Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொடியார்கூந்தல் | koṭiyār-kūntal, n. <>கொடியார்+. Seeta's thread. See அம்மையார் கூந்தல். (L.) |
| கொடியால் | koṭi-y-āl, n. <>கொடி+. A kind of banyan; ஆரமரவகை. (W.) |
| கொடியாள் 1 | koṭiyāḷ, n. <>id. Woman, slender and beautiful as a vine; கொடிபோன்ற பெண் கொடியாளை . . . மருமானுக் கருள்செய்ய (சீவக. 1057). |
| கொடியாள் 2 | koṭiyāḷ, n. <>கொடு-மை. Cruel woman; கொடுமையானவள். உள்ளமுங் கோடிய கொடியாள் (கம்பரா. மந்தரை. 81). |
| கொடியாள்கூந்தல் | koṭiyāḷ-kūntal, n. <>கொடியாள்1+. See கொடியார்கூந்தல். (W.) . |
| கொடியான் | koṭiyāṉ, n. <>கொடு-மை. Cruel man; கொடுமையானவன். கொடியார் வருமென்று குலாவுவதோ (கம்பரா. உருக்காட்டு. 9). |
| கொடியிலந்தை | koṭi-y-ilantai, n. <>கொடி+. A spreading shrub; இலந்தைவகை. (W.) |
| கொடியிறக்கு - தல் | koṭi-y-iṟakku-, v. intr. <>id. [M. koṭiyiṟakku] 1. To strike or lower a flag; ஏற்றினகொடியைத் தாழ்த்துதல். 2. To take down the temple flag, as indicating the close of a festival; 3. To pull or haul down a kite; |
| கொடியீச்சு | koṭi-y-īccu, n. <>id. + ஈந்து. Sago. See சவ்வரிசி. |
| கொடியெடு - த்தல் | koṭi-y-eṭu-, v. intr. <>id.+. To raise the standard as signal of challenge or victory; அறைகூவுகை, வெற்றி என்பவற்றின் அறிகுறியாகத் துவசம் பிடித்தல். நுண்கலை நீத்த நீந்திக் கொடியெடுத் தவர்க்குநல்கு (சீவக. 2911). |
| கொடியெலுமிச்சை | koṭi-y-elumiccai, n. <>id. +. Italian lemon, m.tr., Citrus medica limonum-typica; எலுமிச்சைவகை. (பதார்த்த. 678.) |
| கொடியேற்றம் | koṭi-y-ēṟṟam, n. <>id. +. Hoisting a flag in the temple at the commencement of a periodical festival; திருவிழாத்தொடக்கத்தில் கொடிமரத்தில் கொடியை யுயர்த்துகை. |
| கொடியேற்று - தல் | koṭi-y-ēṟṟu-, v. intr <>id. +. To hoist a flag in a temple indicating the beginning of a periodical festival; கோயிலில் திருவிழாத் தொடக்கத்தில் துவசம் உயர்த்துதல். திருக்கொடியேற்று நான்று (S. I. I. ii, 125). |
| கொடியேற்று | koṭi-y-ēṟṟu, n. <>id. + [M. koṭi-y-ēṟṟu, See கொடியேற்றம். காமன் கொடியேற்றென வியப்ப (குமர. பிர முத்துக். 77). . |
| கொடியோடு - தல் | koṭi-y-ōṭu-, v. intr. <>id. +. Loc. 1. To shoot forth tendrils; கொடியுண்டாகிப் படர்தல். 2. To be marked with long lines, as palm; to be marked with fine red capilary streaks, as eyes, etc.; 3. To be feeble, as breath at the time of death; |
| கொடியோன் 1 | koṭiyōṉ, n. <>கொடு-மை. Cruel man; தீயவன். கொடியோர்த் தெறுதலும் (புறநா. 29, 9). |
| கொடியோன் 2 | koṭiyōṉ, n. prob. கொடியோள். of. kumārī. Alon. See கற்றாழை. (மலை.) |
| கொடிவசலை | koṭi-vacalai, n. See கொடிப்பசலை. (பதார்த்த. 597.) . |
| கொடிவயலை | koṭi-vayalai, n. See கொடிப்பசலை. . |
| கொடிவலி - த்தல் | koṭi-vali-, v. intr. <>கொடி+. (J.) 1. To draw in the string of a kite; காற்றாடிக்கயிற்றை இழத்தல். 2. To draw out a withe for use; |
| கொடிவழி | koṭi-vaḻi, n. <>id. +. Loc. 1. Footpath; ஒற்றையடிப்பாதை. 2. Genealogical tree; |
| கொடிவழித்தீர்த்தம் | koṭi-vaḻi-t-tīrttam, n. <>id. +. A sacred spring on Tirupathi hills; திருப்பதிமலையிலுள்ள ஒரு புண்ணிய தீர்த்தம். கொடி வழித்தீர்த்த முதலிய மிக்க . . . வேங்கடம் (சிலப். 11, 41, உரை). |
| கொடிவழுதலை | koṭi-vaḻutalai, n. <>id. +. A kind of nightshade, Solanum; வழுதுணைவகை. (யாழ். அக.) |
| கொடிவாகனன் | koṭi-vākaṉaṉ, n. <>id. +. Lit., one having the crow for his vehicle. Saturn; [காக்கையை வாகனமாகவுடையவன்] சனி. (சோதிட. சிந்.) |
| கொடிவிடு - தல் | koṭi-viṭu-, v. intr. <>id. +. 1. See கொடியோடு-, 1. . 2. To increase, shoot up; |
| கொடிவீசு - தல் | koṭi-vīcu-, v. intr. <>id. +. See கொடியோடு-, 1. . |
| கொடிவீடு | koṭi-vīṭu, n. <>id. +. Arbour, summer house; படர்கொடிகளால் அமைந்த வீடு. (பெருங். உதயணன்சரித். பக்.199.) |
| கொடிவேலன் | koṭi-vēlaṉ, n. Divi-divi. See திவிதிவி. (M. M. 278.) |
| கொடிவேலி | koṭi-vēli, n. <>கொடுவேலி. 1. Ceylon leadwort. See கொடுவேலி. (பதார்த்த. 484.) 2. Rosy-flowered leadwort; |
