Word |
English & Tamil Meaning |
---|---|
குராதர் | kurātar, n. One of the eight ruling chief of kuNatattuvam; குணதத்துவ அதிபர் எண்மரில் ஒருவர். (சி. சி. 8, 2, மறைஞா.) |
குரால் | kurāl, n. 1. Dim, tawny colour; புகர்நிறம். (திவா.) 2. Cow; 3. A kind of owl; |
குராற்பசு | kurāṟ-pacu, n. <>குரால்+. Tawny cow; கபிலைநிறப்பசு. குராற்பசுவைக் கொன்றான் பாவத்தை (S.I.I. iii, 121). |
குரிகிற்றாளி | kurikiṟṟāḷi, n. prob. குருகு+ A kind of root; ஒருவகைக் கிழங்கு. (W.) |
குரிச்சி | kuricci, n. <>U. kursī. Chair; நாற்காலி. |
குரிசில் | kuricil, n. perh. guru. 1. Person of digniry, illustrious person; பெருமையிற்சிறந்தோன். (திவா.) 2. Philanthropist, benefactor; 3. Lord, chief; |
குரிசு | kuricu, n. <>Span. cruz. See குருசு. Chr. . |
குரிந்தை | kurintai, n. prob. kunda. Common delight of the woods. See குருக்கத்தி. (மலை.) |
குரிவியாலன் | kurivi-y-ālaṉ, n. <>குருவி+ஆல். A common avenue-fig having stout airroots, m.tr., Ficus; ஆலமரவகை. (B. 91.) |
குரீஇ | kurīi, n. <>குருவி. 1. Small bird; குருவி. குன்றத் திறுத்த குரீஇயினம் (புறநா. 19). 2. Bird; |
குரீஇப்பூளை | kurīi-p-pūḷai, n. <>குரீஇ+. Woolly caper. See சிறுபூளை. குரீஇப்பூளை குறு நறுங்கண்ணி (குறிஞ்சிப். 72). |
குரு 1 - த்தல் | kuru-, 11. v. intr. cf. உரு4-. 1. To appear; தோன்றுதல். அதினின்று மொருபுருடன் குருத்தான் (விநாயகபு. 72, 4). To break out, as prickly heat; |
குரு 2 - த்தல் | kuru-, 11. v. intr. prob. krudh. To be indignant, enraged; கோபங்கொள்ளுதல். (W.) |
குரு 3 | kuru, n. <>குரு1-. [1 to 3 T. kurupu, K. M. kuru.] 1. Pustule, blister, any eruptive disease, as small-pox, measles; வசூரிமுதலிய கொப்புளங்காணும் நோய். வெப்புநோயுங் குருவுந்தொடர (சிலப். உரைபெறுகட்டுரை). 2. Boil, sore; 3. Prickly heat; 4. Horripilation; 5. Nut; |
குரு 4 | kuru, n. cf. ghr. 1. Brilliancy, lustre, effulgence; ஒளி. குருமணித தாலி (தொல். சொல். 303, உரை). 2. A flaw in pearls; 3. Blue vitriol; 4. (Alch.) Philospher's powder, a compound of various metals; 5. Mercury; 6. A mineral poison; |
குரு 5 | kuru, n. <>guru. 1. Spiritual preceptor; ஞானாசாரியன். பீதகவாடைப் ரி£னார் பிரமகுருவாகி வந்து (திவ். பெரியாழ். 5, 2, 8). 2. Teacher; 3. Family priest; 3. Father; 5. King; 6. The planet Jupiter, as the priest of the gods; 7. The 8th nakṣatra; 8. Heaviness, weight; 9. Largeness; 10. Eminence, excellence, exaltedness; 11. (Gram.) Long vowel; 12. (Pros.) A syllabic instant; 13. (Mus.) Quantity of a long note; 14. (Mus.) A variety of aṇkam, q.v.; which consists of eight akṣarakālam; |
குரு 6 | kuru, n. <>kuru. 1. A prince of the lunar race after whom his family was called kuru-kulam; குருகுலத் தலைவன். குருவுமக் குலத்திலங்குரித்தான் (பாரத. குருகுல. 31). 2. A certain continent. See 3. The country of the Kurus, one of 56 tēcam, q.v.; |
குருக்கண் | kuru-k-kaṇ, n. prob. குரு1-+. Woman;s breast; ஸ்தனம். (திவா.) |
குருக்கத்தி | kurukkatti, n. Common delight of the woods, m.cl., Hiptage madablota; மாதவிக்கொடி. குடந்தைக் கிடந்த கோவே குருக்கத்திப்பூச் சூட்டவாராய் (திவ். பெரியாழ். 2, 7, 7). |
குருக்கள் 1 | kurukkaḷ, n. <>guru. 1. Priests; ஆசாரியர். (சீவக. கடவுள்வா. 1, உரை.) 2. Officiating Brahman priests in šiva temples; 3. šaiva Vēḷāḷa priests who minister to Non-Brahmans; |