Word |
English & Tamil Meaning |
---|---|
குமைதின்(னு) - தல் | kumai-tiṉ-, v. intr. <>குமை+. To suffer thrashing; அடியுண்ணுதல். கானகம்போய்க் குமை தின்பர்கள் (திவ். திருவாய். 4, 1, 2). |
குய் | kuy, n. prob. onom. 1. Seasoning with spices; தாளிப்பு. கமழ்குய் யடிசில் (புறநா. 10). 2. Spicy, seasoned curry; 3. Burnt odors, incense, odorous smoke; 4. Frankincense; |
குய்மனத்தாளர் | kuy-maṉattāḷā, n. <>guhya +. Deceitful persons; வஞ்சகர். குய்மனத்தாளர் குறைப்பிணங் காட்டி (பெருங். இலாவண. 19, 57). |
குய்யகர் | kuyyakar, n. <>guhaka. A class of demigods in the service of kubera to whose custody his treasures are committed; குபேரன் நிதியைக் காவல்புரியும் தேவகணத்தார். |
குய்யதராட்டகபுவனம் | kuyyatarāṭṭaka-puvaṉam, n. <>guhya-tara +. (šaiva.) The world situate in the aerial regions of pratiṭṭā-kalai, being eight in number, viz., கயை, குருக்கேத்திரம், நாகலம், நகலம், விமலம், அட்டகாசம், மகேந்திரம், பீமேசம் பிரதிட்டாகலையின்பகுதியாய் வாயு வண்டத்திலுள்ள புவனம். (சி. போ. பா. 2, 3, 214). |
குய்யபீசகம் | kuyya-pīcakam, n. perh. guhya + bījaka. Strychnine nut. See எட்டி. (மலை.) |
குய்யம் | kuyyam, n. <>guhya. 1. That which is secret, mystical, hidde, private; மறைவானது. (சூடா.) 2. Generative organ especially of women; 3. Anus; 4. Dissimulation, deceitfulness, hypocrisy; |
குய்யரோகம் | kuyya-rōkam, n. <>id. +. Veneral disease peculiar to women, as chancre; பெண்குறியில் வரும் ரோகம். (சீவரட். 313). |
குய்யோமுறையோவெனல் | kuyyō-mu-ṟaiyō-v-eṉal, n. Onom. expr. signifying loud complaint; கூச்சலோடு முறையிடுதற் குறிப்பு. |
குயக்கலம் | kuya-k-kalam, n. 1. See குசக்கலம். . 2. A treatise; |
குயக்காலம் | kuyakkālam, n. A small shrub. See நிலக்கடம்பு. (மலை.) |
குயக்குண்டு | kuya-k-kuṇṭu, n. <>குயம்1+குண்டு2 Pit, wherefrom clay is taken by potters to make pots; குயவர் மண்ணெடுக்குங் குழி. Colloq. |
குயத்தி | kuyatti, n. <>குயம்1. Female potter; குசத்தி. சக்கரந்தான் சுழற்றத்தகுங் குயத்தி (சிவப். பிரபந். பிக்ஷாடன. 6). |
குயத்தினலகை | kuyattiṉalakai, n. Tinnevelly senna. See நிலவாகை. (மலை.) |
குயம் 1 | kuyam, n. perh. கொய்-. 1. Sickle, reaping-hook, curved knife; அரிவாள். கொடுவாய்க் குயத்து (சிலப். 16, 30). 2. Razor; 3. Potter caste; |
குயம் 2 | kuyam, n. prob. குழ. Juvenility, youth; இளமை. (திவா.) |
குயம் 3 | kuyam, n. <>kuca. woman's breast; மலை. குச்சிலியமாதர் குயமும் (தனிப்பா. 11, 75, 190). |
குயம் 4 | kuyam, n. <>kuša. Darbha grass. See தருப்பை. |
குயமயக்கு | kuya-mayakku, n. <>குயம்1+. Disorder, lack of method; தாறுமாறு. (W.) |
குயலன் | kuyalaṉ, n. <>kušala. Man of great skill, dexterity; தேர்ந்தவன். வஞ்சக் குயலர்க்கென்றுங் கரவனாம் (தேவா. 406, 4). |
குயவரி | kuya-vari, n. <>குயம்1+. Tiger, as having sickle-shaped stripes; [அரிவாள்போன்ற வரிகளுடையது.] புலி வேழங் குயவரி கோட்பிழைத்து (திணைமாலை. 25). |
குயவன் 1 | kuyavaṉ, n. <>id. [M. kuyavaṉ.] Potter; குசவன். திருநீலகண்டத்துக் குயவனார்க் கடியேன் (தேவா. 736, 1). |
குயவன் 2 | kuyavaṉ, n. <>guhya. God, the Invisible; மறைபொருளாவன். யானோர் குயவன் (சிவப். பிரபந். பிக்ஷாடன. 6). |
குயவன்மணை | kuyavaṉ-maṇai, n. <>குயவன்1+. Foot of potter's wheel; குயவனது சக்கரத்தின் அடிக்கட்டை. |
குயவு | kuyavu, n. prob. உயவு. Car, chariot; தேர். (பிங்.) |
குயா | kuyā, n. False tragacanth. See கோங்கு. (பிங்.) |
குயில்(லு) 1 - தல் | kuyil-, 3. v. tr. perh. kūj. 1. To utter, tell; சொல்லுதல். பொய் குயிலினுஞ்சோம்பினும் (சிலப். பிரபந். நிரந்ச. 18). 2. To call, whoop, halloo; |
குயில்(லு) 2 - தல் | kuyil-, 3. v. tr. [1-4, cf. kuc.] 1. To make, execute, shape, construct; செய்தல் (பிங்.) 2. To weave; 3. To palit, braid, intwine; 4. cf kuth. To bore, perforate, tunnel; 5. cf. kuṭh. To enchase, set, as preciousl stones; 1. To take place; 2. To be thick, close, crowded; 3. To sound, play; |