Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொக்குமீன் | kokku-mīṉ, n. <>id. +. Long-nosed fish. See ஊசிக்கழுத்தி. (M. M. 203.) |
| கொக்குவம் | kokkuvam, n. <>kōkkōha. See கொக்குகோகம். மையறு கொக்குவம் பரதமலி கணிதஞ் சத்தம் (வள்ள. சுருதி. பாயி. 9). . |
| கொக்குவாய் | kokku-vāy, n. <>கொக்கு1+. The hook of a clasp in an ornament held by the paṭu-kaṇṇi; ஆபரணத்திற் படுகண்ணியிற்செருகும் பூட்டு. கொக்குவாய் ஒன்றும் (S. I. I, ii, 396, 150). |
| கொக்கேறி | kokkēṟi, n. Sola pith. See நெட்டி. (L.) |
| கொக்கை | kokkai,, n. See கொக்கி. (J.) . |
| கொக்கைக்கல் | kokkai-k-kal, n. perh. கொற்கை+ Coral stone; ஆட்டுக்காற்கல். (W.) |
| கொக்கைச்சத்தகம் | kokkai-c-cattakam, n. <>கொக்கை+. Small bill-hook; ஒருவகைச் சிறு கத்தி. (W.) |
| கொக்கைச்சால் | kokkai-c-cāl, n. perh. U. kuṣki. Balk in ploughing; உழவுச்சால்படாத தரை. (J.) |
| கொக்கோகம் | kokkōkam, n. <>kōllōja/ A treatise on erotics translated from Sanskrit by Varakuṇarāma Pāṇṭiyan; வரகுணராமபாண்டியனால் வடமொழியினின்றும் மொழிபெயர்க்கப்பட ஒரு காமநூல். |
| கொக்கோவெனல் | okkōveṉal n. Onom. expr. of cackling, clucking; ஒர் ஒலிக்குறிப்பு. |
| கொகுடி | kokuṭi, n. A variety of jasmine creeper; முல்லைக்கொடிவகை குவிமுகையன கொகுடி (சூளா. தூது. 4). |
| கொங்கணம் | koṅkaṇam, n. <>Kōṅkaṇa. 1. Konkan, the low country of Western India between the Ghats and the Arabian Sea extending from Goa to Guzerat, one of 56 tēcam, q.v.; மேற்குத்தொடர்ச்சிமலைக்கு மேற்கும் அரபிக்கடலுக்குக் கிழக்கும் கூர்ச்சரத்துத் தெற்கும் கோவாவுக்கு வடக்குமாக உள்ளதும் ஐம்பத்தாரு தேசங்களுள் ஒன்றுமான நாடு. (நன். 272, மயிலை.) 2. Language of Konkan, one of 18 languages referred to in Tamil works; |
| கொங்கணர் | koṅkaṇar, n. <>id. 1. Inhabitants of Konkan; கொங்கணதேசத்தார். 2. An ancient Tamil Siddha; |
| கொங்கணவர் | koṅkaṇavā, n. <>id. See கொங்கணர். கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா? . |
| கொங்கணி 1 | koṅkaṇi, n. <>id. Inhabitant of Konkan; கொங்கணதேசத்தான். |
| கொங்கணி 2 | koṅkaṇi, n. See கொங்காணி. (W.) . |
| கொங்கம் | koṅkam, n. <>கொங்கு. (யாழ். அக.) 1. A portion of the Tamil country. See கொங்கு. 2. A mineral poison; |
| கொங்கராயர் | koṅka-rāyar, n. prob. கொங்கம்+. 1. Title of poligars of the Uṭaiyār caste, probably from Koṅkarāya-pāḷaiyam in Kallakkurichi taluq of S. Arcot; தென்னார்க்காடு ஜில்லாகள்ளக்குறிச்சித் தாலுகா கொங்கராயபாளையத்திலுள்ள உடையார்சாதியைச்சார்ந்த பாளையக்காரர்களின் பட்டப்பெயர். 2. Title of a Kaḷḷar sub-caste; |
| கொங்கரி | koṅkāi, n. prob. கொங்கு+அரி. Cardamom; ஏல அரிசி. (மலை.) |
| கொங்கன் | koṅkaṉ, n. <>id. 1. Inhabitant of the Koṅku country; கொங்கநாட்டான். ஒளிறுவாட் கொங்கர் (குறுந். 393). 2. Cera king; |
| கொங்காணி | koṅkāṇi, n. Covering against rain; made of palmleaf, grass or reeds; மழையைத்தாங்க உடலிற்கவிக்கும் சம்பங்கூடை. |
| கொங்காரம் | koṅkāram, n. perh. கொங்கு+ஆர்-. Arnotto, s.tr., Bixa orellana; குங்குமம். (மலை.) |
| கொங்காளன் | koṅkāḷaṉ, n. <>id. +. A breed of horses probably of the Koṅku country; குதிரைவகை. (அசுவசா. 151.) |
| கொங்கு | koṅku, n. 1. [K. koṅgu, M. koṅṅu, Tu. koṅga.] The Tamil country comprising the districts of Combatore, Salem and a portion of Mysore; கோயம்புத்தூர் சேலம் ஜில்லாக்களும் மைசூர்ச்சீமையின் ஒரு பகுதியுமாக அடங்கிய தமிழ்நாடு. கொங்கிளங் கோசர் (சிலர். உரைபெறு. 2). 2. Farina, pollen of flowers; 3. Fragrance, odour; 4. Honey; 5. Toddy; 6. A dark kind of bottle-gourd; 7. Husk; |
| கொங்குவேள் | koṅku-vēḷ, n. <>கொங்கு+. Author of a Tamil classicla work known as Peruṅkatai; பெருங்கதையென்னுந் தமிழ்க்காவியம் இயற்றிய ஆசிரியர். கொங்குவேள் மாக்கதையைக் கூறேம் (சீவக. முகவுரை, 13). |
