Word |
English & Tamil Meaning |
---|---|
அரிதினம் | ari-tiṉam n. <>Hari+. The 11th day in a lunar fortnight, sacred to Viṣṇu; ஏகாதசி. ஏதமறுந் துவாதசியி னிலங்கு மரிதினத்தும் (வேதாரணி. அந்தர்க். 1). |
அரிது | aritu n. <>அரு-மை. [T. arudu, K. aridu, M. arutu.] That which is difficult, unattainable, rare, precious; அருமையானது. |
அரிதொடர் | ari-toṭar n. <>அரி1-+. Chain at the entrance to a fort, capable, on mere contact, of serving the hands of approaching enemies; தொட்டாற் கையை அரியும் சங்கிலிப்பொறி. (திருவிளை. நகர. 27.) |
அரிந்தமன் | arin-tamaṉ n. <>arin-dama. 1. Subduer of foes; பகைவரை யடக்குவோன். (கம்பரா. மராமர. 12.) 2. Viṣṇu; |
அரிநூற்பொறி | ari-nūṟ-poṟi n. <>அரி1-+. Cord at the entrance to a fort so contrived as to cut off the hand that grasps it; தொட்ட கையை அரியும் நூற்பொறி. (சிலப். 15, 216, உரை.) |
அரிப்பரி - த்தல் | arippari- v.tr. <>அரிப்பு-+. To collect by sifting; கொழித்தெடுத்தல். கைத்தலத்த வுய்த்துச் சொரிந்திட் டரிப்பரித்தாங்கு (நீதி நெறி. 9). |
அரிப்பறை | ari-p-paṟai n. <>அரி3-+. Drum that overpowers the ear; அரித்தெழும் ஓசையையுடைய பறை. அரிப்பறை மேகலை யாகி யார்த்தவே (சீவக. 2688). |
அரிப்பன் | arippaṉ n. <>id. One who lives by sifting. See அரிப்புக்காரன். குருட்டரிப்ப னார்க்குங் குபேரனென்று பேரோ (ஒழிவி. பொது. 5). |
அரிப்பிரத்தம் | ari-p-pirattam n. <>Hari+prastha. Ancient Delhi. See இந்திரப்பிரஸ்தம். (பாரத. இராசசூ. 53.) |
அரிப்பிரியை | ari-p-piriyai n. <>id.+. Lakṣmī, the loved of Viṣṇu; இலக்குமி. (பிங்.) |
அரிப்பு | arippu n. <>அரி3-. 1. Sifting, separating; பிரித்தெடுக்கை. (நீதிநெறி. 9.) 2. Itching, pruritus; 3. Fault; 4. Anger; |
அரிப்புக்காரன் | arippu-k-kāraṉ n. <>அரிப்பு+. Sifter, one who lives by sifting; அரித்துப் பொருள்தேடுவோன். |
அரிப்புக்கூடை | arippu-k-kūṭai n. <>id.+. Riddle, sieve; சல்லடை. (W.) |
அரிப்புழுக்கல் | ari-p-puḻukkal n. <>அரி2+. Boiled rice; அரிசிச் சோறு. சமையக் கொட்டிய வாலரிப் புழுக்கலும் (திருவிளை. குண்டோ. 6). |
அரிப்பெட்டி | ari-p-peṭṭi n. அரி3-+. Sieve; சல்லடை. (W.) |
அரிபடைவட்டம் | ari-paṭai-vaṭṭam n. prob. அறல்படு-+. A hell of pointed stones, one of eḻu-narakam, q.v.; எழுநரகத் தொன்று. cf. சர்க்கராப்பிரபை. |
அரிபிளவை | ari-piḷavai n. <>அரி8-+. Cancer; விஷப்புண்வகை. (W.) |
அரிமஞ்சரி | ari-macari n. Indian acalypha. See குப்பைமேனி. (மலை.) |
அரிமணல் | ari-maṇal n. அரி3-+. Fine sand; நுண்மணல். |
அரிமணி | ari-maṇi n. <>hari+maṇi. Emerald; மரகதம். (பிங்.) |
அரிமணை | ari-maṇai n. <>அரி1-+. Blade fixed in a piece of wood. See அரிவாண்மணை. . |
அரிமதா | arimatā n. <>ari-mēda. Panicled babul. See வெள்வேல். (மலை.) |
அரிமா | ari-mā n. <>hari+ மா. Lion; சிங்கம். (நாலடி. 198.) |
அரிமாநோக்கம் | ari-mā-nōkkam n. <>id.+. The line of the lion's look whereby a cūttiram is connected with those that have preceded as well as those that follow, one of four cūttira-nilai, q.v.; சூத்திர நிலையுள் ஒன்று. (நன். 19.) |
அரிமான் | ari-māṉ n. <>id.+. See அரிமா. (கலித். 15.) |
அரிமுக்கை | ari-mukkai n. <>அரி2+மூன்று+கை. Three handfuls, an ancient tax on the paddy crop; மூன்று கைப்பிடியாக எடுக்கப்படும் ஒருவகை நெல்லாயம். அரிமுக்கையுட் பட்ட பல நெல்லாயங்களும். (S.I.I. i, 89). |
அரிமுகவம்பி | ari-muka-v-ampi n. <>hari+. Canoe with a lion figure-head; சிங்கமுகவோடம். அரிமுக வம்பியும்...இயக்கும்பெருந்துறை. (சிலப். 13, 177). |
அரிமேரை | ari-mērai n. <>அரி2+. Harvest perquisites of village servants; நெற்கள சுதந்திர வகை. |
அரிய | ariya adj. <>அரு-மை. Precious, dear, excellent, rare, diffucult; அருமையான. |
அரியகம் | ari-y-akam n. <>அரி3+அகம். An ancient, hollow, tinkling anklet. See காற்சரி. அரியகங் காலுக் கமைவுற வணிந்து. (சிலப். 6, 85). |
அரியசம் | ariyacam n. cf. aruja. Indian laburnum. See சரக்கொன்றை. (மலை.) |
அரியசாரணை | ariya-cāraṇai n. Species of Crataeva. See மாவிலங்கு. (மலை.) |
அரியண்டம் | ariyaṇṭam n. Dial. var. of அரிகண்டம்2. . |