Word |
English & Tamil Meaning |
---|---|
கையலை - த்தல் | kai-y-alai-, v. tr. <>id. +. To trouble, harass, torment; துன்புறுத்துதல். கையலைத் தோடுமோர் களிமகற் கண்மின் (பெருங். உஞ்சைக். 40, 98). |
கையளி - த்தல் | kai-y-aḷi-, v. tr. <>கை5 +. See கையடு-. (W.) . |
கையறம் | kai-y-aṟam, n. <>கையறு-. Elegy; இரங்கற்பா. கம்பன்பேரிற் படிய கையறம் (தமிழ் நா. 92). |
கையறல் | kai-y-aṟal, n. <>id. See கையறவு. . |
கையறவு | kai-y-aṟavu, n. <>id. 1. State of utter prostration, helplessness; செயலற்ற நிலை. வாராள் காயசண்டிகையெனக் கையறவெய்தி (மணி. 20, 26). 2. Death; 3. Affliction, sorrow; 4. Love quarrel; 5. Impecuniosity, poverty; 6. Immorality; |
கையறி - தல் | kai-y-aṟi-, v. intr. <>கை5 +. 1. To become trained or adept; பழக்கமாதல். 2. To know how to do things; to be discreet and knowing; |
கையறு - தல் | kai-y-aṟu-, v. intr. <>id. +. 1. To be laid prostrate, overcome, as with pity; செயலற்றுப்போதல். காணா வுயிர்க்குங் கையற் றேங்கி (மணி. 3, 89). 2. To be laid prostrate, overcome, as with pity; 3. To exceed limits; 4. To be irremediable, overwhelming; 5. To die; 6. To become immoral; |
கையறுத்துக்கொள்(ளு) - தல் | kai-y-aṟuttu-k-koḷ-, v. intr.<>id.+. To suffer loss of money; பொருள்நஷ்டம் அடைதல். Loc. |
கையறுதி | kai-y-aṟuti, n. <>id. +. 1. Selling outright; அறுதியாக விற்கை. (W.) 2. Quitting finally; relinguishing entirely, as one's claim or right; 3. See கையுறுதி, 2. |
கையறுநிலை | kai-y-aṟu-nilai, n. <>கையறு-+. 1. (Puṟap.) Theme describing the utter helplessness of dependents at the death of a chief or his wife; தலைவனேனும் தலைவியேனும் இறந்தமைக்கு அவர் ஆயத்தார் முதலானோர் செயலற்று மிகவருந்தியமை கூறும் புறத்துறை. கழிந்தோர் தேஎத் தழிபடருறீஇ, ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் (தொல். பொ. 79). 2. A poem on kai-y-aṟu-nilai; |
கையறை 1 | kai-y-aṟai, n. <>id. +. See கையாறு2, 1. கலன் மாய்த்தவர் கையறைபோல் (தணிகைப்பு. களவு. 104). . |
கையறை 2 | kai-y-aṟai, n. See கையாறு3. (சூடா.) . |
கையறை 3 | kai-y-aṟai, n. <>id. +. Small store-room, as in a temple; சிறிய உக்கிராண அறை. Loc. |
கையாக்கம் | kai-y-ākkam, n. <>id. +. See கைராசி. அவன் கையாக்கமுள்ளவன். Loc. . |
கையாட்சி | kai-y-āṭci, n. <>id. +. 1. Constant use; கைப்பழக்கம். 2. Profession, occupation; 3. That which is on hand or in one's possession and enjoyment; 4. That which has proved good by experience; |
கையாடல் | kai-y-āṭal, n. <>id. + ஆள்-. Misappropriation of funds; நம்பிக்கைக்கு மாறாய்ப்பிறர்பொருளை அபகரிக்கை. |
கையாடு - தல் | kai-y-āṭu-, v. tr.<>id.+ [M. kaiyāṭu.] See கையாள்-, . |
கையாணி | kai-y-āṇi, n. <>id.+. Rafter-nail; கைமரத்திற் சட்டத்தையிறக்கும் ஆணி. (C. E. M.) |
கையாந்தகரை | kaiyāntakarai, n. A plant growing in wet places, Ecilpta alba; கரிசலாங் கண்ணி. (பிங்.) |
கையாப்புடை | kaiyāppuṭai, n. <>Malay. White Australian tea tree, m.tr., Melaleuca leucadendron minor; மரவகை. (L.) |
கையார | kai-y-āra, adv. <>கை5 +. To the satisfaction of one's hand, liberally, in large quantities; கைக்குத் திருப்தியாக. |
கையாலா - தல் | kaiyāl-ā-, v. intr. <>di. +. To be able to work or accomplish; செய்யும் ஆற்றல் பெறுதல். |
கையாலாகாதவன் | kaiyāl-ākātavaṉ, n. <>id. +. An incapable or incompetent person; எவ்வேலையும் செய்யத் திறமையுற்றவன். |
கையாலேபாணி | kaiyāl-ē-pāṇi-, v. tr. <>id. +. To estimate the weight of a thing by hand; கையால் தூக்கிப்பார்த்து நிறையறிதல். Loc. |