Word |
English & Tamil Meaning |
---|---|
அமாவாசைக்கண்டம் | amāvācai-k-kaṇṭam n. <>id.+. Crisis of a disease occuring at the new moon; நோய் மிக்கார்க்கு அமாவாசை யன்று உண்டாகும் ஆபத்து. (W.) |
அமாவாசைக்கருக்கல் | amāvācai-k-karukkal n. <>id.+. Great darkness in the night of the new moon; அமாவாசை யிருட்டு. |
அமானத்து | amāṉattu n. <>U. amānat. 1. Deposit, anything held in trust; ஒப்படைத்த பொருள். 2. Money kept in suspense and not credited under any head (R.F.); |
அமானத்துச்சிட்டா | amāṉattu-c-ciṭṭā n. <>id.+. Miscellaneous account; பொதுக் குறிப்பேடு. |
அமானம் | amāṉam n. <>a-māna. Boundlessness; அளவின்மை. (சூடா.) |
அமானவன் | amāṉavaṉ n. <>Amānava. (Vaiṣṇ.) Name of a god said to be on the banks of the river Virajā, who by his touch purifies souls on their way to heaven; விரசைக் கரையி லுள்ள கடவுள். (உபதேசரத். சிறப்புப்.) |
அமானி 1 | amāṉi n. <>U. amānī. 1. Security, trust, deposit; பொறுப்பு. 2. Land held directly under the government, opp to இஜாரா; 3. Land under the management of government officers for arrears of revenue or for any other reason; 4. Land not held by the owner, for whom another holds it a trustee; |
அமானி 2 | amāṉi n. <>a-māna. That which is not previously fixed; வரையறுக்கப்படாதது. அமானியிலே கண்டுமுதல் பண்ணிக்கொள். Loc. |
அமானி 3 | amāṉi n. Yellow wood-sorrel. See புளியாரை. (மலை.) |
அமானுஷகிருத்தியம் | amāṉuṣa-kiruttiyam n. <>a-mānuṣa+. Superhuman act; மனித வல்லமையைக் கடந்த செயல். |
அமிசடக்கம் | amicaṭakkam n. prob. அமைவடக்கம். Modesty, respectful behaviour; அமைதி. Loc. |
அமிசம் 1 | amicam n. <>amša. Part, portion; பாகம். |
அமிசம் 2 | amicam n. <>hamsa. Swan; அன்னப்புள். |
அமிசை | amicai n. <>amša. Lot; தலையெழுத்து. ஆசை யிருக்கிறது தாசில்பண்ண, அமிசை யிருக்கிறது கழுதை மேய்க்க. |
அமிஞ்சி | amici n. [T.amiji.] Forced labour. See அமஞ்சி. அமிஞ்சிக்கு உழுதால் சரியாய் விளையுமா? |
அமித்திரன் | a-mittiraṉ n. <>a-mitra. Enemy, as unfriendly; பகைவன். (உரி. நி.) |
அமிதசாகரர் | amita-cākarar n. <>amita+. Name of a Jaina sage, author of the Yāpparuṅkalam and the Yāpparuṅkala-k-kārikai; யாப்பருங்கலம் காரிகைகளின் ஆசிரியர். |
அமிதம் | amitam n. <>amita. That which is unmeasured, immense; அளவில்லாதது. அமித மாகிய பெரும்படை-(சூளா.கல்யாண.49). |
அமிதவாதி | amita-vāti n. <>id.+. Extremist; மிதமிஞ்சின கொள்கையுடையவன். Mod. |
அமிர்தக்கடுக்காய் | amirta-k-kaṭukkāy n. <>amrtā+. Species of chebulic myrobalan; கடுக்காய் வகை. (பதார்த்த. 967.) |
அமிர்தக்குழல் | amirta-k-kuḻal n. <>id.+. Confection made of black gram, rice and butter, sometimes mixed with treacle; மனோகரப்பணிகாரம். |
அமிர்தக்கொடி | amirta-k-koṭi n. <>id.+. Gulancha. See சீந்தில். (சங். அக.) |
அமிர்தகலை | amirta-kalai n. <>id.+. A digit or 1/16 of the moon's disc; சந்திரகலை. அமிர்தகலையினீரை மாந்தி (சிலப். 5, 208,உரை.) |
அமிர்தகவிராயர் | amirta-kavirāyar n. <>id.+. Name of a poet, author of the Oruturai-k-kōvai, 17 th c.; ஒருதுறைக்கோவை யாசிரியர். |
அமிர்தங்கலங்கு - தல் | amirtaṅ-kalaṅku- v.intr. <>id.+. Brain being disturbed, shocked, as by a blow; மூளைகலங்குதல். (W.) |
அமிர்தசஞ்சீவி | amirta-cacīvi n. <>id.+. A medicinal plant believed to restore the dead to life; உயிர்தரும் ஒரு மூலிகை. அமிர்தசஞ்சீவி போல்வந்து (தாயு. சுக. 4). |
அமிர்தசர்க்கரை | amirta-carkkarai n. <>id.+. Flour made from gulancha stalk; சீந்தில்மா. |
அமிர்தசாகரர் | amirta-cākarar n. <>a-mita+. Corruption of அமிதசாகரர். . |
அமிர்தசாரவெண்பா | amirta-cāraveṇpā n. <>amrta+. Name of a poem by Tattuvarāyar; ஒரு நூல். |
அமிர்தசித்தயோகம் | amirta-citta-yōkam n. <>id.+. (Astrol.) An auspicious conjunction of a week-day with a nakṣatra, one of sik yōkam. q.v.; ஒரு சுபயோகம். |