Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொடுமுடிச்சு | koṭu-muṭiccu, n. <>id.+. (W.) 1. Hard, inextricable knot; அவிழ்க்கமுடியாத முடிச்சு. 2. Malignant plot, vile conspiracy; |
| கொடுமுடிந்தவழக்கு | koṭu-muṭinta-vaḻaku, n. <>கொடி+. See கொடிமுடிந்தவழக்கு. Loc. . |
| கொடுமுண்டி | koṭumuṇṭi, n. Bushy roundish-leaved sweet thorn. See சொட்டைக்களா. (L.) |
| கொடுமுறுக்கு | koṭu-muṟukku, n. <>கொடு-மை+. Inextricable twisting of strands or inextricable knots in a string; நூலின் மிகச்சுற்றியேறிய முறுக்கு. |
| கொடுமூலை | koṭu-mūlai, n. <>id.+. Out-of-the-way corner; எளிதில் அறிந்து செல்லக்கூடாத மூலையிடம்.Loc. |
| கொடுமை | koṭumai, n. <>கோடு-. [M. koṭuma.] 1. Cruelty, tyranny, inhumanity; குரூரம். கொடுமைபல செய்தன (தேவா. 945, 1). 2. Severity, harshness; 3. Roughness, uncouthness; 4. Vileness, wickedness; 5. Crookedness, obliquity; 6. Partiality, bias; 7. Injustice; 8. Sin; 9. Harsh words, slander; 10. A mineral poison; |
| கொடுமைசொல்(லு) - தல் | koṭumai-col-, n. intr. <>கொடு-மை+. To speak harsh or cruel words; நிஷ்டூரம் பேசுதல். Colloq. |
| கொடுமைத்தானம் | koṭumai-t-tāṉam, n. <>id.+. (Astrol.) Lit., place foreboding calamity. the eighth house from the ascendant; [துன்பந் தோற்றுவிக்கும் இடம்] இலக்கினத்துக்கு எட்டாமிடாம். (சங். அக.) |
| கொடுவரி | koṭu-vāi, n. <>id.+. Lit., that which has curved stripes. Tiger; [வளைந்த வரிகளுதையது] புலி. கொடுவரி வழங்குங் கோடுயர் நெடுவரை (புறநா. 135, 1). |
| கொடுவா - தல்[கொடுவருதல்] | koṭu-vā-, v. tr. <>கொள்-+. To bring; கொண்டுவருதல். கொடுவருதி ரிரதமெனக் கூறலோடும் (கந்தபு. தாரக. 31). |
| கொடுவாய் 1 | koṭu-vāy, n. <>கொடு-மை+. 1. Curved or bent edge, as of a bill-hook; வாள் முதலியவற்றின் வளைந்த வாய். கொடுவாய்க் குயத்து (சிலப். 16. 30). 2. Tale-bearing, back biting; 3. Reproach, slander; 4. Cockup, grey, attaining 5 ft. in length, Lates calcarifer; 5. A species of tiger; |
| கொடுவாய் 2 | koṭu-vāy, n. <>கொடு-மை+. See கோடைவாய். . |
| கொடுவாயிரும்பு | koṭu-vāy-irumpu, n. <>id. +. Iron hook, as of an angle; தூண்டில்முதலியவற்றிலுள்ள இரும்புக்கொக்கி. கொடுவாயிரும்பின் கோளிரை துற்றி (அகநா. 36, 2). |
| கொடுவாவல் | koṭu-vāval, n. See கொதுவாய்1, 4. . |
| கொடுவாள் | koṭu-vāḷ, n. <>கொடு-மை+. [T. kodavali, M. koṭuvāḷ.] 1. Pruning-knife, bill-hook, sickle; அரிவாள். 2. Battle-axe; |
| கொடுவாளை | koṭu-vāḷai, n. See கொடுவாய்1, 4. (W.) . |
| கொடுவினை | koṭu-viṉai, n. <>கொடு-மை+. Evil deeds of former births; முற்பிறப்பிற் செய்த தீவினை. கொடுவினையா ரென்றும் குறுகாவடி (தேவா. 969, 2). |
| கொடுவிஷம் | koṭu-viṣam, n. <>id. +. 1. Fatal poison, venom; கொல்லுந் தன்மையுள்ள விஷம். 2. A mineral poison; |
| கொடுவேரி | koṭu-vēri, n. <>id. + வேர். [M. koṭuvēri.] See கொடுவேலி. செங்கொடுவேரி தேமா மணிச்சிகை (குறிஞ்சிப். 64). . |
| கொடுவேலி | koṭu-vēli, n. <>id. + [M. koṭuvēli.] Ceylon leadwort, climber, Plumbago zeylanica; சித்திரமூலம் என்னுங் கொடி. (மலை.) |
| கொடுவை | koṭuvai, n. <>id. Wickedness, mischievousness; துஷ்டத்தனம். கொடுவைப் பசுக்கலை (ஈடு, 4, 8, 4). |
| கொடூரம் | koṭūram, n. <>kaṭhōra [M. koṭūram.] Cruelty, severity, harshness; குரூரம். |
| கொடை | koṭai, n. <>கொடு-. [K. kōdu, kodage.] 1. Giving away, as a gift; donation; தியாகம். இல்லான் கொடையே கொடைப்பயன் (நாலடி, 65). 2. (Puṟap.) Theme of a king distributing liberally to the poor the enemy's cattle captured by him; 3. Three days festival of a village deity, dist. fr. paṭukkai; 4. Round abuse; 5. Round blows; |
