Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொடைக்கடம் | koṭai-k-kaṭam, n. <>கொடை+. Charity-giving, considered a duty; கொடையாகிய கடமை. கொடைக்கடம் பூண்ட கொள்கைய னாகி (பெருங்.நரவாண. 8, 43). |
| கொடைக்கானல் | koṭai-k-kāṉal, n. <>கோடை+. See கோடைக்கானல். . |
| கொடைக்கை | koṭai-k-kai, n. perh. கோடு+. Ridge of a roof; வீட்டின்முகடு. (பிங்.) |
| கொடைத்தம்பம் | koṭai-t-tampam, n. <>கொடை+. Column or pillar commemorating one's munificence; தியாகத்திற்கு அறிகுறியாக நாட்டுந் தம்பம். (W.) |
| கொடைநேர் - தல் | koṭai-nēr-, v. <>id.+. tr. 1. To agree to give one's daughter in marriage; மகளை மணஞ்செய்துகொடுக்க உடன்படுதல். ஆர்வுற்றெமர் கொடைநேர்ந்தார் (கலித்.104).--intr. 2. To promise or mentally resolve the celebration of a festive worship to a deity; |
| கொடைப்பணக்காரன் | koṭai-p-paṇa-k-kāraṉ, n. <>id. +. Man of great wealth; மிகுந்த செல்வமுள்ளவன். Loc. |
| கொடைமடம் | koṭai-maṭam, n. <>id. +. Unrestricted munificence, unlimited liberality; வரைவின்றிக் கொடுக்கை. கொடைமடம் படுத லல்லது (புறநா. 142, 5). |
| கொடைமுடி | koṭai-muṭi, n. Indian laburnum. See சரக்கொன்றை (சங். அக.) |
| கொடைமை | koṭaimai, n. <>கொடை. Munificence, liberality; கொடைத்தொழில். கொடுத்த லெய்திய கொடைமையனும் (தொல். பொ. 63). |
| கொடையாளன் | koṭai-y-āḷaṉ, n. <>id.+. Munificent person; ஈகையுள்ளவன். கோலக்கா மேவுங் கொடையாள (அருட்பா, i, விண்ணப். 16). |
| கொடையாளி | koṭai-y-āḷi, n. <>id. +. See கோடையாளன். . |
| கொடையெதிர் - தல் | koṭai-y-etir-, v. intr. <>id.+. 1. To make a gift or offering; கொடுத்தலை மேற்கொள்ளுதல். குத்தொக வரூஉங் கொடையெதிர் கிளவி (தொல். சொல். 99, இளம்பூர.). 2. To accept or receive a gift; |
| கொடையோன் | koṭaiyōṉ, n. <>id. +. See கொடையாளன். (பிங்.) . |
| கொடைவஞ்சி | koṭai-vaci, n. <>id. +. (Puṟao,) Theme of a king liberally rewarding his panegyrists with the spoils of war; போரில் வென்றுகொண்ட பொருளைப் பாடிய பாணர்க்கு அரசன் பரிசாக அளிப்பதைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 3, 16.) |
| கொடைவினா | koṭai-viṉā, n. <>id. +. Question implying willingness to give, as 'has he no dress?'; கொடுக்கும் நோக்கத்தோடு கேட்கும் வினா. சாத்தற்கு ஆடையில்லையோ என்பது கொடைவினா (நன். 385, உரை). |
| கொடைவீரம் | koṭai-vīram, n. <>id. +. Heroism in generosity, as the voluntary sacrifice of one's life for another; தியாகத்தில் காட்டும் வீரம். கொடைவீரமோ . . . சென்னி பண்பு (பெருந்தொ. 743). |
| கொண்கன் | koṇkaṉ, n. <>கொள்-. 1. Husband; கணவன். கூடிய கொண்கன் குறுக (பு. வெ. பெண்பாற். 12, 11). 2. Chief of the maritime tract; |
| கொண்கானம் | koṇkāṉam, n. <>koṅkaṇa. Mt. Konkaṇa; ஒரு மலை. பொன்படு கொண்கான நன்னன் (நற். 391). |
| கொண்ட | koṇṭa, pple. Mகொள்-. A word denoting comparison; ஓர் உவமவாசகம். யாழ் கொண்ட விமிழிசை (கலித். 29, 17). |
| கொண்டக்காரன் | koṇṭa-k-kāraṉ, n. A sub-caste of fishermen; மீன்வலைஞாரில் ஒரு வகுப்பினன் (யாழ். அக.) |
| கொண்டகுளம் | koṇṭakuḷam, n. Strychnine tree. See எட்டி. (மலை.) |
| கொண்டங்கட்டிப்பாய்ச்சு - தல் | koṇṭaṅ-kaṭṭi-p-pāyccu-, koṇṭaṅ-kaṭṭi-p-pāyccu-, To irrigate a field on a high level by damming a river or channel and forming a small reservoir; அணைகட்டி மேட்டுநிலத்தில் நீர்பாய்ச்சுதல். Loc. |
| கொண்டச்சாணி | koṇṭa-ccāṇi, n. Indian ipecacuanha. See கொண்டைச்சாணி. (மலை.) |
| கொண்டச்சானி | koṇṭa-c-cāṉi, n. See கொண்டைச்சாணி. (W.) . |
| கொண்டபாடு | koṇṭa-pāṭu, n. <>கொள்-+. Opinion, belief; கோட்பாடு. நெறியன்றி ஒருவர் தம்மை மனத்தின்கட் கொண்டக்கால் அக்கொண்ட பாட்டினின்றும் மீட்டுத் தெருட்டுதல் (பழ. 37, உரை). |
| கொண்டம் 1 | koṇṭam, n. See குறிஞ்சா, 3, (மலை.) . |
| கொண்டம் 2 | koṇṭam, n. <>குண்டம். Small reservor formed by damming a river or channel for irrigating field on a high level; மேட்டு நிலத்தில் பாய்ச்சுதற்காகத் தேக்கிய நீர்நிலை. Loc. |
