Word |
English & Tamil Meaning |
---|---|
கைசா | kaicā, n. prob. Mhr. kaichā. A weight = 2 kaḻacu; இருகழஞ்சுகொண்ட நிறை. (கணக்கதி. 7, 8.) |
கைசிகத்துவாதசி | kaicika-t-tuvātaci, n. <>kaisika +. The twelfth day of the bright fortnight in the month of Kārttikai, sacred to Nampāṭuvāṉ, a feast day; கார்த்திகைச் சுக்கில பக்ஷத்துவருவதும் நம்பாடுவானுக்குரியதுமான துவாதசி. |
கைசிகநிஷாதம் | kaicika-nisātam, n. <>id. +. Middle variety of the seventh note of the gamut, one of cōṭaca-curam; சோடக சுரங்களுள் ஒன்று. |
கைசிகம் | kaicikam, n. <>id. A musical mode; ஓர் இராகம். (பரத. இரக. 56.) |
கைசிகவேகாதசி | kaicika-v-ēkātaci, n. <>id. +. The eleventh day ofthe bright fortnight in the month of Kārttikai, sacred to Nampāṭuvāṉ who sang the musical mode kaicikam and obtained salvation; கைசிகமென்ற பண்ணைப் பாடிக்கொண்டு நம்பாடுவானென்பான் திருமாலைவழிபட்டு முத்திபெற்ற நாளாகிய கார்த்திகை மாதத்துச் சுக்கிலபக்ஷத்து ஏகாதசி. |
கைசிகி | kaiciki, n. <>kaišikī. See கைசிகிவிருத்தி. . |
கைசிகிவிருத்தி | kaiciki-virutti, n. <>id. +. A variety of dramatic composition of which a libertine is the hero, one of four kinds of nāṭaka-virutti, q.v.; காமம்பொருளாகக் காமுகராகிய மக்கள் தலைவராக வரும் நாடக நடை. (சிலப். 3. 13, உரை.) |
கைசு | kaicu, n. <>கஃசு. One fourth of a palam; காற்பலம். சர்க்கரையமுது போது கைசாக (S.I.I. ii, 70, 14). |
கைசெய் - தல் | kai-cey-, v. <>கை5+. intr. 1. To do manual labour, work with one's hands; தொழில் செய்தல். நும்மெய் வருத்திக் கைசெய்தும்மினோ (திவ். திருவாய். 3, 9, 6). 2. To adorn, decorate, trick out; 3. To assist; 4. To conduct; |
கைசோர் - தல் | kai-cōr-, v. intr. <>id. +. See கைசலி-. Colloq. . |
கைசோர்ந்துபோ - தல் | kai-cōrntu-pō-, v. intr. <>id. +. 1. To slip out of one's hands; to be lost; கைவிட்டுப்போதல். 2. To become poor; |
கைஞ்ஞானம் | kai--āṉam, n. <>id. +. Shallow, superficial knwoledge; அற்ப அறிவு. கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறிவாளர் (நாலடி, 311). |
கைடவன் | kaiṭavaṉ, n. <>Kaiṭabha. An asura slain by Viṣṇu; திருமாலாற் கொல்லப்பெற்ற ஒரு அசுரன். மதுரகைடவரும் வயிறுருகி மாண்டார் (திவ். இயற். 3, 66). |
கைத்தகோடரம் | kaitta-kōṭaram, n. <>கை2+. Strychnine tree. Se எட்டி. (மலை.) |
கைத்தடி 1 | kai-t-taṭi, n. <>கை5+. 1. Walking-stick; ஊன்றுகோல். ஒரு கைத்தடி கொண்டடிக்கவோ வலியிலேன் (அருட்பா, v, தெய்வமணி. 31). 2. Short stick; |
கைத்தடி 2 | kai-t-taṭi, n. <>id. +prob. தடி-. Loc. 1. Partition deed; பாகபத்திரம். 2. Mark of signature made by an illiterate person; |
கைத்தண்டம் | kai-t-taṇṭam, n. <>id. +. [Tu. kaidaṇda.] See கைநஷ்டம். . 2. Crutch; |
கைத்தப்பு | kai-t-tappu, n. <>id. + [Tu. kaitappu.] See கைக்குற்றம். . |
கைத்தராசு | kai-t-tarācu, n. <>id. +. Small balance used for weighing precious metals and stones; சிறு தராசு. |
கைத்தலம் | kai-t-talam, n. <>id. +. Palm of the hand, matercarpus; கரதலம். கைத்தல மொத்தா (பெருங். வத்தவ. 14, 71). |
கைத்தளம் | kai-t-taḷam, n. <>id.+. A kind of shield; கேடாயவகை. (சீவக. 1561, உரை.) |
கைத்தா | kaittā, n. perh. கை2-. See காட்டாமணக்கு. (மலை.) . |
கைத்தாங்கல் | kai-t-tāṅkal, n. <>கை5+. Supporting a person or thing by the arms; கையால் தாங்கி நிற்கை. |
கைத்தாய் | kai-t-tāy, n. <>id. +. Fostermother, one of aivakai-t-tāyar, q.v.; வளர்ப்புத் தாய். (பிங்.) |
கைத்தாராளம் | kai-t-tārāḷam, n. <>id. +. Openhandedness, liberality; உதாரம். |
கைத்தாள் | kai-t-tāḷ, n. <>id. +. 1. Key; தீறவுகோல். கைத்தாள்கொண் டாருந்திறந்தறிவாரில்லை (திருமந். 2605). 2. Bolt; |
கைத்தாளம் | kai-t-tāḷam, n. <>id. + [T. kaitāḷamu, M. kaitāḷam, Tu. kaitāḷa.] 1. Cymbals; தாளக்கருவி. கொக்கரை கைத்தாள மொந்தை (தேவா. 965, 7). 2. Beating time with the hand; |