Word |
English & Tamil Meaning |
---|---|
கூழன்பலா | kūḻaṉ-palā, n. <>கூழன்+. A kind of jack tree; பலாவகை. (J.) |
கூழா - தல் | kūḻ-ā-, n. 1. To be over boiled, as rice; சோறுகுழைதல். Colloq. 2. To become addled, as eggs; |
கூழா | kūḻ, n.Sebesten. See நறுவிலி. (J.) . |
கூழாங்கல் | kūḻ-āṅ-kal, n. perh. கூழ்+. Shingles, loose pebbles, especially those on the sea-shore; வழுவழுப்பான சிறு கல்வகை. |
கூழாம்பாணி | kūḻ-ām-pāṇi, n. <>id. +. Treacle, molasses; சர்க்கரை கரைந்து கூழ்போலுள்ள நீர். (J.) |
கூழாமட்டி | kūḻāmaṭṭi, n. <>id. +. Dull, cowardly man; மந்தபுத்தியும் அச்சமுமுள்ளவன். (W.) |
கூழாமணி | kūḻāmaṇi, n. See கூழ்முன்ன். (மலை.) . |
கூழை 1 | kūḻai, n. <>குழை-. 1. Woman's hair; பெண்டிர் தலைமயிர். கூழை விரித்தல். (தொல். பொ. 262). 2. Feathers, plumage; 3. Peacock's tail; 4. Tail; 5. Middle, centre; |
கூழை 2 | kūḻai, n. prob. khulla. 1. That which is short; குட்டையானது. நாய் கூழைவாலாற் குழைக்கின்றதுபோல (திவ். திருவாய். 9, 4, 3). 2. [T. kūḷa, K. kūḻ, Mhr. khuḷa.] Dullness of intellect, stupidity; 3. A mode of versification. See 4. Dwarf snake. See |
கூழை 3 | kūḻai, n. <>குழை1-. 1. Mud, mire; சேறு. கூழை பாய்வயல்(தேவா. 473, 8). 2. cf. kuš. Gold; |
கூழை 4 | kūḻai, n. cf. kūla. 1. Rear of an army; படையின் பின்னணி. கூழைதார் கொண்டியாம் பொருதும் (புநநா. 88, 1). 2. Hindmost row, as of a herd of cows; |
கூழைக்கடா | kūḻai-k-kaṭā, n. <>கூழை2+. See கூழைக்கிடா. கொங்கு கோழி கூழைக்கடாமுகம் (பரத. பாவ. 36). . |
கூழைக்கிடா | kūḻai-k-kiṭā, n. <>id. +. 1. Pelican, as tailless, Pelecanus onocrotalus; நீர் வாழ்பறவை வகை. 2. Tailless he-buffalo; |
கூழைக்கும்பீடு | kūḻai-k-kumpīṭu, n. <>குழை-+. Hypocritical, insincere obeisance; போலி வணக்கம். |
கூழைக்குறும்பு | kūḻai-k-kuṟumpu, n. <>id. +. Secret mischief; பிறர் அறியாமற செய்யுஞ் சேஷ்டை. |
கூழைக்கை | kūḻai-k-kai, n. <>கூழை2+. Maimed hand; குறைக்கப்பட்ட கை. |
கூழைக்கொம்பன் | kūḻai-k-kompaṉ, n. <>id. +. Ox with blunt horns; மழுங்கின கொம்புள்ள மாடு. |
கூழைத்தனம் | kūḻai-t-taṉam, n. <>கூழை1+. [T. kūḷatanamu, K. kūḻatana.] False humility, dissimulation; போலியாகக் குழைந்து காட்டுகை. நீங்கள் கோயிற்கூழைத்தனம் அடிக்கிறபடி இதுவோ (திருவிருத். 99, வ்யா, 468). |
கூழைத்தொடை | kūḻai-t-toṭai, n. <>கூழை2+. (Pros.) Versification which requires mōṉai, etc., to occur inthe first three feet of a four-footed line of a verse; அளவடியுள் இறுதிச் சீர்க்கணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது. (இலக். வி 723, உரை.) |
கூழைநரி | kūḻai-nāi, n. <>id. +. Shorttailed fox; வால் குட்டையான நரி. |
கூழைப்பாம்பு | kūḻai-p-pāmpu, n. <>id. +. Dwarf snake, whose head is not marked off from the body by constriction or neck, Calamaridce; தலைக்கும் உடலுக்கும் இடையில் கழுத்தின்றி ஒன்றுபோல் தடித்துள்ள குள்ளமான பாம்புவகை. (M. M. 224.) |
கூழைப்பார்வை | kūḻai-p-pārvai, n. <>கூழை1+. Sly look; வஞ்சகப்பார்வை. இன்றுணை நாரைக்கிரைதேடிக் கூழைப் பார்வைக் கார்வயல் மேயும் (திவ். பெரியதி. 9, 6, 3). |
கூழைமுட்டை | kūḻai-muṭṭai, n. <>கூழ்+. Rotten egg; அழுகின முட்டை. (R.) |
கூழைமை | kūḻaimai, n. <>id. 1. Duties, business; கடமை. கூத்தனுக் காட்பட் டிருப்பதன்றோ நந்தம் கூழைமையே (தேவா. 11, 5). 2. Foundling, caressing; |
கூழையன் | kūḻaiyaṉ, n. <>கூழை2. 1. Shrt, stunted person; குள்ளன். 2. Dolt, booby; |
கூழைவாலன் | kūḻai-vālaṉ, n. <>id. +. Short-tailed snake which lived underground belonging to the family of uropeltidce; குட்டையான பாம்புவகை. (M. M. 224.) |
கூள்(ளு) - தல் | kūḷ-, 2. v. intr. <>kul. To crowd together, assemble, muster; திரளுதல். கூண்டன கரிகள் (இரகு. மீட்சி. 42) |