Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொம்மைகொட்டு - தல் | kommai-koṭṭu-, v. tr. <>கொம்மை+. 1. To call a person by clapping hands; to invite; தட்டியழைத்தல். கூற்றத்தைக் கொம்மைகொட்டி (சீவக. 1109). 2. To pat on the back, as in appreciation; |
| கொமாரப்பாறை | komāra-p-pāṟai, n. Horse-mackerel, glossy-green, attaining 5 ft. in length, Caranx rottlerii; ஐந்தடி நீளமுள்ளதும் பசுமைநிறத்ததுமான கடல்மீன்வகை. |
| கொய் - தல் | koy-, 1 v. tr. [T. kōyu, K. koy, M. koyka.] 1. To pluck, cull, as flowers; பறித்தல். பணிமலர் கொய்தும் பாவை புனைந்தும் (பெருங். இலாவாண. 19, 161). 2. To cut, reap; 3. To shear, crop, as hair; to trim, as plants; to snip off; 4. To choose, select; 5. To plait, gather into folds, as ends of a cloth; 6. To bristle, as manes of a horse; |
| கொய் | koy, n. <>U. khowai. A fresh-water fish, rifle-green, attaining 8 1/2 in. in length, Anabas scandens; எட்டரை அங்குலம் நீளமுள்ளதும் நன்னீரில் வாழ்வதும் பசியநிறத்ததமுழனு மீன்வகை. செம்புனல் கொய்யனைத்துங் கொணரும் (தேவா. 196, 3). |
| கொய்சகம் | koycakam, n. <>கொய்-. Puckered or tucked-up ends of a cloth, as a woman's ornamental pleating in a woman's dress hanging from the right hip; ஓரங்கொய்து சுருக்கப்பட்ட உடை. கொய்சக மருங்குறச் சேர்த்தி (கம்பரா. தேரேறு. 6). |
| கொய்சுவனம் | koycuvaṉam, n. See கொய்சகம். Colloq. . |
| கொய்யகச்சட்டி | koy-y-aka-c-caṭṭi, n. <>கொய்-+. A kind of earthen pot with brim; விளிம்புள்ள சட்டிவகை. (W.) |
| கொய்யகம் | koy-y-akam, n. <>id. + அகம். See கொய்சகம். . 2. Ornamental folds of cloth used as hangings in a hall; |
| கொய்யடி | koy-y-aṭi, n. <>id. +. See கொயடிநாரை. (W.) . |
| கொய்யடிநாரை | koyyaṭi-nārai, n. <>கொய்யடி+. Pelican ibis; வண்டானம் என்ற நாரை வகை. (திவா.) |
| கொய்யல் | koyyal n. See { koyyA } கொய்யா. கொங்கார் கோடலொடு கொய்யல் (பெருங் உந்சைக் 51, 51) |
| கொய்யா | koyyā, n. <>Braz.guayaba [T. goyyā, K. M. koyyā.] Guava, a tree, Psidium guyava; மரவகை. (பதார்த்த. 744.) |
| கொய்யாக்கட்டை | koyyā-k-kaṭṭai, n. prob. T. koyya+. 1. Cheat; இடுக்கிச் சட்டம். (C. E. M.) 2. Wooden pieces placed on either side of the axle supporting the cart-frame; |
| கொய்யாக்கயிறு | koyyā-k-kayiṟu, n. perh. id. +. A weaving instrument; நெசவு கருவிவகை. |
| கொய்யுளை | koy-y-uḷai, n. <>கொய்-+. 1. Horse's mane; குதிரைப் பிடர்மயிர். ஐயீ ராயிரங் கொய்யுளைப் புரவியும் (சிலப். 26, 134). 2. Horse; |
| கொய்னா | koyṉā, n. <>E. quinine. 1. Red cinchona bark, a tree, Cinchona succirubra; சுரப்பட்டை மரம். 2. Quinine, product of cinchona alkaloids; |
| கொரடா | koraṭā, n. <>Port. corda [T. korada, M. koraṭā.] Horse-whip, whip, scourge; குதிரைச் சவுக்கு |
| கொரநாடு | kora-nāṭu, n. Corr. of கூறைநாடு. |
| கொரலி | korali, n. <>குரல்1. 1. Italian millet, Setaria italica; தினை. (M. M. 893.) 2. White Italian millet, Panicum glaucum: |
| கொரவை | koravai, n. See குரவை. . |
| கொரான் | korāṉ, n. <>U. Qurān. The Koran. See குறான். |
