Word |
English & Tamil Meaning |
---|---|
கைவட்டகை | kai-vaṭṭakai, n. <>id. +. A kind of metal vessel; பாத்திரவகை. கைவட்டகை யொன்று (S. I. I. ii, 418, 81). |
கைவட்டணை | kai-vaṭṭaṇai, n. <>id. +. Gand pose in dancing; கையாற்செய்யும் அபிநயம். (சீவக. 1257, உரை.) |
கைவட்டி | kai-vaṭṭi, n. <>id. +. Small ola basket; சிறிய ஓலைப்பெட்டி. |
கைவண்டி | kai-vaṇṭi, n. <>id. +. Gandcart, barrow, perambulator, trundle; கையால் இழக்கும் வண்டி. |
கைவந்தவன் | kai-vantavaṉ, n. <>id. +. A practised hand; பழகித் தேர்ந்தவன். வித்தை கை வந்தவன். |
கைவந்தி | kai-vanti, n. <>id. +. prob. bandha. Bracelet worn on the arm just below the shoulder; தோளின்கீழாகக் கையில் அணியப்படும் ஓரணி. விளக்கமுற்றிய கைவந்தியினையும் (மதுரைக். 415, உரை). |
கைவர்த்தம் | kaivāttam, n. <>Kaivarta. A chief Purāṇa. See பிரமவைவர்த்தம். (சூடா.) |
கைவரிசை | kai-vāicai, n. <>கை5 +. 1. Strength, prowess; திறமை. Colloq. 2. Liberality; 3. Right to serve first in a game of cards; |
கைவரை | kai-varai, n. <>id. +. See கைரேகை. (W.) . |
கைவரைச்சம்பா | kai-varai-c-campā, n. <>id. +. A kind of campā paddy; நெல் வகை (பதார்த்த. 803.) |
கைவல்யம் | kaivalyam, n. <>Kaivalya. See கைவல்லியம். . |
கைவல்லபம் | kai-vallapam, n. <>கை5+. 1. Power or strength of arm; புயவலிமை. 2. Dexterity of hand, skill in handicraft; |
கைவல்லியநவநீதம் | kaivalliya-navanī-tam, n. <>Kaivalya +. An Advaita treatise in Tamil by Tāṇṭavarāya-cuvāmi; தாண்டவராய சுவாமி தமிழ்ச்செய்யுளில் இயற்றிய ஓர் அத்துவிதநூல். |
கைவல்லியம் | kaivalliyam, n. <>Kaivalya. 1. Absolute oneness, perfect isolation; ஏகமான தன்மை. நிர்விஷய கைவல்யமாநிஷ்கள (தாயு. கருணா. 1). 2. Final emancipation; 3. Success, gain; 4. Upanisad, one of 108; |
கைவலச்செல்வன் | kaivala-c-celvaṉ, n. <>id. +. Arhat, as one possessing the wealth of final emancipation; [மோட்சமாகிய செல்வத்தை யுடையவன்] அருகன். கருமக் கடல்கடந்த கைவலச்செல்வன் (சீவக. 2741). |
கைவலம் | kaivalam, n. <>id. +. Final emancipation; மோட்சம். இவை விடுத்தறானே யடையுங் கைவலம் (பிரபோத. 42, 15). |
கைவலி - தல் | kai-vali-, v. tr. <>கை5 +. To get out of control; to disobey; கைகடந்து போதல். சிறுமானிவ னம்மைக் கைவலிந்து (திவ். திருவாய். 6, 5, 7). |
கைவலை | kai-valai, n. <>id. + Small casting-net; ¤றுவலை. |
கைவழக்கம் | kai-vaḻakkam, n. <>id. +. 1. Liberality, munificence; கையின் கொடைக் குணம். திருக்கை வழக்கம். 2. See கைவிளக்கம், 2. 3. Perquisites of the priest or servant of a temple; 4. Money and other gifts to five of the kutimakkal on the day after the funeral ceremony; |
கைவழங்கு - தல் | kai-vaḻaṅku-, v. <>id. +. tr. To give; கொடுத்தல்.--intr. 1. See கையடி-, 1. வெஞ்சமா ர் விளைக்கவே கைவழங்குகென (பாரத. கிருட். 120). |
கைவழி 1 | kai-vaḻi, n. <>id. +. 1. Lute, as an instrument held in the hand; [கையினிடமிருப்பது] யாழ். கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி (புறநா. 149, 3). 2. That which is sent by a person; 3. Individual, person; 4. See கைராசி. Loc. 5. Small branch of a river; 6. Small branch of a river; |
கைவழி 2 | kaivaḻi, n. cf. கையொலி. See கைலி1. Colloq. . |
கைவளச்சம்பா | kai-vaḷa-c-campā, n. <>கைவளம்+. A species of campā paddy with bright colour and pleasant taste; நிறமும் இனிமையுமுள்ள சம்பாநெல்வகை. (W.) |
கைவளம் | kai-vaḷam, n. <>கை5+. 1. See கைராசி. . 2. Property on hand; 3. Fertility, luxuriance, richness of soil; 4. Skill in workman ship; |
கைவளர் - தல் | kai-vaḷar-, v. intr. <>id. +. 1. To be carefully tended; போற்றப்பட்டு வளர்தல். கைவளர் மயிலனாளை (கம்பரா. கோலங்.18). 2. To be accustomed, experienced; |