Word |
English & Tamil Meaning |
---|---|
அமங்கலம் | amaṅkalam n. <>a-maṅgala. Inauspicious occurrence, as death; அசுபம். (காஞ்சிப்பு. அனேகத. 8.) |
அமங்கலி | amaṅkali n. <>id. Widow, as without the tāli, opp. to சுமங்கலி; விதவை. (பிங்.) |
அமங்கலை | amaṅkalai n. See அமங்கலி. (சூடா.) |
அமஞ்சி | amaci n. [T. amiji.] 1. Forced labour, unpaid labour; கூலியில்லாமற் செய்விக்கும் வேலை. 2. That which is useless; |
அமஞ்சியாள் | amaci-y-āḷ n. <>id.+. Workman pressed into service without wages; கூலியில்லாமல் வேலைசெய்பவன். |
அமட்டு 1 - தல் | amaṭṭu- 5 v.intr.; v.tr. To wobble, to be unsteady, as bench on uneven legs; 1. To inveigle, entrap, ensnare; புரளுதல். (W.) சிக்கவைத்தல். (W.) 2. To hector, bully, intimidate; 3. To overcome, as sleep; |
அமட்டு 2 | amaṭṭu n. <>அமட்டு-. 1. Threat, menace; பயமுறுத்துகை. 2. Wiles, tricks; |
அமடு | amaṭu n.cf. <>அமட்டு-. Being inveigled, entrapped; சிக்குகை. (திருப்பு. 385.) |
அமண் | amaṇ n. <>šramaṇa. 1. Jainism; சமணமதம். வல்லமணாசற (தேவா. 861, 11). 2. Jainas, as a sect; 3. Nakedness, nudity; 4. A masquerade dance; |
அமண்டம் | amaṇṭam n. <>amaṇda. Castor-plant. See ஆமணக்கு. (மலை.) |
அமணக்கூத்து | amaṇa-k-kūttu n. <>šramaṇa+. 1. Wanton, naked dance; நாணமின்றி நிர்வாணமா யாடுங்கூத்து. 2. Disorderly, uncontrolled conduct; |
அமணம் 1 | amaṇam n. <>šramaṇa. 1. Jainism; சமணமதம். 2. Nakedness, nudity, as the characteristic of Jaina ascetics; |
அமணம் 2 | amaṇam n. [M.avaṇam.] 20,000 areca nuts; இருபதினாயிரங் கொட்டைப் பாக்கு. பதினாயிரங் கொட்டைப் பாக்கா யிருந்தனள் பைந் தொடியே (தனிப்பா. ii, 23). அரை யமணம், 'nudity,' is suggested. |
அமணர் | amaṇar n. <>šramaṇa. Jains; சமணர். (பெரியபு. திருஞான. 704.) |
அமணன்பாழி | amaṇaṉ-pāḻi n. <>id.+. Jain temple; சைனாலயம். அமணன் பாழியிற் சிம்மதத்தைக் காட்டி (ஈடு, 4, 6, 6) |
அமணானைப்படு - தல் | amaṇ-āṉai-p-paṭu- v.intr. <>id.+. To burn with lust; காமவிகாரமடைதல். களிறு...அமணானைப்பட்டுத் திரியுமா போலே (திவ். இயற். திருவிருத். 15, வ்யா.) |
அமத்தல் | amattal n. Dial. var. of அமர்த்தல். . |
அமந்தலம் | amantalam n. Orbicular-leaved caper shrub. See செங்கத்தாரி. (மூ.அ.) |
அமந்தி | amanti n. <>Fr. amande. Indian almond. See நாட்டுவாதுமை. (மூ. அ.) |
அமயம் | amayam n. <>samaya. Opportunity, right time; சமயம். (கந்தபு. திருக்கல். 72.) |
அமர் 1 - தல் | amar- 4 v.intr. 1. To abide, remain, be seated; இருத்தல். (கந்தபு. கடவு. 12.) 2. To become still or tranquil; 3. To rest, repose; 4. To settle, be deposited, as a sediment, become close and hard, as sand by rain; 5. To rest upon, as a javelin on the person; 6. To flourish, to be abundant; 7. To be extinguished, as a lamp; 8. To be suitable; 9. To be engaged, settled, as a house; 10. To become established, as in a work; 1. To wish, desire; 2. To resemble; 3. To do, perform; 4. To get close to; |
அமர் 2 | amar n. <>அமர்-. 1. Desire, wish; விருப்பம். (அகநா. 23.) 2. Wall around a fort; |
அமர் 3 | amar n. <>samara. 1. War, battle; யுத்தம். (சூடா.) 2. Field of battle; 3. Rage, fury, crisis, as of a disease, violence or paroxysm, as of fever; |
அமர் 4 - த்தல் | amar- 11 v.intr. <>id. To be at strife; மாறுபடுதல். பேதைக் கமர்த்தன கண் (குறள், 1084). |
அமர்க்களம் | amar-k-kaḷam n. <>id.+. 1. Field of battle; போர்க்களம். (இரகு. திக்கு.172.) 2. Confused noise, stir, bustle, as at a marriage feast; |