Word |
English & Tamil Meaning |
---|---|
குளாம்பல் | kuḷāmpal, n. <>குளம்1+ஆம்பல். Water-lily, Nymphaea lotus; குளத்தில் உண்டாகும் ஆம்பல். (நன். 256, மயிலை.) |
குளி | kuḷi, n. <>குளி-. [M. kuḷi.] 1. Bath, ablution; ஸ்நானம். இது எத்தனைகுளிக்கு நிற்கும் (ஈடு, 4, 5, 1). 2. Diving, as for pearls or chanks; |
குளி - த்தல் | kuḷi-, 11. v. [M. kuḷi.] intr. 1. To bathe; நீராடுதல். களிப்பர் குளிப்பர் (பரிபா. 6, 103). 2. To wash one's body up to the neck; 3. To take purificatory bath after menstruation; 4. To pierce, as an arrow; 5. to press against; 6. To enter the thick of a fight; 7. To hide, conceal oneself; 8. To be defeated; 9. To dive for pearls; |
குளிககாலம் | kuḷika-kālam, n. <>குளிகன்+. The period of time in each day extending to an hour and a half of from the rising of kuḷikaṉ, considered auspicious for marriage ceremonies and inauspicious for funeral ceremonies; கலியாணச்சடங்குகளுக்குச் சுபமானதும். பிரேதக்கிரியைகள் தொடங்க அசுபமானதும், ஒவ்வொரு தினத்திலும் குளிகனுதயத்திலிருந்து 3 3/4 நாழிகைவரை உள்ளதுமான காலம். |
குளிகன் | kuḷikaṉ, n. <>kulika. A divine serpent, one of aṣṭa-mā-nākam, q. v.; அஷ்டமா நாகத்தொன்று. குளிகாதி . . . வெங்கணாகம் (கம்பரா. நாகபா. 62). 2. Name of an invisible planet; |
குளிகாசித்தி | kuḷikā-citti, n. <>gulikā +. The power of flying through the air at an enormous speed believed to be acquired by means of mercurial or other pills; இரசகுளிகை முதலியவற்றாற் பெறக்கூடியதாகக் கருதும் ஆகாசகமன சக்தி. (W.) |
குளிகாரன் | kuḷi-kāraṉ, n. <>குளி+. Diver for pearls or chanks; முத்துக்குளிப்பவன். |
குளிகுளி - த்தல் | kuḷi-kuḷi, v. intr. <>id. +. To be delivered of a child; பிரசவித்தல். Colloq. |
குளிகை | kuḷikai, n. <>gulikā. 1. Pill; மாத்திரை. 2. Magic pill supposed to have supernatural powers; |
குளிகைகட்டு - தல் | kuḷikai-kaṭṭu-, v. intr. <>குளிகை+. (W.) 1. To make pills; மாத்திரை செய்தல். 2. To fasten a magical pill on the body, either as an amulet against poisonous bites or as a means to attain supernatual power such as flying through the air; |
குளிகையிடு - தல் | kuḷikai-y-iṭu-, v. intr. <>id. +. To insert a pill in an incison made in the body in order ot counteract the influence of poisonous bites or to comunicate supernatural power; சித்திக்குளிகையை உடம்பைக்கீறி உட்புகுத்துதல். (W.) |
குளிசங்கு | kuḷi-caṅku, n. <>குளி-+. Chank obtained by diving; நீருட் குளித்தெடுத்த சங்கு. (W.) |
குளிசதோஷம் | kuḷica-tōsam, n. prob. gulika +. A child's ailment believed to be the result of encoutering a woman when an amulet is fastened on her for favouring pregnancy; கருப்பப்பமாதலைவேண்டும் மகளிர் குளிசங்கட்டிகொள்ளும்பொழுது எதிர்ப்பட்ட குழந்தைகளுக்கு வரும் ஒருநோய். (சீவரட். 221.) |
குளிசம் | kuḷicam, n. prob. gulika. 1. Amulet; இரட்சையாகக் கட்டிக்கொள்வது. (G. Sm. D. I,i, 145.) 2. Thin piece of metal with magical characters worn as a charm against evil spirits or disease; 3. Root tied round the finger of a snake-charmer or poison-charmer, as an amulet; 4. Magical rites for securing the full medicinal efficacy of certain plants; |
குளிசீலை | kuḷi-cīlai, n. <>குளி-+. Loincloth; கோவணம். Colloq. |
குளிதுறை | kuḷi-tuṟai, n. <>id. +. Bathing ghat; ஸ்நானகட்டம். குளிதுறையிற் சிதடனார்க்கு வலம்புரியின் மணிகிடைத்தவாறு (குற்றா. தல. திருமால். 84). |
குளிதோஷம் | kuḷi-tōṣam, n. <>id. +. Malignant influence on an infant of being looked at by a woman with an empty stomach on her bath after menstruation; தூரஸ்திரீ குளித்தபின் வெறும்வயிற்றோடு பார்த்தலால் குழந்தைக்கு உண்டாவதாகக் கருதப்படுந் தோஷம். (பாலவா.117, தலைப்பு.) |