1. Progenitor, original head of a family or dynasty; குலமுதல்வன். அனபாயன் றிருக்குலத்து வழிமுதலோர் (பெரியபு. புகழ்ச். 8). 2. See வழிபடுகடவுள். |
| வழிமுரண் | vaḻi-muraṇ n. <> id.+. (Pros.) Frequent occurrence of muraṇ-ṭoṭai in a stanza; ஒரு செய்யுளில் முரண்டொடை மிகுதியாகப் பயில்வது. (காரிகை, ஒழிபி. 6, உரை, பக். 157.) |
| வழிமுறை | vaḻi-muṟai <> id.+. n. 1. Descendant ; சந்ததி. வழிமுறை தீராவிடும்பைதரும் (குறள், 508). 2. Gradation, graduated scale; 3. Afterwards, subsequently; |
| வழிமுறைத்தாய் | vaḻimuṟai-t-tāy n. <> வழிமுறை+. Stepmother; தகப்பனுக்கு இரண்டாந்தாரமாகிய சிறியதாய். வழிமுறைத் தாயுழைப் புக்காற்கு (கலித். 82). |
| வழிமுறைத்தாரம் | vaḻimuṟai-t-tāram n. <> id.+ தாரம்4. Second wife; wife married after the death of the pervious wife; முதல்மணத்துகுப்பின் மணந்துகொண்ட தாரம். தன் காதலியை இழந்தபின் வழிமுறைத்தாரம் வேண்டின் (தொல். பொ. 79, உரை, பக்.186). |
| வழிமொழி - தல் | vaḻi-moḻi- v. tr. <> வழி+. 1. To praise; வழிபாடுகூறுதல். வலியரென வழிமொழியலன் (புறநா. 239, 7). 2. To reiterate, as a statement already made; |
| வழிமொழி | vaḻi-moḻi n. <> வழிமொழி-. A kind of rhythmic verse; ஒருவகைச் சந்தப்பாட்டு. தமிழ் விரகன் வழிமொழிகள் (தேவா. 149, 12). |
| வழிமோனை | vaḻi-mōṉai n. <> வழி + மோனை1. Frequent occurrence of mōṉai-t-toṭai. See அனுமோனை. (தொல். சொல். 406, உரை.) |
| வழியசை | vaḻi-y-acai n. <>id.+. A member of kali verse; கலிப்பாவில் வரும் ஓர் உறுப்பு. (கலித். 90, உரை.) |
| வழியட்டு - தல் | vaḻi-y-aṭṭu- v. tr. <> வழி2-+. To cause to overflow or overspread; வழியவிடுதல். நெருப்பை வழியட்டினாற்போல் (ஈடு, 4, 6, 2). |
| வழியடியார் | vaḻi-y-aṭiyār n. <>வழி+. Hereditary worshippers or devotees; பரம்பரைத் தொண்டர். வழியடியோம் வாழ்ந்தோங்காண் (திருவாச. 7, 11). |
| வழியடை - த்தல் | vaḻi-y-aṭai- v. tr. <>id.+. 1. To obstruct the way; செல்ல வொட்டாது வழித்தடை செய்தல். வாழ்நாள் வழியடைக்குங்கல் (குறள், 38). 2. To raise obstacles in the way of; to impede; |
| வழியடை 1 | vaḻi-y-aṭai n. <> வழியடை-. Obstruction, obstacle, hindrance; இடையூறு. அறந்தெரி திகிரிக்கு வழியடை யாகும் (பதிற்றுப். 22, 4). |
| வழியடை 2 | vaḻi-y-aṭai n. <> வழி +அடு1-. Presumptive heir; தாயத்தின் பின்னுரிமை யுடையான். தாயத்து வழியடையாகிய இளங்கோ நம்பியும் (பெருங். உஞ்சைக். 37, 222). |
| வழியம்பலம் | vaḻi-y-ampalam n. <> id.+. Wayside inn; சாலையில் தங்குவதற்குரிய சத்திரம். Nā |
| வழியல் 1 | vaḻiyal n. <>வழி2-. That which overflows or drains off; வழிந்தோடுவது (யாழ். அக.) |
| வழியல் 2 | vaḻiyal n. <>வழி4-. That which is gathered together by wiping, scraping, etc.; வழித்தெடுக்கப்பட்டது. (யாழ். அக.) |
