Word |
English & Tamil Meaning |
---|---|
குரங்குப்புத்தி | kuraṅku-p-putti, n. <>id. +. Roving tendency, unsteadiness; நிலையற்ற புத்தி. |
குரங்குமச்சு | kuraṅku-maccu, n. <>id. +. Loft under the thatched roof of a house; கூரையின்கீழ் அமைக்கும் மச்சு. Loc. |
குரங்குமஞ்சணாறி | kuraṅku-macaṇāṟi, n. <>id. +. Kamela, s.tr., Mallotus philippinensis; ஒருவகைச் சிறுமரம். (L.) |
குரங்குமார்க்கம் | kuraṅku-mārkkam, n. <>id. +. A particular pace of the horse; குதிரை நடையுள் ஒன்றான வானரகதி. கூறரு மல்லமார்க்க மயின்மார்க்கங் குரங்குமார்க்கம் (திருவாலவா. 28, 58). |
குரங்குமூஞ்சி | kuraṅku-mūci, n. <>id. +. 1. monkey face, ugly face; விகாரமான முகம். 2. See குரங்குமஞ்சணாறி. (L.) |
குரங்குமூஞ்சிக்காய் | kuraṅku-mūci-k-kāy, n. <>id. +. Red cheeked mango fruit; முகப்பிற்சிவந்த மாங்காய். Loc. |
குரங்குவலி | kuraṅku-vali, n. <>id. +. See குரக்குவலி. (W.) . |
குரச்சை | kuraccai, n. <>khura. See குரசு. (பிங்.) . |
குரசு | kuracu, n. <>id. [T. gorijja.] Horse's hoof; குதிரைக்குளம்பு. (பிங்.) |
குரண்டகம் | kuraṇṭakam, n. <>kuraṇṭaka. 1. Henna. See மருதோன்றி. (W.) 2. A species of conehead. See |
குரண்டம் 1 | kuraṇṭam, n. <>kuraṇṭa. See குரண்டகம், 1. (L.) . |
குரண்டம் 2 | kuraṇṭam, n. perh. kāraṇdava. Indian crane, Ardea sibirica; கொக்குவகை. (திவா.) |
குரத்தம் | kurattam, n. cf. kuraṭha. Noise, clamour, uproar; ஆரவாரம். (சது.) |
குரத்தி | kuratti, n. <>guru. Fem. of குரவன். 1. Wife of a preceptor or priest; குருபத்தினி. குரத்தியை நினைத்த நெஞ்சை (திருவிளை. அங்கம்.19). 2. Preceptress, priestess; 3. Mistress, lady of the house; |
குரதாரம் | kuratāram, n. A hell one of eight makā-narakam, q.v.; மகாநரகங்கள் எட்டனுள் ஒன்று. (சி. போ. பா. 2, 3.) |
குரப்பம் | kurappam, n. [T. korapamu, K. korapa, M. kurappa.] Currycomb; குதிரை தேய்க்குங் கருவி. (W.) |
குரம் 1 | kuram, n. (மலை.) 1. cf. kṣura-patra. Darbha grass. See தருப்பை. 2. Balsam pear. See |
குரம் 2 | kuram, n. <>khura. 1. Horse's hoof; குதிரைக்குளம்பு. குரந்தரு விசையினீர் மொண்டு (இரகு. இரகுவுற். 56). 2. Cow; |
குரம்பு | kurampu, n. 1. Artificial bank, dam, causeway, bund; அணைக்கட்டு. 23. Dam of sand, brushwood, loose stones, etc., running out from the banks of a river diagonally for a distance upstream, to turn the water into an irrigation channel; 3. Ridge in a rice field or garden; 4. Boundary, limit; |
குரம்பை | kurampai, n. 1. Small hut, hovel, shead; சிறுகுடில். இலைவேய் குரம்பை (மதுரைக். 310). 2. [M. kurambu.] Bird's nest; 3. Body; 4. Granary, storehouse for grain; |
குரமடம் | kuramaṭam, n. prob. rāmaṭha. Asafoetida. See பெருங்காயம். (W.) |
குரல் 1 | kural, n. 1. [Tu. koralu.] Cornear, spike; கதிர். வரகி னிருங்குரல் (மதுரைக். 272). 2. Flower-cluster; 3. Link, tie, band; 4. Stalk, sheath of millet or plantain; 5. [T. korra, K. koraḷe.] Italian millet; 6. See பாதிரி. (மலை.) |
குரல் 2 | kural, n. cf. kurala. 1. Woman's hair; பெண்டிர் தலைமயிர். (பிங்.) நல்லார் குரனாற்றம் (கலித். 88). 2. One of the five modes in whicha woman dresses her hair; 3. Feather, plumage; |
குரல் 3 | kural, n. cf. kura. 1. [T. kuṟṟu, K. koral, M. kuṟal.] Voice; பேச்சொலி. சேவல் மயிற்பெடைக்குப் பேசும் சிறுகுரல்கேட்டு (நலவெண். சுயம்வ. 41). 2. Word; 3. Tone in singing; 4. (Mus.) First note of the Indian gamut; 5. Throat, windpipe; 6. Sound; 7. String of jingling bells. See |