Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொடுங்காய் | koṭu-ṅ-kāy, n. <>id. +. Lit., crooked fruit. Cucumber. See [வலைவுள்ள காய்] வெள்ளரி. வாள்வரிக் கொடுங்காய் (சிலப். 16, 25). |
| கொடுங்குன்றம் | koṭu-ṅ-kuṉṟam, n. <>id. +. Pirāṉmalai, a hill and a town in the Ramnad district; இராமநாதபுரம் ஜில்லவிலுள்ள பிரான் மலை. (தேவா.) |
| கொடுங்கை | koṭu-ṅ-kai, n. <>id. + [ M. koṭuṅkai.] 1. Folded arm; மடித்த கை. மன்னர் மன்னவன் கொடுங்கைமேற் றுயின்றனள் (நைடத. கான்புகு. 21). 2. Curved cornice or projection on the sides or front of a building, car, etc.; 3. Severity, harshness, oppression; |
| கொடுங்கைத்தாடி | koṭuṅkai-t-tāṭi, n. <>கொடுங்கை+. A long, rounded beard; நீண்டு வளைந்த தாடி. (W.) |
| கொடுங்கோபிச்சிலை | koṭu-ṅ-kōpi-c-cilai, n. prob. கொடு-மை+. A kind of yellow stone; ஒருவகை மஞ்சள்நிறக்கல். (W.) |
| கொடுங்கோல் | koṭu-ṅ-kōl, n. <>id. +. Lit., curved sceptre, Unjust or unrighteous rule, despotic government, tyranny, opp. to ceṅ-kōl; [வலைந்த கோல்] நீதிநெறிதவறிய அரசாட்சி. கொடுங்கோ லுண்டுகொல் (சிலப். 23, 111). |
| கொடுங்கோன்மை | koṭu-ṅ-kōṉmai, n. <>id. +. See கொடுங்கோல். (குறள், 56, அதி.) . |
| கொடுசூரி | koṭu-cūri, n. <>id. + சூர். Cruel, wicked woman, as Kāḷi; மூர்க்கம் மிக்கவள். |
| கொடுசூலி | koṭu-cūli, n. <>id. + šūla. See கொடுசூரி. . |
| கொடுசூலித்தனம் | koṭu-cūli-t-taṉam, n. <>id. +. Extrene wickedness or cruelty, applied to women; மிக்க மூர்க்கத்தன்மை. Colloq. |
| கொடுஞ்சி | koṭuci, n. See கொடிஞ்சி. பூண்ட பொன்னுகக் கொடுஞ்சி . . . கடுஞ்செல லாழித்திண்டேர் (பெருங். உஞ்சைக். 48, 15). . |
| கொடுஞ்சூரி | koṭu--cūri, n. <>கொடு-மை+. See கொடுசூரி. (W.) . |
| கொடுஞ்சொறி | koṭu--coṟi, n. <>id. +. Mange, scab or itch in animals; மிருகங்களுக்குக் காணுஞ் சொறிநோய்வகை. |
| கொடுத்துவை - த்தல் | koṭuttu-vai-, v. <>கொடு-+. tr. To entrust or charge with; நம்பிக்கையா யொருவரிடம் பொருளை வைத்தல்.--intr. |
| கொடுதலை | koṭutalai, n. <>id. Giving, paying; பணம்முதலியன் செலுத்துகை. Loc. |
| கொடுதலைமுடிச்சு | koṭutalai-muṭiccu, n. <>கொடு-மை+. See கொடுமுடிச்சு, 1. Loc. . |
| கொடுதி | koṭuti, n. Peg for fastening a tenon in a mortise; மரவாணி. (J.) |
| கொடுந்தமிழ் | koṭu-n-tamiḻ, n. <>கொடு-மை+. Tamil dialect current in regions surrounding cen-tamiḻ-nāṭu; செந்தமிழ்நாட்டைச் சூழ்ந்திருக்கும் நிலங்களில் வழங்கும் தமிழ்மொழி. (நன். 273, உரை.) |
| கொடுந்தமிழ்நாடு | koṭu-n-tamiḻ-nāṭu, n. <>கொடுந்தமிழ்+. Regions where koṭun-tamiḻ is spoken, 12 in number, viz., teṉ-pāṇṭi kuṭṭam, kuṭam, kaṟkā, vēṇāṭu, pūḻi, paṉṟi, aruvā, aruvā-vaṭatalai, cītam, malāṭu, puṉaṉāṭu; Cēṉāvaraiyar giving கொடுந்தமிழ் பேசப்படுவனவாகிய தென்பாண்டி. குட்டம், குடம் கற்கா, வேணாடு பூழி, பன்றி, அருவா, அருவாவடதலை, சீதம், மலாடு புனனாடு என்னும் பன்னிரு நிலங்கள். (நன். 273, உரை; தொல். சொல். 400, சேனா.) |
| கொடுந்தலைப்பொருவா | koṭu-n-talai-p-poruvā, n. <>கொடு-மை+. Anchovy, a sea-fish, silvery, tinged with gold, attaining 6 in. in length, Engraulis kammalensis; ஆறங்குலநீளமும் பொன்மைகலந்தவெண்ணிறமும் உள்ள கடல்மீன்வகை. |
| கொடுந்துயர் | koṭu-n-tuyar, n. <>id. +. Lit., extreme pain, Death; [மிக்க துயரம்] சாவு. குரவர்க் குற்ற கொடுந்துயர் கேட்டு (மணி. 3, 18). |
| கொடுந்தொழிலாளன் | koṭu-n-toḻil-āḷaṉ, n. <>id. +. Lit., one given to cruel deeds, Yama; [கொடுஞ்செய்கையுள்ளவன்] யமன். கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப (மணி. 6, 100). |
| கொடுநாக்கு | koṭu-nākku, n. <>id. +. See கருநாக்கு. . |
| கொடுநாக்கெறி - தல் | koṭu-nākkeṟi-, v. intr. <>id. +. To lick one's lips in relish or anticipation of food; விருப்பக்குறியாக நாவால் வாய்ப்புறத்தைத் துழாவுதல். (அகநா. 56, உரை.) |
| கொடுநுகம் | koṭu-nukam, n. <>id. +. 1. Yoke; நுகத்தடி. கொடுநுக நுழைந்த கணைக்கா லத்திரி (அகநா. 350). 2. Plough; 3. The 10th nakṣatra. See |
| கொடுப்பு 1 | koṭuppu, n. <>கொடு-. 1. Giving; கொடுக்கை. 2. Playful dealing of blows; |
| கொடுப்பு 2 | koṭuppu, n. cf. கதுப்பு. Cheek, jaws; கதுப்பு. (W.) |
