Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொண்டைகட்டிவேளாளர் | koṇṭai-kaṭṭi-vēḷāḷā, n. <>id. +. A sub-sect of Vēḷāḷs who put up their hair in a peculiar fashion, during marriage; விவாகத்தில் கொண்டையாகத் தலைமயிரை முடிக்கும் வேளாளவகையினர். Loc. |
| கொண்டைகுலைந்துபோ - தல் | koṇṭai-kulaintu-pō-, v. intr. <>id. +. To suffer loss of honour; அவமானப்படுதல். Loc. |
| கொண்டைச்சன் | koṇṭaiccaṉ, n. <>id. +. See கொண்டைச்சன் (யாழ். அக.) . |
| கொண்டைச்சாணி | koṇṭaiccāṇi, n. Indian ipecacuanha. See நஞ்சறுப்பான். (யாழ். அக.) |
| கொண்டைச்சான் | koṇṭaiccāṉ, n. <>கொண்டை1. See கொண்டலாத்தி (யாழ். அக.) . |
| கொண்டைச்சி | koṇṭaicci, n. <>id. See கொண்டைச்சான். (W.) . |
| கொண்டைச்சுத்தியல் | koṇṭai-c-cuttiyal, n. <>id. +. Goldsmith's or brazier's hammer; தட்டார்கருவிகளுள் ஒன்று. (J.) |
| கொண்டைத்திருகு | koṇṭai-t-tiruku, n. <>id. +. Ornament for the hair in the shape of a chrysanthemum flower with a spiral wire underneath, worn by women; மகளிர் தலையிலணியும் செவ்வந்திப்பூவடிவினதான திருகணிவகை. |
| கொண்டைத்துலா | koṇṭai-t-tulā, n. <>id. +. Picottah with a crest-like projection at the end to prevent the rope from slipping; கயிறு நழுவிவிடாதபடி கொண்டைகட்டிய துலாவகை. (W.) |
| கொண்டைதிருகி | koṇṭai-tiruki, n. <>id. +. Hole in the sill into which the corner-pin of a door is fitted; கதவுக்குடுமி செருகுந் துவாரம். (W.) |
| கொண்டைப்புல் | koṇṭai-p-pul, n. <>id. +. Trail grass. See மயிற்கொண்டை. (M. M. 916.) |
| கொண்டைப்பூ | koṇṭai-p-pū, n. <>id. +. See கொண்டைத்திருகு. . |
| கொண்டைமாறு | koṇṭai-māṟu, n. <>id. +. 1. Twings of a shrub with knob-like root; கொண்டைபோன்ற அடிப்பக்கமுடைய வளார். 2. Twings of a shrub with knob-like root; 3. A kind of broom with a knob-like handle; |
| கொண்டைமுசு | koṇṭai-mucu, n. id. [T. koṇdamuccu.] A large black-faced monkey; பெரிய கருங்குரங்கு வகை. (W.) |
| கொண்டைமுசுறு | koṇṭai-mucuṟu, n. <>id.+. [K. koṇdamusudi.] See கொண்டைமுசு. Vul. . |
| கொண்டைமேற்காற்றடிக்க | koṇṭai-mēṟ-kāṟṟaṭikka, adv. <>id.+. Lit., so that the breeze may play about the tuft. In a happy, care-free mood; [ தலைமயிரின்மேல் காற்று வீசும்படி] உல்லாசமாய். கொண்டைமேற்காற்றடிக்கத் திரியப்பெறாதே (திருவிருத். 23, வ்யா. பக். 150). |
| கொண்டையங்கோட்டைமறவன் | koṇ-ṭaiyaṅ-kōṭṭai-maṟavaṉ, n. See கொண்டைகட்டி மறவன். (E. T.) . |
| கொண்டையடுப்பு | koṇṭai-y-aṭuppu, n. <>கொண்டை1+. A kind of domestic oven; சூட்டடுப்பு. Loc. |
| கொண்டையன் | koṇṭaiyaṉ, n. <>id. A species of crested kite; உச்சிக்கொண்டையுள்ள பருந்துவகை. (J.) |
| கொண்டையாணி | koṇṭai-y-āṇi, n. <>id.+. Nail with round head, stud; மேற்கொண்டையுள்ள ஆணி. |
| கொண்டையூசி | koṇṭai-y-ūci, n. <>id. +. See கொண்டைக்குச்சு2. . 2. Pin; |
| கொண்டைவலை | koṇṭai-valai, n. <>id. +. A kind of shore-net used in catching sea-fish; கடலின் கரையிலிருந்து வீசி மீனைப்பிடிக்கும் ஒருவகை வலை. Loc. |
| கொண்டைவாகை | koṇṭai-vākai, n. <>id. +. Doon siriss tree, l.tr., Albizzia procera elata; வாகைமர வகை. (L.) |
| கொண்டோன் | koṇṭōṉ, n. <>கொள்-. Husband; கணவன். கொண்டோ னல்லது தெய்வமும் பேணாப் பெண்டிர் (மணி. 18, 101). |
| கொண்மூ | koṇmū, n. <>id. +. 1. Cloud; மேகம். நீருடைக் கொண்மூ (பெருங். உஞ்சைக். 43, 101). 2. Sky; |
| கொணங்கு | koṇaṅku, n. See குறிஞ்சா. . |
| கொணசில் | koṇacil, n. <>குணகு-. Bend, curve; கோணல். Loc. |
| கொணா - தல்[கொணர்தல்] | koṇā-, 13. v. tr. prob. கொண்டுவா-. To bring, take, fetch, conduct; கொண்டுவருதல். அருந்தவனைக் கொணர்துமென (கம்பரா. திருவவ. 38; நன். 160, மயிலை.) |
| கொணாரம் | koṇāram, n. perh. kuṇ. Bellowing of a buffalo; எருமையின் சத்தம். Loc. |
| கொணிசல் | koṇical, n. See கொணசில். Loc. . |
| கொத்தச்சக்கை | kotta-c-cakkai, n. <>கொத்தை+. Tender jack-fruit; பலாப்பிஞ்சு. |
| கொத்தடிமை | kottaṭimai, n. <>கொத்து3 + அடிமை. Servitude of a family en bloc; குடும்பத்தோடு அடிமையாகை. கொத்தடிமை யான குடிநான் பராபரமே (தாயு. பராபரக். 148). |
