Word |
English & Tamil Meaning |
---|---|
குலகிரி | kula-kiri, n. <>id. +. Chief mountain ranges in jambō-dvipa. See அஷ்டகுல பர்வதம். (பிங்.) |
குலகுரு | kula-kuru, n. <>id. +. Family guru; வமிசகுரு. |
குலங்கூறு - தல் | kulaṅ-kūṟu-, v. <>id. +. 1. To boast of high birth; உயர்குடிப் பிறைப்பைப் பாராட்டுதல்.--tr. 2. To belittle, twit one, as of low parentage; |
குலங்கெட்டவன் | kulaṅ-keṭṭavaṉ, n. <>id. +. One who has disgraced his birth; சாதியொழுக்கந் தவறியவன். |
குலச்சிறைநாயனார் | kula-c-ciṟai-nāyaṉār, n. A canonized saiva saint, minister of Kūṉ Pāṇdya, and contemporary of Tiru-āṉa-campanta-mūrtti-nāyaṉār, one of 63; கூன் பாண்டியனது மந்திரியும் சம்பந்தமூர்த்தியின் காலத்தவரும் நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவருமாகிய அடியார். (பெரியபு.) |
குலச்சுமார் | kulaccu-mār, n. See குலச்சுமால். Loc. . |
குலச்சுமால் | kulaccu-māl, n. prob. T. kolucu + U. māl. Grain sold ont he threshing floor; களத்தில் விற்குந் தானியம். Loc. |
குலசன் | kulacaṉ, n. <>kula-ja. Man of respectable family; நற்குலத்தோன். |
குலசிரேஷ்டன் | kula-cirēṣṭaṉ, n. <>kula +. Illustrious son of a family; குடியிற் பிறந்த வருட் கீர்த்தி மிக்கவன். |
குலசுவேதகன் | kula-cuvētakaṉ, n. Pupl of the bitter snake gourd. See சவரிலோத்திரம். (W.) |
குலசேகரப்பெருமாள் | kula-cēkara-p-perumāḷ, n. <>kulā-šēkhara+. A canonized Vaiṣṇava saint, author of Perumāḷ-tiru-moḻi, a Chera king, one of 12 āḻvār, q.v.; சேரமன்னரும் பெருமாள் திருமொழி இயற்றியவரும் ஆழ்வார் பன்னிருவருள் ஒருவருமாகிய அடியார். |
குலசேகரன் | kula-cēkaraṉ, n. <>id. +. 1. Illustrious person of a family; குலசிரேஷ்டன். 2. See குலசேகரப்பெருமாள். சேரன் குலசேகரன் முடிவேந்தர் சிகாமணியே (திவ். பெருமாள். தனியன்). |
குலசேகரன்படி | kula-cēkaraṉ-paṭi, n. <>id. +. The stone step at the entrance to the sanctuary of a Viṣṇu Temple; விஷ்ணுகோயிலின் கர்ப்பகிருகவாயிற்படி. Vaiṣṇ. |
குலசேகராழ்வார் | kulacēkarāḻvār, n. <>id. +. See குலசேகரப்பெருமாள். . |
குலஞ்செப்பு - தல் | kula-ceppu-, v. intr. <>kula +. To boast of one's family or birth; தன்குலப்பெருமை கூறுதல். |
குலஞ்செய் - தல் | kula-cey-, v. intr. <>id. To found a family; குலத்தை ஸ்தாபித்தல். குலந்செய்த குமரர் (சீவக. 2915). |
குலட்டு | kulaṭṭu, n. prob. guluccha. cf. குலக்கு. Bunch, as of berries; குலை. (யாழ். அக.) |
குலடி | kulaṭi, n. A kind of red mineral poison; ஒருவகைச் செம்பாஷாணம். (யாழ். அக.) |
குலடை | kulaṭai, n. <>kulaṭā. Unchaste, fallen woman; கற்பொழுக்கங்கெட்டவள். (யாழ். அக.) |
குலத்தம் | kulattam, n. <>kuluttha. Horse gram. See கொள்ளு. (சூடா.) |
குலதருமம் | kula-tarumam, n. <>kula +. Time honoured custom observed by a family or caste; குலவொழுக்கம். |
குலதிலகன் | kula-tilakaṉ, n. ஈid. +. One who adorns a family; குலத்திற் சிறந்து விளங்குபவன் சிவசமய குலதிலக தாலேலோ (திருச்செந்பிள். தாலப். 9). |
குலதெய்வம் | kula-teyvam, n. <>id. +. See குலதேவதை. அவரெங்கள் குலதெய்வமே (திவ். பெரியதி. 2, 6, 4). . |
குலதேவதை | kula-tēvatai, n. <>id. +. Family deity; ஒரு குலத்தார் பரம்பரையாக வழிபட்டு வருங்கடவுள், நினையாந் தொழத்தக்க குலதேவதையாய் வழிபட்டு (சிவப். பிரபந். பிள். சிற்றிற். 6). |
குலந்தெரி - த்தல் | kulan-teri-, v. intr. <>id. +. To dwell on another's parentage, commonly in ridicule; குடிப்பழி தூற்றுதல். (W.) |
குலப்பகை | kula-p-pakai, n. <>id. + 1. Inhred malice or hatred, as between tribes, perpetuated from generation to generation; பரம்பரையாயுள்ள சாதிவிரோதம். 2. Natural enmity between different species, as cats and rats; |
குலப்பம் 1 | kulappam, n. Sand contaning copper; செம்புமணல். (W.) |
குலப்பம் 2 | kulappam, n. <>குலை1-. cf. குலைப்பன். Whooping cough; கக்குவான். (W.) |
குலப்பரத்தை | kula-p-parattai, n. <>kula +. 1. Woman of the courtesan class who remains faithful to a single person; ஒருவற்கே உரிமை பூண்டொழுகும் பரத்தையர் குலத்தவள். (நம்பி யகப்.113.) 2. Courtesan by birth; |
குலப்பன் | kulappaṉ, n. cf. kulāla. Potter; குயவன். (E.T.) |