Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொண்டல் 1 | koṇṭal, n. koL 1. Receiving, taking; கொள்ளுகை. உணர்ங்கற் றலையிற்பலிகொண்ட லென்னே (தேவா. 614, 5); 2. [M. koṇṭal.] Cloud; 3. Rain; 4. [prob. misread as] Aries, a constellation of the zodiac; 5.See கொண்டற்கல் 6. A girls' game; |
| கொண்டல் 2 | koṇṭal, n. <>குணக்கு. 1. East wind; கீழ்காற்று. கொண்டன் மாமழை பொழிந்த . . . துளி (புறநா. 34, 22). 2. Wind; 3. East; |
| கொண்டல்வண்ணன் | koṇṭal-vaṇṇaṉ, n. <>கொண்டல்1+. [ M. koṇṭalvaṇṇan.] Viṣṇu, as the cloud-coloured; [மேகநிறமுடையவன்] திருமால். கொண்டல்வண்ணனை (திவ். அமலனாதி. 10). |
| கொண்டலாத்தி | koṇṭalātti, n. <>கொண்டை1+உலாத்து-. [T. koṇdalāṭi, M. koṇṭalāṭi.] 1. Hoopoe, having a beautiful crest erected at will, Upupaepops; குருவிவகை. (w.) 2. Hill bulbul, Otocompsa jocosa; 3. Madras bulbul, Pyconotus haemorhous; |
| கொண்டலை | koṇṭalai, n. perh. கொண்டல்1. Seaside Indian oak. See சமுத்திரக்கடம்பு. (L.) |
| கொண்டவன் | koṇṭavaṉ, n. <>கொள்-. Husband; கணவன். |
| கொண்டற்கல் | koṇṭaṟ-kal, n. <>கொண்டல்1+. A kind of black stone; மந்தாரச்சிலை. (யாழ். அக.) |
| கொண்டாட்டக்காரன் | koṇṭāṭṭa-k-kā-raṉ, n. <>கொண்டாடு-+. 1. Cheerful, jovial, sociable man; உற்சாகமுள்ளவன். 2. Associate, companion; |
| கொண்டாட்டம் | koṇṭāṭṭam, n. <>id. [T. koṇdāṭamu, M. koṇṭāṭṭam.] 1. See கொண்டாட்டு. காதலன் கொண்டாட்டத்தாலே களித்து (சீவக. 229, உரை). . 2. Joy, delight; 3. Celebration of a feast, any occasion on great elat, festivity; |
| கொண்டாட்டு | koṇṭāṭṭu, n. <>id. Praise, appreciation, fondling, caressing; பாராட்டல். கொண்டாட்டும் குலம்புனைவும் (திவ். திருவாய். 4, 9, 3). |
| கொண்டாடு - தல் | koṇṭāṭu-, v. <>கொள்-+ஆடு-. [M. koṇṭāṭu.] intr. 1. To enjoy a person's society, take pleasure in one's company; கூடிக் குலாவுதல்.--tr. 2. [T. koṇdādu, Tu. koṇdā-duni.] To praise, appreciate; to fondle, caress; 3. To celebrate, as a festival; to observe, as a holiday; to solemnize cherish, as grief; |
| கொண்டாரணியம் | koṇṭāraṇiyam, n. prob. T. koṇda+araṇya. Thick, impenetrable forest; நுழையழடியாத பெருங்காடு. கொண்டாரணிய்மான பிரதேசம். Colloq. |
| கொண்டான் | koṇṭāṉ, n. <>கொள்-. See கொண்டவன். கொண்டானிற் றுன்னிய கேளிர் பிறரில்லை (நன்மணி. 56). . 2. See கொண்டல்1, 6. (W.) |
| கொண்டான்கொடுத்தான் | koṇṭāṉ-ko-ṭuttāṉ, n. <>id. +. Persons who have entered into matrimonial alliance by the marriage of their sons and daughters; கொண்டுங்கொடுத்துஞ் சம்பந்தஞ் செய்தோர். Colloq. |
| கொண்டானடி - த்தல் | koṇṭāṉ-aṭi-, v. intr. <>கொண்டான்+. To dance in merriment; மகிழ்ச்சியால் கூத்தாடுதல். பேயெழும்பி யெழும்பிக் கொண்டானடிக்க (இராமநா. உயுத். 78). |
| கொண்டி 1 | koṇṭi, n. <>கொள்-. 1. Getting possession of, securing, as property; பிறர்பொருள் முதலியவற்றைக் கொள்ளுகை. நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர் (மதுரைக். 583). 2. Food; 3. [K. koṭṭaja.] Tribute; 4. Theft; 5. [M. koṇṭi.] Plunder, pillage; 6. Abundance; 7. [T. koṇṭe, K. koṇdegāra.] Insubordinate, naughty person or animal; 8. [M. koṇṭi.] Prostitute, concubine; 9. [K. Tu. koṇdi.] corner pin of a door on which it swings; 10. Clamp, cleat of a door lock; 11. [T. koṇdi.] The pin that holds the share to the plough; |
| கொண்டி 2 | koṇṭi, n. <>கொண்டியம். Loc. 1. Grievance; மனவருத்தம். உனக்கு அவன்மீது என்ன கொண்டி? இப்படியெல்லாம் அவதூறாகப் பேசுகிறாயே. 2. Ill-feeling, malice; 3. Tale-bearing, back-biting; |
