Word |
English & Tamil Meaning |
---|---|
கைபோ - தல் | kai-pō-, v. <>கை6+. intr. 1. To attain thorough mastery; to overstep, pass beyound, exceed the limits; முற்றும் வல்லவனாதல். ஓவியத்துறை கைபோயவொருவனை (நைடத. அன். கண். 6). 2. To overstep, pass beyond, exeed the limits; |
கைபோடு - தல் | kai-pōṭu-, v. intr. <>கை5+. 1. To confirm a promise by offering the hand; கைகொடுத்து உறுதி தருதல். Loc. 2. To undtertake a business; 3. To consult secretly about the price of a thing, by making signs with hands under cover; 4. To commit indecent assault on a woman; |
கைம்பெண் | kaimpeṇ, n. See கைம்பெண்டாட்டி. . |
கைம்பெண்கூறு | kaimpeṇ-kūṟu, n. <>கைம்பெண்+. Allowance, out of family-funds, made to a sonless window for maintenance; ஆண்சந்ததியில்லாத விதவைக்குக் குடும்பச்சொத்திலிருந்து கொடுக்குஞ் சீவனாம்சம். Loc. |
கைம்பெண்டாட்டி | kaimpeṇṭāṭṭi, n. <>கைம்மை+. Widow; விதவை. |
கைம்மகவு | kai-m-makavu, n. <>கை5+. Babe in arms; கைகுழந்தை கைம்மகவோடுங் காதலவரொடும் (பரிபா. 15, 47). |
கைம்மடல் | kai-m-maṭal, n. <>id. +. Scapula, shoulder blade; தோட்பட்டை. (யாழ். அக.) |
கைம்மணி | kai-m-maṇi, n. <>id. +. Hand bell used in worship; பூசையில் வழங்கும் சிறுமணி. கைம்மணிச் சீரன்றிச் சீரறியா (தமிழ்நா. 102). |
கைம்மதம் | kai-m-matam, n. <>id. +. Exudation from the trunk of an elephant in rut; யானையின் துதிக்கையினின்று வெளியேறும் மதநீர். (திவா.) |
கைம்மயக்கம் | kai-m-mayakkam, n. <>id. +. Fascination, infatuation; மோகமயக்கம். திரிகண்ணரானவர் செய்த கைம்மயக்கமோ (குற்றா. குற. 70, 26). |
கைம்மயக்கு | kai-m-mayakku, n. <>id. +. See கைம்மயக்கம். . |
கைம்மருந்து | kai-m-maruntu, n. <>id. +. 1. Medicine for infatuation kept always on hand for use; கையிலுள்ள வசியமருந்து. அவன் கைம்மருந்தான் மெய்ம்மறந்து திரிகின்றாயே (தனிப்பா. i, 323, 18). 2. Simple medicine prepared from one's own experience; 3. Specifics administered by wives to keep their husbands under control; |
கைம்மலை | kai-m-malai, n. <>id. +. Lit., mountain with a hand. elephant; [கையையுதைய மலை] யானை (அக. நி.) |
கைம்மறதி | kai-m-maṟati, n. <>id. +. Forgetfulness, as of a place where a thing was kept; ஞாபகத்தவறு. |
கைம்மறி - த்தல் | kai-m-maṟi-, v. tr. <>id. +. 1. To check or resist with the fore-arm; கையால் தடுத்தல். 2. To wave the open hand as a sign of disapproval; |
கைம்மா | kai-m-mā, n. <>id. +. Lit., an animal with a trunk; elephant; [கையையுடைய விலங்கு] யானை. பொலம்படைக் கைம்மாவை (பரிபா. 11, 52). |
கைம்மாறு - தல் | kai-m-māṟu-, v. tr. <>id. +. 1. To assume, partake, usurp; மேற்கொள்ளுதல். களிற்றியல் கைம்மாறுவார் (பரிபா. 9, 50). |
கைம்மாறு | kai-m-māṟu, n. <>id.+. 1. Substitute, exchange; பிரதி. கைம்மாறா நோயும் பசலையுந் தந்து (குறள், 1183). 2. Recompense, return; |
கைம்மிகு - தல் | kai-m-miku-, v. intr. <>கை6+. 1. To exceed the limit; to be beyond sufferance, as love, sorrow, disease; அளவுகடத்தல். காப்புக்கைம்மிகுதல் (தொல். போ. 214). 2. o violate the caste rules; |
கைம்மீறு - தல் | kai-m-mīṟu-, v. intr. <>id. + [Tu. kaimīṟu.] To exceed, transgress; அளவுக்கு மிஞ்சுதல். Colloq. |
கைம்மீன் | kai-m-mīṉ, n. <>கை5+. The 13th nakṣatra. See அத்தம்8. (திவா.) |
கைம்முகிழ் - ததல் | kai-m-mukiḻ-, v. intr. <>id. + [Tu. kaimugi.] To join or unite the palms of the hand, as in salute, prayer, etc.; கடவுள்வழிபாடு வந்தனம் முதலியவற்றில் கையைக்கூப்புதல். Colloq. |
கைம்முதல் | kai-m-mutal, n. <>id. + [M. kaimutal.] 1. Business-capital; வியாபாரம் முதலியவற்றிற்கு வைத்த கைப்பொருள். கைம்முதற்கு நட்டமில்லை (பணவிடு. 241). 2. Cash, valuables; 3. Means; |