Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொத்தம் 1 | kottam, n. Limit, boundary; எல்லை. (பிங்.) |
| கொத்தம் 2 | kottam, n. See கொத்தமல்லி (சங். அக.) . |
| கொத்தமல்லி | kottamalli, n. <>kustummburu [T. kottamalli, M. kottabākari.] 1. Coriander, coriandrum sativum; ஒருவகைச் செடி. 2. Coriander seed used as a condiment; |
| கொத்தமல்லிமணி | kottamalli-maṇi, n. <>கொத்தமல்லி+. A necklace worn by women; மகளிர் கழுத்தணிவகை. Parav. |
| கொத்தமல்லியம்மை | kottamalli-y-am-mai, n. <>id. + [M. kottamalliyamma.] Chicken-pox. See கொப்புளிப்பான். Loc. |
| கொத்தமல்லிவசூரி | kottamalli-vacūri, n. <>id. +. See கொத்தமல்லியம்மை. . |
| கொத்தமுரி | kottamuri, n. <>kustumburu [T. kottimiri, K. kottumari.] See கொத்தமல்லி. உருளரிசி கொத்தமுரி யென்றாற்போல (இறை. 2, உரை). . |
| கொத்தரிவாள் | kottāviraḷ, n. <>கொத்து-+அறிவாள். A kind of sickle; அரிவாள்வகை. |
| கொத்தல் | kottal, n. <>id. Packing, as of birds; பறவை முதலியன கொத்துகை. நெடுங்கணார் தோட்கிளி கொத்தலின் (சீகாளத். பு. நக்கீர. 30). |
| கொத்தலரி | kottalāi, n. <>கொத்து3+அலரி. A species of oleander; அலரிவகை. (W.) |
| கொத்தவரங்காய்ப்பின்னல் | kottava-raṅ-kāy-p-piṉṉal, n. <>கொத்தவரை+. Plaiting the hair of a child in the form of a cluster-bean; கொத்தவரங்காய்போலக் குழந்தைகட்குப் பின்னும் பின்னல்வகை. |
| கொத்தவரை | kottavarai, n. <>கொத்து3+அவரை. [M. kottavara.] Cluster-bean, a shrub, Cyamopsis psoralioides; செடிவகை. (பதார்த்த. 688.) |
| கொத்தவால் | kottavāl, n. <>U. kotwāl. Chief police officer for a city or town, superintendent of markets; நகரமுதலியவற்றின் காவற்றலைவன். |
| கொத்தவாற்சாவடி | kottavāṟ-cāvaṭi, n. <>கொத்தவால்+. [T. kotwālcāvaṭi.] 1. Police station or residence of a kottavāl; டாணா. Loc. 2. Central place in some towns serving as a market for provisions, etc.; |
| கொத்தவாற்சேவகன் | kottavāṟ-cēvakaṉ, n. <>id. +. Police constable under a kottavāl; கொத்தவாலின்கீழ் வேலைபார்க்குங் காவலாள். Loc. |
| கொத்தழி - தல் | kottaḻi-, v. intr. <>கொத்து3+அழி1-. To lie waste or desolate; to be in ruins; நிர்மூலமாதல். (W.) |
| கொத்தள - த்தல் | kottaḷa-, v. intr. <>id. + அள-. To pay wages in kind, as to an artisan; கூலியாகத் தானியங் கொடுத்தல். கூலிவேலை செய்தால் கொத்தளக்குமாறுபோல (சி. சி. 2, 21 மறைஞா.). |
| கொத்தளம் | kottaḷam, n. cf. Pāli koṭṭhaka. [T. kottadamu, K. kottaḷa, M. kottaḷam.] Part of a rampart, bastion, defensive erection on the top of a rampart; கோட்டைமதிலுறுப்புக்களுள் ஒன்று. (பிங்.) |
| கொத்தளி | kottaḷi, n. prob. கொத்து3+அழி. See கொத்தளிப்பாய். (W.) . |
| கொத்தளிப்பாய் | kottaḷi-p-pāy, n. <>கொத்துளி+. Mat made of rushes; புற்பாய். (பிங்.) |
| கொத்தன் 1 | kottaṉ, n. <>கொத்து-. Brick-layer; கட்டடவேலை செய்வோன். |
| கொத்தன் 2 | kottaṉ, n. <>கொத்து3. See சவண்டிக்கொத்தன். . |
| கொத்தன் 3 | kottaṉ, n. See கொத்தச்சக்கை. Loc. . |
| கொத்தனார் | kottaṉār, n. <>கொத்தன்1. Head mason; தலைமைக்கொத்தன். Loc. |
| கொத்தனை | kottaṉai, n. <>கொத்து3+அனை. A kind of small fish living in shoals; கூட்டமாகச்செல்லும் சிறுமீன்வகை. கொத்தனை யுகளு நன்னீர் (பாரத. சூதுபோர்.14). |
| கொத்தாள் | kottāḷ, n. <>கொத்து-+. Loc. 1. Hired labourer in agricultural operations; வயலில் கூலிக்கு வேலைசெய்யும் ஆள். 2. Slave; |
| கொத்தான் | kottāṉ, n. A parasitic leafless plant. See வாகைவகை. (பு. வெ. 8, 2, கொளு, உரை.) |
| கொத்தான்வாகை | kottāṉ-vākai, n. A species of sirissa; வாகைவகை. (பு. வெ. 8, 2, கொளு, உரை.) |
| கொத்தித்தின்(னு) - தல் | kotti-t-tiṉ-, v. tr. <>கொத்து-+. Lit., to peck and eat. To harass, torment; [கொத்தி யுண்ணுதல்] மிகுதியாகத் துன்பப்படுத்துதல். Colloq. |
| கொத்திதழி | kottitaḻi, n. <>கொத்து3+இதழி. Indian laburnum. See சரக்கொன்றை. (தைலவ. தைல. 135, 26.) |
| கொத்திப்பறத்து - தல் | kotti-p-paṟattu-, v. tr. <>கொத்து-+. To torment and drive off; துன்பப்படுத்தி வெருட்டுதல். |
