Word |
English & Tamil Meaning |
|---|---|
| சமுதாடு | Camutāṭu, n. <>U. jamdhār. [T. jamudādi.] Dagger; ஈட்டிவகை. வேல்சமுதாடு வீரவாள் காட்டுதல் (பரத. பாவ. 20). |
| சமுதாய் - த்தல் | Camutāy-, 11 v. tr. <>U.Samjāishkarnā. [T.Samdāyicu.] 1. To manage with economy ; சமாளித்தல். Loc. 2. To reconcile; |
| சமுதாயக்கிராமம் | Camutāya-k-kirāmam, n. <>Samudāya + grāma. 1. Village held in common; குடிகள் பொதுவாக அனுபவிக்கும் நிலவருவாயுள்ள கிராமம். (R. T.) 2. Village, whose produce is divided equally between the proprietor and the cultivators; |
| சமுதாயகாரியம் | Camutāya-kāriyam, n. <>id. +. Public business; பொதுக்காரியம். (W.) |
| சமுதாயச்சீர்திருத்தம் | Camutāya-c-cir-tiruttam, n. <>id. +. Social reform ; ஜனசமுகத்தின் வழக்கவொழுக்கங்களை முன்னேற்றத்தின் பொருட்டுத் திருத்துகை. Mod. |
| சமுதாயசோபை | Camutāya-cōpai, n. <>id. +. Beauty of an object viewed as a whole; அங்கங்கள் தனித்தனியாகவன்றி ஒருங்குகூடுதலால் தோன்றும் அழகு. (சீவக. 1357, உரை.) |
| சமுதாயநிலம் | Camutāya-nilam, n. <>id. +. Land held in common by the villagers ; ஊர்ப்பொதுவாக இருந்து அனுபவிக்கப்படும் நிலம். |
| சமுதாயம் | Camutāyam, n. <>Sam-ud-āya. 1. Company, assembly; மக்களின் திரள். 2. Collection, as of things; 3. Managing committee of a temple; 4. That which is public, common to all; 5. Tenure by which the members of a village community hold the village lands, funds, etc., in common, or by which they divide them according to their shares; 6. Mutual agreement, compromise; |
| சமுதாயம்பேசு - தல் | Camutāyam-Pecu-, v. intr. <>சமுதாயம் +. To speak impartially and without bias; ஒருசார்புபற்றாது சொல்லுதல். (W.) |
| சமுதாயவாதி | Camutāya-vāti, n. <>id. +. A school of Buddhistic philosophers who hold that the world is nothing but a collection of mental elements, as maṉacu, putti, etc., and material elements like earth, water, air, light, etc.; மனம் புத்தி முதலிய அகச்சமுதாயத்தாலும், நிலம் நீர்முதலிய புறச்சமுதாயத்தாலும் உலகம் தோன்றுமென வாதிக்கும் பௌத்தமதப் பிரிவினனாகிய சௌத்திராந்திகனும் வைபாடிகனும். (சி. போ. பா. அவை. பக். 40.) |
| சமுதாயவிண்ணப்பம் | Camutāya-viṇṇap-pam, n. <>id. +. A general petition or request; mahazar; பலர் ஒன்றுகூடிச் செய்துகொள்ளும் மனு. Chr. |
| சமுதாயிகம் | Camutāyikam, n. <>id. +. That which combines or unites; ஒன்று கூடுவது. ஏககாலத்திலே சமுதாயிகமாக ஒரு காரியத்தைப் பண்ணுவது எவ்வாறு (சி.சி. 2, 56, சிவாக்.). |
| சமுதாளி | Camutāḷi, n. See சமுதாடு. (W.) . |
| சமுதிதபிரயோசனம் | Camutita-pira-yōcaṉam, n. <>Samudita +. Communion of saints; புண்ணியாத்துமாக்கள் பகிர்ந்துண்ணுகை. R. C. |
| சமுப்பவம் | Camuppavam, n. perh. sam-ud-bhava. A sticky plant growing in sandy places. See தைவேளை. (மலை.) . |
| சமுயமினி | Camuyamiṉi, n. Sam-yaminī. yama's capital; யமனது பட்டணம். (சி. போ. பா. 2, 3, பக்.206.) |
| சமுவரம் | Camuvaram, n. <>Sam-vara. (Jaina.) See சம்வரை. (சி. போ. பா. அவை. பக். 40.) . |
| சமுள் | Camuḻ n. Trincomalee red wood. See சவண்டலை. (மலை.) . |
| சமுற்கம் | Camuṟkam, n. <>Sam-ud-ga. Stanza in which two or more lines correspond in sound but differ in sense; இரண்டு அல்லது பல அடிகள் சொல்லளவில் ஒத்தும் பொருளளவில் வேறுபட்டும் வரும் மிறைக்கவி. (W.) |
| சமுற்பவம் | Camuṟpavam, n. <>Sam-ud-bhava. Birth, origin; பிறப்பு. (யாழ். அக.) |
| சமூ | Camū, n. See சமு. (சங். அக.) . |
| சமூகம் 1 | Camūkam, n. <>samūha. Assembly, multitude; திரள். சுரசமூகமும் (பாரத. குருகுல. 27). |
| சமூகம் 2 | camūkam, n. See சமுகம். . |
| சமூகம் 3 | Camūkam, n. <>Camūka. A division of an army consisting of three times the unit required for pirataṉai; பிரதனை மும்மடி கொண்ட சேனைவகுப்பு. (திவா.) |
| சமூகவாதம் | Camūka-vātam, n. <>samūha +. A doctrine which holds that the effect is simply the aggregate of its causes and nothing more; காரணத்தின்கூட்டமே காரியமாம் என்று கொள்ளும் வாதம். (சி. போ. பா, 2, 2, பக், 142.) |
