Word |
English & Tamil Meaning |
---|---|
குமிழ்க்கட்டை | kumiḻ-k-kaṭṭai, n. <>குமிழ்+. Knobbed or studded wooden sandals; பாதக்குறடு. |
குமிழ்க்கொடி | kumiḻ-k-koṭi, n. <>id. +. Small cashmere tree. See நிலக்குமிழ். |
குமிழ்குமிழ் - த்தல் | kumiḻ-kumiḻ-, v. tr. <>id. +. To hide from others, hush; பிறர்க்குத் தோன்றாமல் மறைத்தல். கோட்டமின் முற்றங் குமிழ் குமிழ்த்துரைப்ப (பெருங். உஞ்சைக். 34, 184). |
குமிழ்ப்பிடி | kumiḻ-p-piṭi, n. <>id. +. Rounded handle, knob; கதவுமுதலியவற்றில் தைத்த குமிழ்க்கைப்பிடி. Colloq. |
குமிழ்ப்பு | kumiḻppu, n. <>குமிழ்-. 1. Bubling up; குமிழெழுகை. 2. Hairs standing on end, horripilation; 3. Winnowing; |
குமிழ்ரோகம் | kumiḻ-rōkam, n. <>குமிழ்+. Tubercle in the conrnea of the eye; குமிழ்போற்படலத்தைப் புடைப்பிக்குங் கண்ணோய் (சீவரட். 270.) |
குமிழ்வண்டு | kumiḻ-vaṇṭu, n. <>id. +. Carpenter bee, Xylocopa tenisocapa; வண்டு வகை. (W.) |
குமிழஞ்சுளுந்து | kumiḻa-cuḷuntu, n. <>id. +. See குமிழஞ்சூழ். Colloq. . |
குமிழஞ்சூழ் | kumiḻa-cūḻ, n. <>id. +. Torches made of kumiḻ sticks; குமிழங்கழியில் ஏற்றும் தீப்பந்தம். (சங். அக.) |
குமிழாணி | kumiḻ-āṇi, n. <>id. +. 1. Studnail; தலையிற் குமிழ்கொண்ட ஆணி. (C. E. M.) See குமிழ்ப்பிடி. (w.) |
குமிழி | kumiḻi, n. <>குமிழ்-. 1. Bubble; நீர்முதலியவற்றிலெழுங் குமிழி. குமிழிவிட் டுமிழ் குருதி (சீவக. 2239). 2. Boss; knob, as of wooden sandals; 3. Spring, as the source of a streams; |
குமிழி - த்தல் | kumiḻi-, 11 v. intr. <>குமிழி. To bubble; to rise in bubbles, in pustules; குமிழிகொள்ளுதல். (W.) |
குமிழிநீருண்ணு - தல் | kumiḻi-nīr-uṇṇu-, v. intr. <>id. +. Lit, to dive deep causing bubbles. To dive deep into a subject; ஒரு விஷயத்தில் கருத்து மூழ்கிநிற்றல். கிடாம்பியாச்சானோடு அல்லாதாரோடு வாசியறாக் குமிழ்நீருண்டது (ஈடு, 10, 6, 1). |
குமிறு - தல் | kumiṟu-, 5. v. intr. <>குமுறு-. To resound, roar; ஒலித்தல். (சூடா.) |
குமின்குமினெனல் | kumiṉ-kumiṉ-eṉal, n. Onom. expr. signifying tinkling sound, as of anklets; சிலம்புமுதலிய அணிகலன்களின் ஒலிக்குறிப்பு. மின்னனார் குமின் குமின் னலங்காரம்பெறநடஞ்செய் (கம்பரந். 6). |
குமுக்கு 1 | kumukku, n. 1. Whole, total, lump, gross, wholesale; மொத்தம். பண்டங்களை யெல்லாம் குமுக்காய் வாங்கினான். (W.) 2. Lion's share; large number; considerable quantity; 3. Band, clan, crowd, party; |
குமுக்கு 2 | kumukku, n. Aid, help assistance; உதவி. குமுக்குப்பண்ண. (W.) |
குமுக்கு 3 | kumukku, n. Secrecy. See கமுக்கம். |
குமுக்கு - தல் | kumukku-, n. 5. v. tr. Caus. of குமுங்கு-. 1. [T. gumuku.] To beat with fists, pommel; ஊமைக்காயம்படக் கையாற் குத்தல். 2. To wash cloth by wetting and gently pressing it with hands; |
குமுகுமு - த்தல் | kumu-kumu-, 11. v. intr. cf. கமகம-. To spread frangrance, to send whiffs of odour; மணம் மிகவீசுதல். பசுமஞ்சள் குமுகுமுக்க (அழகர்கல. 10). |
குமுகுமெனல் | kumu-kumeṉal, n. 1. Onom. expr. signifying uproar; பேரொலிக்குறிப்பு. குடமுழ வாண னீரயிரங் கரங்கொண்டு குமு குமெனவே முழக்க (திருப்போ. சந். பிள்ளைத். சிறுபறை. 2). 2. Expr. signifying sending out whiffs of odour; |
குமுங்கு - தல் | kumuṅku-, 5. v. intr. 1. To mash; மசிதல். உரலிற் குமுங்க விடித்து (தைலவ. தைல. 49). 2. To sink, as a building; |
குமுசியார் | kumuciyār, n. <>Fr. commissaire. French commissioner of police; பிரஞ்சி இலாகா போல¦சுத்தலைவர். Pond. |
குமுதகம் | kumutakam, n. cf. குமுதம்1. (Arch.) A kind of moulding; கட்டடத்தின் எழுதக வகை. (W.) |
குமுதச்சிலந்தி | kumuta-c-cilanti, n. kumuda +. A kind of ulcer; கொப்புளமாகாமல் சீவடியும் புண்வகை. (சீவரட். 352.) |
குமுதசகாயன் | kumuta-cakāyaṉ, n. <>id. +. See குமுதநாதன். (பிங்.) . |
குமுதநண்பன் | kumuta-naṇpaṉ, n. <>id. +. See குமுதநாதன். (சூடா.) . |
குமுதநாதன் | kumuta-nātaṉ, n. <>id. +. Lit., lord of the water lily moon; [அல்லிப்பூவுக்கு நாதன்.] சந்திரன். காமக்கருத்தாக் குமுதநாதன் கங்குல்வரக்கண்டும் (தனிப்பா. 1, 334, 40). |