Word |
English & Tamil Meaning |
---|---|
குறங்கறு - த்தல் | kuṟaṅkaṟu-, v. intr. <>குறங்கு+. To branch out, as channels; கால்வாயினின்று வேறு தனிக்கால் பிரிதல். கண்ணன்வாய்நின்றும் இவ்வூர்நிலத்தாறே குறங்கறுத்துப் புறவூர்க்கு நீர்பாயும் வாய்க்காலும் (S.I.I. ii, 57, 13). |
குறங்கு | kuṟaṅku, n. perh. குறுகு-. 1. [T. kuruvu.] Thigh; துடை. செறிந்த குறங்கின் . . . அஃதை (அகநா. 96). 2. [K. koṟakalu.] Branch channel; 3. Clasp, catch link; |
குறங்குசெறி | kuṟaṅku-ceṟi, n. <>குறங்கு+. Ornament for the thigh; துதையாபரணம். குறங்கு செறிதிரள் குறங்கினிற் செறித்து. (சிலப். 6, 86). |
குறங்கொட்டி | kuṟaṅkoṭṭi, n. prob. id. + ஒட்டு-. Short piece or strip of wood tied to the end of a well-sweep, to a rafter or to the broken leg of a chair; துலாமுதலியவற்றோடு இணைக்கும் மரக்கட்டை. (J.) |
குறச்சாதனை | kuṟa-c-cātaṉai, n. <>குறம்+. Stubborn inflexible nature, as of a Kuṟavaṉ; குற்றஞ்செய்த குறவனைப்போற் செய்யும் சாதனை. |
குறஞ்சனம் | kuṟacaṉam, n. cf. taṅkaṇa. Borax; வெண்காரம். (மூ. அ.) |
குறஞ்சால் | kuṟacāl, n. <>குறை+. Land partially ploughed; குறையுழவுடைய நிலம். (யாழ். அக.) |
குறஞ்சி | kuṟaci, n. <>குறிஞ்சி. 1. cf. kuraṇta. Henna. See மருதோன்றி. (மலை.) 2. Common yellow nail dye. See 3. Date palm. See |
குறட்டரியம் | kuṟaṭṭāyim, n. perh. குறை+தா-. Complaint, murmur, expression of dissatisfaction or discontent; குறையை மெல்ல வெளியிடுகை. அவன் குறட்டரியம் பண்ணுகிறான். (J.) |
குறட்டாழிசை | kuṟaṭṭāḻicai, n. <>குறள் + தாழிசை. Verse of two unequal lines, of five or more feet, the second line being always shorter than the first; நாற்சீரின் மிக்கசீர்களால்வரும் அடியிரண்டாய் ஈற்றடி குறைந்துவருவனவும், வேற்றுத்தளைதட்டுக் குறள்வெண்பாவிற் சிதைந்து வருவனவுமாகிய பாவினம். (காரிகை, செய், 9, உரை.) |
குறட்டுச்சுவர் | kuṟaṭṭu-c-cuvā, n. <>குறடு+. Retaining wall; மண்தாங்கிச்சுவர். (C. E. M.) |
குறட்டுச்செருப்பு | kuṟaṭṭu-c-ceruppu, n. <>id +. A kind of sandals with a loop to admit the great toe; பெருவிரலில் மாட்டத்தக்க மோதிரமுள்ள செருப்பு. (J.) |
குறட்டுப்பாக்குவெட்டி | kuṟaṭṭu-p-pāk-kuveṭṭi, n. <>id. +. Arecanut-cracker with a forked mouth; பாக்குவெட்டி வகை. (W.) |
குறட்டுவாதம் | kuṟaṭṭu-vātam, n. cf. குரக்குவாதம். A kind of spasm, convulsion வலிப்பு நோய்வகை. |
குறட்டை 1 | kuṟaṭṭai, n. 1. Bitter snakegourd, l.cl., Trichosanthes palmata; சவரிக்கொடி. (M. M. 842.) 2. A kind of rat; |
குறட்டை 2 | kuṟaṭṭai, n. perh. ku + raṭa. Snoring, snorting; நித்திரையில் மூச்சுவிடும் ஒலி. கோட்டுவா யோடிவடியக் குறட்டைவிட்டு (இராமநா. உயுத். 32). |
குறட்பா | kuṟaṭ-pā, n. <>குறள்+. See குறள் வெண்பா. வள்ளுவனா ரோது குறட்பா (வள்ளுவமா. 43). . |
குறடா | kuṟaṭā, n. <>Port. corda [K. koṟadā, Mhr. Koradā.] Horewhip; குதிரைச்சவுக்கு. |
குறடு 1 | kuṟaṭu, n. [T. koradu.] 1. Pincers, tongs, forceps; கம்மியரது பற்றுக்குறடு. கொட்டியுண்பாருங் குறடுபோற் கைவிடுவர் (நாலடி, 208). 2. Satchel-pin, hook for hanging up school boy's ola books; 3. Crab; 4. Sandals; |
குறடு 2 | kuṟaṭu, n. perh. குறை-. [T. koṟadu.] 1. Small block or clump of wood; மரத்துண்டு. சந்தன மென்குறடு (வாக்குண். 28). 2. Plank, board; 3. Block for cutting meat; 4. Axle-box of a cart;q 5. Grinding stone for preparing sandal perfume; |
குறடு 3 | kuṟaṭu, n. perh. குறள். 1. Edge of a verandah, extension of a verandah; திண்ணையொட்டு. Colloq. 2. Raised floor or verandah, pial; pedestal 3. Cornice on a wall or column; 4. A kind of drum; |
குறண்டல்வாதம் | kuṟaṇṭal-vātam, n. <>குறண்டு-+. A kind of rheumatic affection attended with spasms; ஒருவகை வலிப்புநோய். (J.) |
குறண்டற்கிழவன் | kuṟaṇṭaṟ-kiḻavaṉ, n. <>id. +. Hunch backed old man; கூனற்கிழவன். (J.) |