Word |
English & Tamil Meaning |
---|---|
கூலம் 3 | kūlam, n. <>lāṅgūla. 1. Tail of a quadruped; விலங்கின் வால். (திவா.) 2. Monkey; |
கூலம் 4 | kūlam, n. prob. kula. 1. Cow; பசு. (பிங்.) 2. Elk; |
கூலவாணிகன்சாத்தனார் | kūla-vāṇikaṉ-cāttaṉār, n. kūla-vāṇikaṉ-cāttaṉār, The trader poet who wrote Maṇi-mēkalai; கூலவியாபாரஞ்செய்தவரும் மணிமேகலையை இயர்றியவருமான சங்கப்புலவர். |
கூலி | kūli, n. [T. K. M. Tu. kūli.] 1. Wages, pay; வேலைக்குப் பெறும் ஊதியம். முயற்சி மெய்வருத்தக கூலி தரும் (குறாள், 619). 2. Fare, hire, freight; |
கூலிக்காரன் | kūli-k-kāraṉ, n. <>கூலி + [K. kūlikāṟa, M. kūlikkarran.] Cooly day labourer; கூலிக்காக வேலைசெய்பவன். |
கூலிக்குமாரடி - த்தல் | kūlikku-mār-aṭi-, v. intr. <>id. + மார்பு+. Lit., to beat the breasts for hire, at a funeral. To work insincerely; மனமின்றித் தொழில் செய்தல். Colloq. |
கூலிப்படை | kūli-p-paṭai, n. <>id.+. 1. Mmercenary force, one of aṟu-vakai-p-paṭai, q.v.; கூலிக்கு அமர்த்தும் சேனை. (குறள், 762, உரை.) 2. Company of hired labourers; |
கூலிப்பாடு | kūli-p-pāṭu, n. <>id. +. See கூலிப்பிழைப்பு. . |
கூலிப்பிழைப்பு | kūli-p-piḻaippu, n. <>id. +. Life of a hired labourer, making a living by day labour; அற்றைக்கூலிபெற்றுச் செய்யுஞ் சீவனம். (W.) |
கூலியாள் | kūli-y-āḷ, n. <>id. + [M. kūliyāḷ.] Hired labourer, cooly; கூலிக்காரன். கூலியாளாய் வன்கரை யடைப்பா ரில்லை (திருவாத. பு. மண்சு மந்த. 28). |
கூவகர் | kūvakā, n. <>kūpaka. Inhabitants of Kūpaka country; கூபகநாட்டார். கூவகர் சாவகர் (கலிங். புதுப். 316). |
கூவநூல் | kūvanūl, n. <>kūpa+. See கூவனுல். (சங். அக.) . |
கூவம் | kūvam, n. <>kūpa. Well; கிணறு. கூவத்தின் சிறுபுனலைக் கடலயிர்த்த தொவ்வாதோ (கம்பரா. வீபீடண. 103). |
கூவமா | kūvamā, n. A kind of tree; மரவகை. (J.) |
கூவல் 1 | kūval, n. <>கூவு-. Crying aloud, bawling, crowing; கூவுகை. தேவிமாரொடுங் கூவல்செய் தொழிலினர் (கம்பரா. சடாயுவுயிர். 31). |
கூவல் 2 | kūval, n. <>kūpa. 1. Well; கிணறு. கூவலன்ன விடரகம் (மலைபடு. 366). 2. Hollow, hole pit; |
கூவனூல் | kūvaṉūl, n. <>கூவல்+நூல். 1. Science of determining sites suitable for sinking wells; கிணறு வெட்டுதற்குரிய இடமுதலியவற்றை யுணர்த்தும். நூல். |
கூவனூலோர் | kūvaṉūlōr, n. <>கூவனூல். Persons skiled in the science of kūvaṉūl; கூவனுலில் வல்லவர். (திவா.) |
கூவியர் | kūviyā, n. perh. கூவு-. 1. Cooks; உணவு சமைப்போர் (திவா.) 2. Pancake sellers; |
கூவிரம் 1 | kūviram, n. cf. கூவிளம். 1. Bael, m.tr., Aegle marmelos; மலைமரவகை. (குறிஞ்சிப். 66.) 2. A mountain tree; |
கூவிரம் 2 | kūviram, n. <>kūvara. 1. Ornamental stake in the form of a lotus-bud fixed in front of the seat in a chariot and held by the hand for support; தேரில் ஆசனத்துக்கு எதிராக நடைபெற்றுக் கையாற்பற்றிக்கொள்ளுதற்கு உதவுவதும் தாமரைமொட்டு வடிவில் அமைந்ததுமான ஓர் உறுப்பு. கூவிரஞ் செறி . . . தேரொடும் (கம்பரா. இராவ. 176). 2. Chariot, car; 3. Streamers or banners of a car; 4. Decorated pinnacle of a chariot; |
கூவிரி | kūviri, n. prob. kūvarin. Lit., one having kūviram. Chariot, car; [விரத்தையுடையது] தேர். (திவா.) |
கூவிளங்கனி | kūviḷaṅ-kaṉi, n. <>கூவிளம்+. Mnemonic for the metrical foot of nēr-nirainirai; நேர் நிரை நிரை குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 7, உரை.) |
கூவிளங்காய் | kūviḷaṅ-kāy, n. <>id.+. Mnemonic for the metrical foot of nēr-nirai-nēr; நேர்நிரைநேர் குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 7, உரை.) |
கூவிளந்தண்ணிழல் | kūviḷan-taṇṇiḻal, n. <>id. +. Mnemonic for the metrical foot of nēr-nirai-nēr-nirai; நேர் நிரை நேர் நிரை குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 8, உரை.) |
கூவிளந்தண்பூ | kūviḷan-taṇ-pū, n. <>id.+. Mnemonic for the metrical foot of nērnirai-nēr-nēr; நேர் நிரை நேர் நேர் குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 8, உரை.) |