Word |
English & Tamil Meaning |
|---|---|
| சமூலம் | Camūlam, <>Sa-mūla. n. Whole, all; --adv. Wholly; வேர்முதல் இலையீறுகவுள்ள எல்லாம். (தைலவ. தைல. 41.) முழுவதும். |
| சமேதன் | Camētaṉ, n. <>Samēta. Companion, associate; கூடியிருப்பவன். அம்பைசமேதனாயமர்தலினால் (சங். அக.) |
| சமேதார் | camētār, n. <>U. jamdār. Indian military officer of the rank of lieutenant, second to the subhadar; சுபேதாருக்கு அடுத்த இராணுவ உத்தியோகஸ்தன். |
| சமை 1 - தல் | Camai-, 4 v. perh. அமை-. cf. sam-ay. [M. Camayu.] 1.To be made, constructed, formed; அமைதல்; 2. To get ready, to prepare; 3. To be suitable; --tr. To commence; |
| சமை 2 - தல் | Camai-, 4 v. intr. 1. [M. camay.] To mature; நிரம்புதல். மலர்ந்து சமைந்த தில்லைகாண் (திருவிருத். 68, வ்யா. 357). 2. To attain puberty, as a girl; 3. To be sultry, hot and close; 4. To be consumed, destroyed; --tr. To finish; |
| சமை - த்தல் | Camai-, 11 v. tr. Caus. of சமை- 1. To Create; படைத்தல். ஊர்வவெல்லாஞ் சமைக்குவென் (கம்பரா. மிதிலை. 117). 2. To do, perform; 3.To get ready, prepare; |
| சமை - த்தல் | Camai, v. tr. Caus. of சமை-, 1. (M. Came.)To cook; பாகஞ்செய்தல். 2.To kill, destroy; |
| சமை 1 | Camai, n. <>Samā. Year; வருஷம். |
| சமை 2 | Camai, n. See சமம். உட்கரணமடக்கல் சமை (வேதா. சூ. 11). . |
| சமை 3 | camai, n. <>kṣamā. Patience, fortitude; பொறுமை. சமையுளா ருணரு மெங்கடம்பிரான் (பிரபுலிங். வசவண்ணர்க. 40) |
| சமைகடை | Camai-kaṭai, n. <>சமை-+. Close, end; முடிவு. (யாழ். அக.) |
| சமைதார் | Camaitār, n. See சமேதார். (W.) . |
| சமைப்பு | Camaippu, n. <>சமை-. Action; effort; முயற்சி. சமைப்பாற் சமர்த்தாற்று மாற்றால் (அரிச். பு. இந்தி. 46). |
| சமையல் | Camaiyal, n. <>சமை-. 1. Cooking; சமைக்கை. 2.Cooked food; |
| சமையற்கட்டு | Camaiyaṟ-kaṭṭu, n. <>சமையல்+. Kitchen; சமையலறை. |
| சமையற்கூடம் | Camadyaṟ-kūṭam, n. <>id. +. See சமையற்கட்டு. . |
| சமையற்புரை | Camaiyaṟ-purai, n. <>id. +. See சமையற்கட்டு. Loc. . |
| சமைவு 1 | Camaivu, n. <>சமை-. State, situation; நிலைமை. தம்பியுந் தானு நிற்பதாயினான் சமைவீது (கம்பரா. அணிவ. 7). |
| சமைவு 2 | Camaivu, n. <>சமை-, Destruction; அழிவு. சமைவிலவெம் மிடற்றானை (இரகு. குறைகூறு. 51). |
| சமைவு 3 | Camaivu, n. See சமை. முனிவர்கள் சமைவொடும் வழிபட (தேவா. 35, 7). . |
| சமோகி | Camōki, n. Perh. Sama-bhōgya. Tenure in which village or lands of a community are held individually under periodical distribution; அடிக்கடி ஒருவர் கையிலிருந்து மற்றொருவர்கைக்கு மாறி அனுபவிக்கப்படும் கிராமநிலங்கள். N.A. (R.T.) |
| சய்யல் | cayyal, n. Resemblance. See சாயல். . |
| சய்யை | Cayyai, n. <>šayyā. Flow, as of a stanza; செய்யுட்போக்கு. பாட்டின் சய்யை நன்றாகவுள்ளது. |
| சய | Caya, n. <>Jaya. The 28th year of the Jupiter cycle; அறுபது ஆண்டுகளுள் இருபத்தெட்டாவது. |
| சயகண்டி | Caya-kaṇṭdi, n. <>id. + ghaṇṭā. Gong. See சேகண்டி. சங்கமொடு சயகண்டக்கை. (திருவேங். சத. 66). . |
| சயகண்டை | Caya-kaṇṭai, n. See சயகண்டி. (W.) . |
| சயகம் | Cayakam, n. cf. Sāyaka. Flower-bud; பூவரும்பு. (யாழ். அக.) |
| சயங்கொண்டசோழமண்டலம் | cayaṅ-koṇṭa-cōla-maṇṭalam, n. <>சயங்கொண்டசோழன்+. Toṇṭai-manṭalam called after the surname of the Chola king Raja-Raja I; முதலாம் இராஜராஜனது சிறப்புப்பெயரால் வழங்கிய தொண்டைமண்டலம். (I. M. P. N. A. 297). |
