Word |
English & Tamil Meaning |
|---|---|
| சயங்கொண்டசோழன் | Cayaṅ-koṇṭa-cōḻaṉ, n. <>jaya +. A surname assumed by the Chola king Raja-Raja I; சோழ அரசனான முதலாம் இராஜராஜன் சிறப்புப்பெயர்களுள் ஒன்று. |
| சயங்கொண்டதொண்டைமண்டலம் | cayaṅ-koṇṭa-toṇṭai-maṇṭalam, n. <>id. +. See சயங்கொண்ட சோழமண்டலம். (I. M. P. Madr. 315.) . |
| சயங்கொண்டமண்டலம் | Cayaṅ-koṇṭa-maṇṭalam, n. <>id. +. See சயங்கொண்ட சோழ மண்டலம். (I. M. P. N. A. 390.) . |
| சயங்கொண்டான் | Cayaṅ-koṇṭāṉ, n. <>id. +. The author of the kaliṅkattu-p-paraṇi, 11th c.; 11-ம் நூற்றாண்டினரும் கலிங்கத்துப்பரணி இயற்றியவருமான புலவர். பரணிக்கோர் சயங்கொண்டான். (தனிப்பா.) |
| சயசய | Caya-caya, int. <>id. + jaya. Expr. meaning 'May victory attend thee!' -- addressed to kings and great personages; வெற்றிகுறித்த வாழ்த்துமொழி. சயசய போற்றி போற்றி (திருவாச. 5, 62). |
| சயசீலன் | Caya-cīlaṉ, n. <>jaya +. Victorious person; வெற்றியாளன். |
| சயத்தம்பம் | Caya-t-tampam, n. <>id. + stambha. Triumphal column. ஜயஸ்தம்பம்.சயத்தம்பம் பல நாட்டி (கலிங். 10). |
| சயத்திரதன் | Cayattirataṉ, n. <>Jayad-ratha. A hero mentioned in Mahābhārata, king of the Sindhu country and brother-in-law of Duryōdhana; பாரதத்திற் கூறப்படும் சிந்துதேசவரசனும் துரியோதனன் சகோதரிகணவனுமான வீரன். (பாரத. பதின்மூன்றாம். 117.) |
| சயதரன் | cayataraṉ, n. <>Jaya-dhara. A surname of kulōttuṅka I, the hero of kaliṅkattu-p-paraṇi; கலிங்கத்துப்பரணித் தலைவனான முதற் குலோத்துங்கன் சிறப்புப் பெயர். சயதர னுயர்புலி தழைகவே (கலிங். 20). |
| சயதாளம் | Caya-tāḷam, n. prob. jaya +. (Mus.) A variety of time-measure, one of nava-tāḷam, q.v.; நவதாளத்தொன்று. (திவா.) |
| சயந்தகுமாரன் | cayanta-kumāraṉ, n. <>jayanta +. See சயந்தன் (சிலப். 3, 2 அரும்.) . |
| சயந்தம் | Cayantam, n. prob. jayanta. 1. Indra's audience hall; இந்திரனது ஒலக்கமண்டபம். (பிங்.) 2. A Nāṭya work in Tamil, not now extant; 3. (Nāṭya.) A kind of gesticulation with hand, one of 15 iṇai-k-kai, q.v.; |
| சயந்தமாலை | Cayanta-mālai, n. An astronomical treatise in Tamil; ஒரு சோதிடநூல். (W.) |
| சயந்தன் | Cayantaṉ, n. <>Jayanta. Indra's son; இந்திரனது குமாரன். இந்திர சிறுவன் சயந்தனாகென (சிலப். 3, 119). |
| சயந்தனம் | Cayantaṉam, n. <>Syandana. Chariot, car; தேர். ஆடகத் தசும்புறு சயந்தனம் (கம்பரா. கரன். 53). |
| சயந்தி | Cayanti, n. <>jayantī. 1. Birthday celebration. See ஜயந்தி. . 2. Wind-killer. See வாதமடக்கி. (மலை.) 3. Common sesban. See சிற்றகத்தி. (தைலவ. தைல. 89.) |
| சயநீர் | Cayanīr, n. Medicinal preparation of lime and sal-ammoniac. See செயநீர். Loc. . |
| சயபத்திரம் | aya-pattiram, n. <>jaya. +. Certificate of success; record of contentions with the final decision of a learned council; விவாதத்தில் தடைவிடைகளை முறைமையாக ஆய்ந்து அவையோரளிக்கும் வெற்றிப்பத்திரம். (பு. வெ. 8, 19, உரை.) |
| சயபருவதம் | Caya-paruvatam, n. <>Sahya. +. A mountain. See சகியம். ஆம்பல்பூத்த சயபருவத மடுவிலே (இராமநா. பக். 21). . |
| சயபாளம் | Cayapāḷam, n. <>jaya-pāla. Croton. See நேற்வாளம். (தைலவ.) . |
| சயபித்தம் | Cayapittam, n. prob.kṣaya-pitta. See சயரோகம். (W.) . |
| சயபேரி | Caya-pēri, n. See சயபேரிகை. . |
| சயபேரிகை | caya-pērikai, n. <>jaya +. Drum of victory; வெற்றிமுரசு. |
| சயம் 1 | Cayam, n. <>jaya. 1.Triumph, victory; வெற்றி. தண்ணீர்ப்பந்தர் சயம்பெறவைத்தும் (திருவாச. 2, 58). 2. Sun; |
| சயம் 2 | Cayam, n. <>caya. 1. Collection, assembly; கூட்டம். (உரி. நி.) 2. Garland; |
| சயம் 3 | Cayam, n. <>kṣaya. See சயரோகம் சயந்தான் பிரமேகம் (விநாயகபு. 69, 92). . 2. Waste loss; |
| சயம் 4 | Cayam, adv. <>Svayam. Of one's own accord; தானாக. சயமே யடிமை தலைநின்றார் (திவ். திருவாய். 8, 10, 2). |
| சயம் 5 | Cayam, n. <>விசயம். Sugar; சர்க்கரை. (சூடா.) |
| சயம் 6 | Cayam, n. prob. jalē-šaya. Indian water-lily; ஆம்பல். (மூ. அ). |
| சயம்பு | Cayampu, n. <>Svayam-bhū. 1. That which is self-existent. See சுயம்பு. (நீல. வேதவாத. 3.) . 2. šiva; 3. Brahmā; 4. Arhat; |
