Word |
English & Tamil Meaning |
---|---|
கையுண்(ணு) - தல் | kai-y-uṇ-, v. intr. <>id. +.M To live a dependent life; பிறர்கைபார்த்து உண்டு வாழ்தல். சான்றவர் கையுண்டுங் கூறுவர் மெய் (பழ. 83). |
கையுதவி | kai-y-utavi, n. <>id. +. 1. Timelye help; சமயத்தில் உதவும் உதவி. timely help 2. Ready or necessary help, as a friend, a weapon; 4. Bribe; |
கையுதிர்க்கோடல் | kai-y-utir-k-kōṭal, n. <>id. +. Waving one's hands as a signal to quit or go away; விட்டு விலகும்படி கையசைத்துக் குறிப்பிக்கை. காண மிலியெனக் கையுதிர்க்கோடலும் (மணி. 16, 10). |
கையுபகாரம் | kai-y-upakāram, n. <>id. +. See கையுதவி. . |
கையுமெய்யுமாய் | kaiyumeyyum-āy, adv. <>id. +. See கையெம்யாய். . |
கையுயர் - தல் | kai-y-uyā-, v. intr. <>id. +. See கையோங்கு-, 1, 2. . |
கையுயர்த்து - தல் | kai-y-uyāttu-, v. intr. <>id.+. See கையோங்கு-, 1, 2. . |
கையுழற்றி | kai-y-uḻaṟṟi, n. <>id. + உழற்று-. Spasms in the arms; கைநடுக்கம். (W.) |
கையுறு - தல் | kai-y-uṟu-, v. <>id. +. 1. To come to hand, to be received; கைவசமாகக் கிடைத்தல். வானகங் கையுரினும் (நாலடி, 300).--tr. 2. To approach, have intercourse with; |
கையுறுதி | kai-y-uṟuti, n. <>id. +. 1. Security deposited for loan; கடனுக்கு வைக்கப்படும் ஈடு. 2. Completing a bargain by striking hands; |
கையுறை | kai-y-uṟai, n. <>id. +. 1. Offerings, presents from an inferior to a superior, visiting-presents; காணிக்கைப் பொருள். மையறு சிறப்பிற் கையுறை யேந்தி (சிலப். 8, 22). 2. Marriage-presents; 3. (Akap.) Customary love-token consisting of a bunch of tender leaves; 4. [M. kaiyuṟra.] See 5. Bribe; |
கையுறையெழுது - தல் | kai-y-uṟai-y-eḻutu-, v. intr. <>id. +. To make a list of presents made on marriage or other ocasions; விவாக முதலியவற்றில் மொய்க்கணக்கெழுதுதல். கையுறையெழுதினர் (சீவக. 829). |
கையூக்கம் | kai-y-ūkkam, n. <>id.+. See கையூற்றம். Loc. . |
கையூக்கு | kai-y-ūkku, n. <>id. +. See கையுற்றம். Loc. . |
கையூட்டு | kai-y-ūṭṭu, n. <>id. +. Bribe; லஞ்சம். எப்பேர்ப்பட்ட கையூட்டுங் கொண்டான் (சோழவமி. 53). |
கையூழ் | kai-y-ūḻ, n. <>id. +. Playing delightfully on lute a song composed in a set musical form; வண்ணத்திற்செய்த பாடலெல்லாம் இன்பமாக யாழிற் பாதுகை. (சீவக. 657, உரை.) |
கையூற்றம் | kai-y-ūṟṟam, n. <>id. [ M. kayyūṟṟam.] Lit., strength of the arm. Skill, ability; [கையின்வலிமை] வல்லமை. Colloq. |
கையெடு - த்தல் | kai-y-eṭu-, v. <>id. + [M. kaiyeṭu.] 1. Lit., to raise hands; [கையைத் தூக்குதல்] tr. 2. To salute, as a mark of respect; 3. To beg, entreat supplcate; 4. To vote by raising hands; |
கையெடுப்பு | kai-y-eṭuppu, n. <>id. +. The height of a man with his arms raised upright, as used in indicating the depth of water in a well, tank, etc.; கையையுயர்த்தி நிற்கும் ஒருவனது உயரத்தினளவு. அந்தக் கிணற்றில் கையெடுப்பு ஜலம் இருக்கிறது. Loc. |
கையெழுத்து | kai-y-eḻuttu, n. <>id. +. 1. Handwriting; கையாலெழுதும் எழுத்து. நீரி லெழுதுங் கையெழுத் தென்றும் (அருட்பா, v, தெய்வமணி.17). 2. Signature, initial; 2. Written agreement; 4. See கைரேகை. Loc. |
கையெழுத்துப்பிரதி | kai-y-eḻuttu-p-pirati, n. <>id. +. Manuscript; கையாலெழுதிய நூற்பிரதி. |
கையெழுத்துப்போடு - தல் | kai-y-eḻuttu-p-pōṭu-, v. intr. <>id. +. To sign one's name, affix one's signature, initial; கையொப்பமிடுதல். |
கையெழுத்துவை - த்தல் | kai-y-eḻuttu-vai-, v. intr. <>id.+. See கையெழுத்துப்போடு-. . |
கையெறி - தல் | kai-y-eṟi-, v. intr. <>id.+. 1. To clap hands; கைகொட்டுதல். கையெறிந்து நக்கார்(சீவக. 582). 2. To take a vow or to swear by striking hands; 3. To flourish the hands in anger; |
கையெறிகாலெறி | kai-y-eṟi-kāl-eṟi, n. <>id. +. Throwing out the arms and legs and kicking, as naughty children or person in convulsion, etc.; கைகால்களை உதைஙமதுகொள்ளுகை. Loc. |