Word |
English & Tamil Meaning |
---|---|
குருதிப்புனல் | kuruti-p-puṉal, n. <>id. +. [M. kurutippuṉal.] Blood; உதிரநீர். விழுந்து கொழுங்குரு திருப்புனலென்று (கலிங். புதுப். 156). |
குருதியூட்டு - தல் | kuruti-y-ūṭṭu-, v. intr. <>id.+. Lit., to feed with blood, to offer animal sacrifice; மிருகபலிகொடுத்தல். Loc. |
குருதிவாரம் | kuruti-vāram, n. <>id. +. Tuesday; செவ்வாய்க்கிழமை. புதியசீலை . . . குருதிவாரந்தனக்குக் கொந்சநாளிற் கிழியும் (அறப். சத. 61). |
குருது 1 | kurutu, n. <>குதிர். Receptacle for grain, granary; தானியக்குதிர். (W.) |
குருது 2 | kurutu, n. <>ghrta. Clarified butter, ghee; நெய். (மூ. அ.) |
குருந்தக்கல் | kurunta-k-kal, n. <>kuruvinda+ . 1. Corundum emery, adamantine spar; மாணிக்கவகையுள் ஒன்று. (W.) 2. See குருவிந்தக்கல், 3. |
குருந்தம் 1 | kuruntam, n. <>id. See குருந்தக்கல். . |
குருந்தம் 2 | kuruntam, n. prob. kunda. See குருந்து2. குருந்தமொன் றொசித்தானெடுஞ்சென்று (திவ். பெரியாழ். 4, 4, 7). . |
குருந்தம்பொடி | kuruntam-poṭi, n. <>குருந்தம்1+. Emery powder; குருந்தக்கற் பொடி. (W.) |
குருந்து 1 | kuruntu, n. <>குருத்து. (பிங்.) 1. White tender leaf; tender shoots; வெண்குருத்து. 2. Infant; |
குருந்து 2 | kuruntu, n. prob. kunda. 1. Wild lime, Atalantia; புனவெலுமிச்சை. (பிங்.) 2. A speicies of wild lime, s.tr., Atalantia racemosa; 3. A species of wild lime, s.tr., Atalantia missionis; 4. Common delight of the woods, m. cl., Hiptage madablota; |
குருந்து 3 | kuruntu, n. prob. kuruvinda. See குருந்தக்கல். (W.) . |
குருநகை | kuru-nakai, n. <>குரு1-+. cf. குறுநகை. Smile; புன்சிரிப்பு. குருநகையி னந்தி மகிழ்கொள்ள (தணிகைப்பு. நந்தியு. 7). |
குருநமச்சிவாயர் | kuru-namaccivāyā, n. <>guru +. A saint and poet, the author of Aṇṇāmalai-veṇpā, 16th c.; 16-ஆவது நூற்றாண்டில் வாழ்ந்தவரும் அண்ணாமலைவெண்பாவை இயற்றியவருமாகிய ஒருஞானி. |
குருநாடி | kuru-nāṭi, n. <>id. +. 1. A treatise dealing with the diagnosis of diseases by feeling the pulse; நாடிகொண்டு நோயியல்பு அறியும்வகையை யுணர்த்தும் ஒரு வைத்திய நூல். 2. A treatise on augury believed to be inspired by Brhaspati; |
குருநாடு | kuru-nāṭu, n. <>kuru +. The country of the Kurus; குருவமிசத்தார் ஆண்டதேசம். |
குருநாத்தகடு | kuru-nā-t-takaṭu, n. <>குறுமை+nāga+. Foliated tinsel; ஒளியுள்ள ஒரு வகை மெல்லிய வர்ணத்தகடு. |
குருநாதன் | kuru-nātaṉ, n. <>guru +. 1. Exalted guru, great master; பரமகுரு. 2. Skanda, as having once initiated His father šiva into the mystic explanation of Praṇavam; |
குருநாப்பட்டை | kuru-nā-p-paṭṭai, n. <>குறு-மை+nāga+. See குருநாத்தகடு. . |
குருநாள் | kuru-nāḷ, n. <>guru +. 1. Thursday as Jupiter's day; [தேவகுருவுக்குரியது.] வியாழக்கிழமை. 2. The 8th nakṣatra. See |
குருநிந்தை | kuru-nintai, n. <>id. +. Disrespect towards or speaking ill of, one's guru, one of See { aim-perum-pātakam, q.v.; ஐம்பெரும் பாதகங்களுளொன்றாகிய குருவைப் பழிக்கை. |
குருநிலம் | kuru-nilam, n. <>kuru +. Country of the Kurus; குருவமிசத்தராது நாடு. குருநிலத்திற் பாதியினிக் கொடாதிருந்தாள் (பாரத. கிருட்டிண. 7). |
குருநோய் | kuru-nōy, n. <>குரு3+. Eruptive disease, as small pox; வசூரி முதலிய கொப்புளங்காணும் நோய். (சிலப். உரைபெறு. 1.) |
குருப்பட்டம் | kuru-p-paṭṭam, n. <>guru +. Title of an ordained Christian minster; கிறிஸ்தவ குருவுக்குக் கொடுத்தற்குரிய பட்டம். Chr. |
குருப்பி - த்தல் | kuruppi-, 11. v. intr. <>குருப்பு. [M. kuruppu.] To break out, as pimples; பருவுண்டாதல். (W.) |
குருப்பிரசாதம் | kuru-p-piracātam, n. <>guru +. 1. Favour, grace blessing of the guru; குருவின் அருள். 2. Leavings of a guru's food; |
குருப்பு | kuruppu, n. <>குரு1-. [T. kurupu.] Pimple, pustule; பரு. (W.) |
குருப்பூச்சி | kuru-p-pūcci, n. <>குரு3+. A kind of spotted wasp; புள்ளியொடுகூடிய குளவிவகை. (W.) |
குருபத்தி | kuru-patti, n. <>guru +. Reverence towards guru; குருவினிடங்கொள்ளும் அன்பு. |