Word |
English & Tamil Meaning |
|---|---|
| சயம்புலிங்கம் | Cayampu-līṅkam, n. <>சயம்பு+. One of Parārtta-liṅkam; பரார்த்தலிங்கத்தொன்று. (சைவச. பொது. 431.) |
| சயமகள் | Caya-makal, n. <>சயம்+. 1. Durgā, as Goddess of Victory. [வெற்றிக்குரிய பெண்] துர்க்கை. கலைமகள் சயமகள் (தேவா. 569, 11). 2. Gemini of the zodiac; |
| சயமரம் 1 | Cayamaram, n. <>Svayam-vara. Self-choice of a husband by a princess or a daughter of a Kṣdatriya at a public assembly of suitors. See சுயம்வரம். சயமர மறைதுமேனும் (சூளா. மந்திர. 119). . |
| சயமரம் 2 | Caya-maram, n. <>சயம்+. Triumphal arch; வெற்றிக் குறியான தோரணம். எத்திசையுஞ் சயமரங் கோடித்து (திவ். பெரியாழ்.1, 1, 8). |
| சயமாகீர்த்தியன் | Caya-mā-kīrttiyaṉ, n. A surname of Nilan-taru-tiruviṟ-pāṇṭiyaṉ who presided when Tolkāppiyam was accepted as a standard treatise; தொல்காப்பியம் அரங்கேற்றுங்காலத்தில் தலைமை வகித்த நிலந்தருதிருவிற் பாண்டியன். (சிலப். 8, 2, உரை.) |
| சயரோகம் | Caya-rōkam, n. <>kṣaya+. Tuberculosis; க்ஷயநோய். |
| சயவிசயர் | Caya-vicayar, n. <>Jaya + Vijaya. The twin-deities guarding the portals of Viṣṇu's residence at Vaikuṇṭam; வைகுண்டத்தில் திருமால் கோயிலின் வாயில்காவலரன இருவர். பரந்தாமன் சீர்ப் புனைமணி வாயில் காத்தபுகழ்ச் சயவிசயர் (பாகவ. 7, 1, 8). |
| சயனக்கிருகம் | Cayaṉa-k-kirukam, n. <>சயனம்+. Bed-room; படுக்கையறை. |
| சயனம் | Cayaṉam, n. <>šayana. 1. Bed, couch; படுக்கை. (திவா.) 2. Lying down, taking rest; 3. Sleeping; 4. Sexual union; |
| சயனி - த்தல் | Cayaṉi-, 11 v .intr. <>id. 1. To lie down, take rest; படுத்தல். 2. To sleep; 3. To have sexual intercourse; |
| சயா | Cayā, n. <>jayā. 1. Wind-killer. See வாதமடக்கி. (மலை.) . 2. Chebulic myrobalan. See கடுக்காய். (தைலவ. தைல.125.) |
| சயாலு | Cayālu, n. <>šayālu, Idle or sleepy fellow; நித்திரைச்சோம்பன். (யாழ். அக.) |
| சயி - த்தல் | Cayi-, 11 v. tr. <>jay. To conquer; வெல்லுதல். சலங்கொடு சயித்த வினை (சேதுபு. கத்துரு. 110). |
| சயிக்கம் | Cayikkam, n. <>T. saikamu. Fineness, thinness; மென்மை. சயிக்கச்சீலை. (யாழ். அக.) |
| சயிக்கர் | cayikkar, n. cf. caitya. Pipal. See அரசு. (மலை.) . |
| சயிக்கினை | Cayikkiṉai, n. <>Sam-jā. Significant gesture, as with hands; சைகை. |
| சயிக்கை | Cayikkai, n. See சயிக்கினை. Loc. . |
| சயிகை | cayikai, n. See சயிக்கினை. Loc. . |
| சயித்தகம் | Cayittakam, n. prob. caityaka. A treatise on architecture, one of 32 ciṟba-nūl, q.v.; சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று. (இருசமய. சிற்பசாத். 3.) |
| சயித்தம் | Cayittam, n. <>caitya. Buddhist temple. See சைத்தியம். வானோங்கு சிமையத்து வாலொளிச் சயித்தம் (மணி. 28, 131). . |
| சயித்தான் | Cayittāṉ n. <>U. shaitān. Satan, devil; பிசாசு. |
| சயித்தி | cayitti, n. cf. caitya. Pipal. See அரசு. (சங். அக.) . |
| சயித்தியக்கட்டி | cayittiya-k-kaṭṭi, n. prob. சயித்தியம் +. Tonsilitis, quinsy, Cynanche tonsillaris; கண்டக்கிரந்தி. (இங். வை.) |
| சயித்தியம் | Cayittiyam, n. <>šaitya. 1. Coldness, chillness; குளிர்ச்சி. 2. Cold season; 3. Coma; |
| சயிந்தர் | Cayintar, n. <>சிந்து. People of sind; சிந்துதேசத்தினர். விராடர் மயிந்தர் சயிந்தர்களே (கலிங். 317). |
| சயிந்தவம் 1 | cayintavam, n. <>Saindhava. 1. Horse; குதிரை. (பிங்.) 2. See சயிந்தவலவணம். (சூடா.) |
| சயிந்தவம் 2 | Cayintavam, n. Head; தலை. (சூடா.) |
| சயிந்தவலவணம் | Cayintava-lavaṇam, n. <>id. +. A kind of rock-salt found in Sind, one of paca-lavaṇam , q.v.; பஞ்சலவணத்துள் ஒன்றும் சிந்துதேசத்து உண்டாவதுமாகிய கல்லுப்பு வகை. |
| சயிந்தவி | Cayintavi, n. <>Saindhavī. (Mus.) (Mus.) A specific melody-type; ஒர் இராகம். (பரத. இராக. 55.) |
| சயிரேகம் | cayirēkam, n. <>Sairēyaka. Western Ghats blue nail dye. See மேகவண்ணக் குறிஞ்சி. (மலை.) . |
