Word |
English & Tamil Meaning |
---|---|
கூறியதுகூறல் | kūṟiyatu-kūṟal, n. <>கூறு-+. Tautology a defect in literary composition, one of ten nūṟ-kuṟṟam. q.v.; முன்மொழிந்ததனையே பயனின்றிய பின்னும்மொழிவதாகிய நூற்குற்றம். கூறியதுகூறன் மாறுகொளக்குறல் (தொல். பொ. 664). |
கூறியான் | kūṟiyāṉ, n. <>id. Headman of the civiyār or palanquin bearers proclaiming the titles of the person seated in it; சிவிகையில் ஏறிச்செல்லும் செல்வனது விருதுகளை யெடுத்துக்கூறுவோனாகிய சிவியார் வகுப்பினரின் தலைவன். (J.) |
கூறு 1 | kūṟu, n. prob. குறை2-. [K. M. kūṟu.] 1. Section, division, classification; கூறுபாடு. கூறிட்டு மொழிதல். (மணி. 30, 236). 2. Part, portion, lot, share; 3. Broken pieces of anything; 4. Half; 5. Properties, as of heat; effects; characteristic symptoms, as of disease; |
கூறு 2 | kūṟu, n. perh. குறு-மை. 1. Sesame. See எள். (மலை.) |
கூறு - தல் | kūṟu-, 5 v. tr. [M. kūṟu.] 1. To spleak, say, declare, assert; சொல்லுதல். கூறிய முறையின் (தொல். சொல். 70). 2. To cry out the price, as an auctioneer; 3. To cry aloud, promulgate, proclaim; |
கூறுகாசு | kūṟu-kācu, n. <>வறு2+. share money; பங்குத்தொகை. Loc. |
கூறுகொள்(ளு) - தல் | kūṟu-koḷ-, v. tr. <>id. + [T. kūrukonu.] To stuff, cram; வாயில் திணித்துக்கொள்ளுதல். குழந்தை மண்ணிக் கூறுகொள்ளுகிற. (W.) |
கூறுச்சீட்டு | kūṟu-c-cīṭṭu, n. <>id. +. Deed of partition; பாகபத்திரம். Loc. |
கூறுசீட்டு | kūṟu-cīṭṭu, n. <>id. +. See கூறுச்சீட்டு. . |
கூறுசெய் - தல் | kūṟu-cey-, v. <>id. + tr. 1. To cut in piece, divide; துண்டாக்குதல். 2. To distribute in portions or small quantities;. To exercise authority, as in the assessment of taxes, etc.; |
கூறுசெய்வான் | kūṟu-ceyvāṉ, n. <>id. +. Lit., one who apportions. Village revenue officer; மணியகாரன். ராஜாக்கள் ஊர்தோறுங் கூறு செய்வார்களை வைக்குமாபோலே (ஈடு, 5, 2, 8). |
கூறுபடு - தல் | kūṟu-paṭu-, v. intr. <>id. +. To be divided; பிரிவுபடுதல் |
கூறுபடுத்து - தல் | kūṟu-paṭuttu-, v. tr. Caus. of கூறுபடு-. To divide, analyse, classify; பிரிவுசெய்தல். |
கூறுபாடல் | kūṟu-pāṭal, n. <>கூறு-+. Vocal music; வாய்ப்பட்டு. கூறுபாடலுங் குழலின் பாடலும் (கம்பரா. நாட்டுப். 56). |
கூறுபாடு | kūṟu-pāṭu, n. <>கூறுபடு-. 1. Division, sub-division, classification; பாகுபாடு. 2. Portion, section; 3. Quality, nature; |
கூறுவிக்குறு - தல் | kūṟuvikkuṟu-, v. tr. <>கூறுவிக்க+உறு-. To make another speak on one's behalf; பிறரைக்கொண்டு சொல்வித்தல். கொத்தவிழ் கோதையாற் கூறுவிக்குற்றது (திருக்கோ. 263, கொளு.) |
கூறை | kūṟai, n. <>குறை2-. [M. kūṟra.] 1. Cloth, clothes, garment; ஆடை. அத்திட்ட கூறையரைச்சுற்றி (நாலடி, 281). See கூறைப்புடைவை. |
கூறைகோட்படு - தல் | kūṟai-kōṭ-paṭu-, v. intr. <>கூறை+. To be robbed of one's clothes; ஆடையைப் பறிகொடுத்தல். இக்காட்டிற்போகிற் கூறை கோட்பட்டான் (நன். 383, மயிலை.) |
கூறைநாடு | kūṟai-nāṭu, n. <>id. +. A village near Mayavaram noted for the manufacture of sarees; மாயவரத்திற்கு அருகில் சேலைகள் மிகுதியாக நெய்யப்படும் ஓர் ஊர். |
கூறைப்பாய் | kūṟai-p-pāy, n. <>id. +. Canvas sail; தோணிப்பாய். (W.) |
கூறைப்புடவை | kūṟai-p-puṭavai, n. <>id. +. Cloth presented to the bride by the bridegroom's parents and worn by her before the tāli is tied; தாலிகட்டும் சமயத்திற்குமுன் மணமகளுக்கு மணமகன் வீட்டார் கொடுக்கும் சேலை. Brah. |
கூறைப்பை | kūṟai-p-pai, n. <>id. +. 1. Money-purse, made of cloth; துணியாற்செய்த பணப்பை. 2. Bag for keeping sarees; |
கூறையுடுத்தல் | kūṟai-y-uṭuttal, n. <>id. +. Dressing the bride with the wedding cloth by the bridegroom's sister; நாத்தணார் மணமகட்குக் கூறைப்புடைவை உடுத்துகை. Brah. |