Word |
English & Tamil Meaning |
|---|---|
| சர்க்கில்தார் | Carkkil-tār, n.<>E. circle + U. dār. Executive officer in charge of a circle ; நாட்டு விசாரணை புரியும் உத்தியோகஸ்தன். Loc. |
| சர்க்கீல் | Carkkīl, n. <>U. sarkhail. The minister or chief officer vested with general control over administration, under Mahratta Government; மகாராஷ்டிர ஆட்சியில் அரசியல் நிர்வகித்து வந்த மந்திரி. (R.T.) |
| சர்க்கூட்டு | Carkkūṭṭu, n. <>E. circuit. Tour, circuit; சுற்றுப்பிரயாணம். Colloq. |
| சர்க்கெல் | Carkkel, n. See சர்க்கீல். (R.T.) . |
| சர்க்கோடு | Carkkōṭu, n. See சர்க்கூட்டு. Loc. . |
| சர்ச்சரை 1 | Carccarai, n. <>சரசரவெனல். Roughness, as of bark. See சருச்சரை. (சூடா.) . |
| சர்ச்சரை 2 | Carccarai, n. <>சச்சரவு. Quarrel; சச்சரவு. Loc. |
| சர்ச்சை | Carccai, n. <>Carcā. 1. Inquiry; critical study; ஆராய்ச்சி. சர்ச்சையில்லாமல் விஷயம் மறந்துவிட்டது. 2. Discussion, debate; |
| சர்த்தி | Cartti, n. <>chandi. Vomiting; வாந்தி. |
| சர்த்தி - த்தல் | Cartti-, 11 v. tr. <>id. To vomit; வாந்தியெடுத்தல். சீறி மிகவே சர்த்திக்கும் (பாலவா. 931). |
| சர்தார் | Cartār, n. <>U. sardār An officer of rank; அரசாங்க மேலதிகாரிகளுள் ஒருவன். |
| சர்நாமா | Carnāmā, n. <>U. sarnāma. Superscription, address of a letter; மேல்விலாசம். (C.G.) |
| சர்ப்ப | Carppa, v. imp. <>sarpa sec. pers. sing. of sṟp. Run, hurry up; விரைந்து நட. ஏகுமின் சர்ப்ப வென்றான் (திருவிளை. இந்திரன். 64). |
| சர்ப்பக்காவடி | Carppa-k-kāvaṭi, n. <>சர்ப்பம்+. A serpent taken to a temple in a kāvaṭi, under a vow, the serpent miraculously transforming into an agreeable offering in the presence of the deity; கடவுள் திருமுன்பு அபிஷேகப் பொருளாகமாறி அதிசயம் விளைக்கக் கூடியபடி நல்ல பாம்பைக் கலத்திலிட்டு எடுக்குங் காவடி. |
| சர்ப்பக்காவு | Carppa-k-kāvu, n. <>id. +. Serpents' grove, considered a sacred place; நாகங்கள் இருப்பதற்கமைந்த தோட்டம். Loc. |
| சர்ப்பகேது | Carppa-kētu, n. <>Sarpa-kētu. Duryōdhana, as having a banner with serpent-ensign; [அரவக்கொடியோன்] துரியோதனன். தன்மைந்தனையு முடனேவினன் சர்ப்பகேது (பாரத. பதின்மூன்றாம். 81). |
| சர்ப்பசயனம் | Carppa-cayaṉam, n. <>Sarpa +. Viṣṇu's serpent-couch; திருமாலின் பாம்பணை. |
| சர்ப்பசாந்தி | Carppa-cānti, n. <>id. +. Rites in expiation of the sin of cobra-killing in past births, performed with a view to beget long-lived offspring; குழந்தை பிறந்த இறந்திடாமல் நீண்ட ஆயுளோடு வாழ்ந்திருக்கவேண்டித் தாம் முற் பிறவியில் நல்லபாம்பைக் கொன்றதனாலுண்டான தோஷத்தை நிவர்த்தி செய்யும் சடங்கு. |
| சர்ப்பசாபம் | Carppa-cāpam, n. <>id. +. Curse of childlessness resulting from cobra-killing in former births; முற்பிறப்பில் நல்லபாம்பைக் கொன்றதனால் வமிசமற்றுப்போம்படி நேருஞ்சாபம். |
| சர்ப்பசிரம் | carppa-ciram, n. <>id. +. (Nāṭya.) A hand pose which consists in joining the five fingers of a hand and bending them in the form of serpent's hood; பாம்பின் படம்போல ஐந்து விரல்களையும் நெருக்கி உள்வளைக்கும் அபிநயக்கை. (பரத. பாவ. 23.) |
| சர்ப்பதஷ்டம் | Carppa-taṣṭam, n. id. + daṣṭa. Snake bite; பாம்புக்கடி. |
| சர்ப்பம் | carppam, n. <>sarpa. 1. Serpent, snake; பாம்பு. (பிங்.) 2. (Astron.) The second of 15 divisions of day; |
| சர்ப்பயாகம் | Carppa-yākam, n. <>id. +. Sacrificial rite for the destruction of serpents; பாம்புகள் சாகும்படி செய்யும் யாகம். (பாகவத.) |
| சர்ப்பராச்சி | Carpparācci, n. Smooth volkameria. See பீநாறிச்சங்கு. . |
| சர்ப்பராசி | Carpparāci, n. perh. sarparāši. kaus. See நாணல். (சங். அக.) . |
| சர்ப்பனை | Carppaṉai, n. prob. sarppaṇa. Hypocrisy, deception; வஞ்சனை. சாமங்கடோறு மிவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே (பட்டினத். பொது. 44). |
| சர்ப்பாகாரம் | Carppākāram, n. <>Sarpa + ā-kāra. (Astron.) Arrangement of shells or concrete numbers in serpentine form, opp. to taṇṭākāram; கணனத்தில் பாம்பின் வடிவாக அமைக்கப்பட்ட சோகிகள் அல்லது எண்கள். (W.) |
| சர்ப்பி | Carppi, n. <>sarpis. Ghee; நெய். சர்ப்பிசமுத்திரம். |
| சர்ப்பிராசி | Carppirāci, n. <>U. sarbarāhī Providing accommodation, etc.; supplying; உணவு உறைவிடம் முதலியன உதவுகை. (W.) |
| சர்பத்து | Carpattu, n. <>U. sharbat. Sherbet . ஒருவகை மதுரபானம். |
