Word |
English & Tamil Meaning |
---|---|
குறிப்புக்கட்டை | kuṟippu-k-kaṭṭai, n. <>குறிப்பு+. A post or block at a ford to indicate danger from quicksand, etc.; ஆபத்தைக் காட்ட நீரில்நடும் மரம். (w.) |
குறிப்புக்காரன் | kuṟippu-k-kāraṉ, n. <>id. +. Marksman. See குறிகாரன், 1. (W.) |
குறிப்புச்சொல் | kuṟippu-c-col, n. <>id. +. Word indicating a meaning by implication; சொல்லுவோன் குறிப்பினால் நேர்பொருளன்றி வேருபொருளை உணர்த்துஞ் சொல். (குறள், 711, உரை.) |
குறிப்புத்தொழில் | kuṟippu-t-toḻil, n. <>id. +. Significant gesture; இங்கிதச் செய்கை. இவள் செய்த இக்குறிப்புத் தொழிலால் (பரிபா. 12, 90-90, உரை). |
குறிப்புநிலை | kuṟippu-nilai, n. <>id. +. See குறிப்புச்சொல். (நன். 460, மயிலை.) . |
குறிப்புப்பெயரெச்சம் | kuṟippu-p-peyar-eccam, n. <>id. +. (Gram.) Relative participle of an appellative verb; செயலையுங் காலத்தையும் வெளிப்படியாகக் காட்டாத பெயரெச்சம். |
குறிப்புப்பொருள் | kuṟippu-p-poruḷ, n. <>id. +. (Gram.) Implied meaning; குறிப்பா லுணரப்படும் பொருள். (நான். 259, விருத்.) |
குறிப்புமுற்று | kuṟippu-muṟṟu, n. <>id. +. (Gram.) See குறிப்புவினைமுற்று. (நன். 351.) . |
குறிப்புமொழி | kuṟippu-moḻi, n. <>id. +. See குறிப்புச்சொல். எழுத்தொடுஞ் சொல்லொடும் புணராதாகிப் பொருட்புறத்ததுவே குறிப்புமொழியென்ப (தொல். பொ. 491). . |
குறிப்புருவகம் | kuṟippuruvakam, n. <>id. +. Implied metaphor; குறிப்பினாற் பெறப்படும் உருவகவணி. (குறள், 1030, உரை.) |
குறிப்புவமை | kuṟippuvamai, n. <>id. +. (Rhet.) Implied simile, metaphor; குறிப்பாலுணரப்படும் உவமையணி. (தொல். பொ. 278, உரை.) |
குறிப்புவினை | kuṟippu-viṉai, n. <>id. +. (Gram.) Appellative verb; பொருட்பெயர் இடப் பெயர் முதலியவற்றின் அடியாகப் பிறந்து செயலையும் காலத்தையும் வெளிப்படையாகக் காட்டாமல் வினைத் தன்மையைக் கொண்டுள்ள சொல். (நன். 321, உரை.) |
குறிப்புவினைமுற்று | kuṟippu-viṉai-muṟṟu, n. <>id. +. (Gram.) See குறிப்புவினை. (நன். 323, உரை.) . |
குறிப்புவினையாலணையும்பெயர் | kuṟip-pu-viṉaiyāl-aṇaiyum-peyā, n. <>id. +. (Gram.) Appellative verb declined as a noun as பண்டைச் செல்வனைக் கண்டேன்; முன்பு குறிப்புவினையாய்ப் பின்பு பொருள்களைக் குறித்தற்கு வரும் பெயர். (நன். 321, விருத்.) |
குறிப்புவினையெச்சம் | kuṟippu-viṉai-y-eccam, n. <>id. +. (Gram.) Verbal participle of an appellative verb; தொழில்காலங்களைக் குறிப்பாகக் காட்டும் வினையெச்சம். (நன். 342, உரை.) |
குறிப்பெச்சம் | kuṟippeccam, n. <>id. + எச்சம். Suggested sense; கூறிய சொற்களைக்கொண்டு அவற்றின் கருத்தாகக்கொள்ளும் பொருள். (குறள், 411, உரை.) |
குறிப்பெழுத்து | kuṟippeḻuttu, n. <>id. +. Abbreviation, contraction of names words, etc., as for எ.று என்றவாறு; சுருக்கெழுத்து. (W.) |
குறிப்பெழுது - தல் | kuṟippeḻutu-, v. intr. <>id. +. 1. To write memoranda, notes, index, etc.; விஷயக்குறிப்பு எழுதுதல். 2. To note down the date, hour, etc., of a child's birth; 3. To make entries in daybook; |
குறிப்பேடு | kuṟippēṭu, n. <>id. + ஏடு. 1. Day book the items of which are transfered to ledger; தினசரி வரவுசெலவுக் கணக்குக்களைப் பதியும் புத்தகம். 2. Memorandum book; |
குறிப்போலை | kuṟippōlai, n. <>id. + ஓலை. 1. Cadjan memorandum; கணக்குக்குறிப்பு எழுதிய ஓலை. 2. Ola record of a child's birth for casting its nativity; |
குறிபார் - த்தல் | kuṟi-pār-, v. intr. <>குறி+. 1. To observe signs, omens; நிமித்தம் பார்த்தல். 2. To tell fortunes; 3. To aim at a mark; |