Word |
English & Tamil Meaning |
---|---|
குமணன் | kumaṇaṉ, n. An ancient chief, who was so liberal as to give away his sword to a needy poet for cutting his head off and taking it over to his brother who had set a price on it; தன்தலையை வெட்டி அதனை விரும்பிய தம்பிகையிற் கொடுத்து வேண்டியபொருளைப் பெறுமாறு தன்னிடம் இரந்த புலவனுக்குத் தன் வாளையீந்த ஒரு பெருவள்ளல். (புறநா. 164.) |
குமதி | kumati, n. <>ku-mati. A perverse intellect, evil minded person; அறிவுகேடன். குமதியாயினும் . . . பேர்சுமதி யென்பரல் (சேதுபு. கவி சம்பு. 18). |
குமர் | kumar, n. <>kumārī. 1. Virginity; கன்னிமை. குமரிருக்குஞ் சசிபோல்வாள் (குற்றா. தல. தருமசாமி. 47). 2. Virgin; grown-up-unmarried girl; 3. Impergnability, unsullied condition; |
குமரகச்சாணம் | kumara-kaccāṇam, n. cf. kumara-gadiyāṇaka. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. iii, 115). |
குமரகண்டம் | kumara-kaṇṭam, n. Epileptic fits attended with violent convulsions; ஒருவகை வலிப்பு. குமரகண்ட வலிப்புவருஞ் சிலநேரம் (தனிப்பா. i, 264, 2). |
குமரகண்டன் | kumara-kaṇṭaṉ, n. See குமரகண்டம். குமரகண்டன் முதலியன விடும்பியினைப் பெருக்கும் (சேதுபு துராசார. 35). . |
குமரகம் | kumarakam, n. <>kumāraka. Garlic pear. See மாவிலிங்கை. (மலை.) |
குமரகுருபரர் | kumara-kuru-parā, n. <>kumāra+guru+para. The author of Nīti-neṟi-viḷakkam and other poems 17th c.; நீதிநெறி விளக்கம் முதலிய பிரபந்தங்களியற்றிவாரும் பதினேழாம் நூற்றாண்டில் விளங்கியவருமான ஆசிரியர். |
குமரகோட்டம் | kumara-kōṭṭam, n. <>id. +. A shrine in Conjeevaram sacred to Skanda; கச்சியிலுள்ள முருக்கடாவுள் கோயில். குமரகோட்டமவா ழாறுமாமுகப்பிரான் (கந்தபு. கடவுள். 18). |
குமரதண்டம் | kumara-taṇṭam, n. <>id. +. Army of gods under skanda's command; குமரக்கடவுளைக் சேனாபதியாகக்கொண்ட தேவர்படை. குமரக் தண்டம் புகுந்தீண்டிய வெள்ளம் (திவ். திருப்பள்ளி. 6). |
குமரப்பாரை | kumarappārai, n. Horse mackerel, glossy green, attaining 5 ft. in length, Caranx rottleri; பெரிய கடல்மீன்வகை. (M. M. 668.) |
குமரம் 1 | kumaram, n. perh. kumāra. Hornless animal; கொம்பில்லாத விலங்கு. (சூடா) |
குமரம் 2 | kumaram, n. <>குமரன். A fictitious work on Tamil grammar believed to have perished; பூர்வத்திலிருந்ததாகச் சிலர் கருகின்ற ஓர் தமிழ் இலக்கண நுல். |
குமரமூக்கன் | kumara-mūkkaṉ, n. Krait. See கொம்பேரிமூக்கன். |
குமரவேள் | kumaravēḷ, n. <>Ku-māra+. Skanda; முருகக்கடவுள். வலவனை . . . குமரவேள் முன்னருய்த்தான் (கந்தபு. ஏமகூட. 6) |
குமரன் | kumaraṉ, n. <>ku-māra. 1. Young man, youth; இளைஞன். இருந்த குலக்குமரர்தமை . . . பருக நோக்கி (கம்பரா. மிதிலைக். 157). 2. Son; 3. Skanda, as son of šiva; 4. Bhairava; |
குமரி 1 | kumari, n. <>kumārī. 1. Virgin, maid; கன்னி. குமரிமணஞ் செய்துகொண்டு (திவ். பெரியாழ். 3, 8, 3). 2. Grown-up unmarried girl; 3. Daughter; 4. Durgā; 5. A river. See 6. Cape Comorin; 7. Sacred waters at Cape Comorin; 8. Perpetual youthhood; uncorrupt, unspoilt condition; 9. Aloe; |
குமரி 2 | kumari, n. Cultivation in hills; மலைநிலத்துச் செய்யும் விவசாயம். |
குமரிக்கடல் | kumari-k-kaṭal, n. <>குமரி1+. Sea near Kumari; குமரியருகிலுள்ள கடல். (சிலப். 8, 1, உரை.) |
குமரிக்கோடு | kumari-k-ikōṭu, n. <>id. +. A mountain or banks of a river said to have existed near Kumari; குமரிக்கடற்க்பக்கத்திருந்த ஒரு மலை. குமரிக் கொடுங் கொடுங்கடல் கொள்ள (சிலப். 11, 20). |
குமரிகண்டம் | kumari-kiṇṭam, n. <>id. +. India, one of nava-kanṭam, q.v. as bearing the name of Kumari, Bharata's daughter; பரதசக்சரவர்த்தியால் தன்பெண்ணான குமரியின் பெயரிடப்பெற்றதும் பாரதவருடத்தின் ஒரு பகுதியும் ஆகிய பூபாகம். மெய்ந்நெறி சேர்வது குமரிகண்டம் (கந்தபு. அண்டகோ. 47). |
குமரிச்சுறா | kumari-c-cuṟā, n. Zebra shark, tawny, attaining 15ft. in length, Stegostoma tigrinum; அடி நீளமுள்ள குரங்கன்சுறாமீன். (M. M. 851.) |
குமரிச்சேர்ப்பன் | kumri-c-cērppaṉ, n. <>குமரி+. The Pāṇdya king, as lord of Cape Comorin; குமரித்துறைக்குரிய பாண்டியண். (திவா.) |