Word |
English & Tamil Meaning |
---|---|
அருங்கு | aruṅku n. <>அருகு-. Rareness; அருமை, உறலருங் குண்மையின் (தொல்.பொ.146). |
அருங்கோடை | aruṅ-kōṭai n. <>அருமை+. 1. Severest part of the hot weather; கடுவெயிற் காலம். 2. Severe drought; |
அருச்சகன் | aruccakaṉ n. <> arcaka. Temple priest; கோயிற் பூசை செய்வோன். ஆதி சைவனா மருச்சக னொருவன் (திருவிளை. வாதவூ.25). |
அருச்சனை | aruccaṉai n. <> arcanā. 1. Worship; பூசை. (இரகு. தேனுவ. 20.) 2. Offering of flowers, sacred leaves, or saffron, accompanied by a recitation of the sacred names of a Deity in a temple on behalf of particular individuals; |
அருச்சனைவடிவு | aruccaṉai-vaṭivu n. <> id.+. Idol which is worshipped; அர்ச்சாவதாரம். திருவாழ் மார்ப னருச்சனை வடிவிற் கெல்லாம் (அரிசமய. பராங்.47). |
அருச்சி - த்தல் | arucci- 11 v.tr <> arc. 1. To worship; பூசித்தல். 2. To offer flowers, sacred leaves of saffron to the idol while the sacred names are being recited; |
அருச்சிகன் | aruccikaṉ n. prob. arcis. Moon; சந்திரன். (திவா.) |
அருச்சுனசன்னியாசி | aruccuṉa-caṉṉiyāci n. <> Arjuna+. One who puts on the garb of an ascetic to deceive others, as Arjuna did when marrying; கபடசன்னியாசி. |
அருச்சுனம் 1 | aruccuṉam n. <> arjuna. 1. Whiteness; வெண்மை. (சூடா.) 2. Arjan. See மருது. |
அருச்சுனம் 2 | aruccuṉam n. cf. arka. Madar. See எருக்கு. (மலை.) |
அருச்சுனன் | aruccuṉaṉ n. <> Arjuna. 1. Arjuna, the third of the Pāṇdu princes, one of paca-pāṇṭavar, q.v.; பஞ்சபாண்டவருள் ஒருவன். 2. Kārttavīrya. See கார்த்தவீரியன். |
அருச்சை | aruccai n. <> arcā. 1. Worship, adoration; பூசனை. தோகைக்குஞ் சொன்முறை யருச்சை (வேதாரணி. மண.21). 2. Deity. See அர்ச்சை. |
அருசி | aruci n. <> a-ruci. 1. Tastelessness, want of relish; சுவையின்மை. வாயருசி சோபை (பதார்த்த.522). 2. Aversion, dislike; |
அருசிப்பித்தம் | aruci-p-pittam n. <> id.+. Bile which causes distaste for food; உணவு வெறுக்கச்செய்யும் பித்தம். |
அருஞ்சிறை | aru-ciṟai n. <>அரு-மை+. 1. Rigorous imprisonment; கடுங்காவல். அருஞ் சிறையின் மீட்டநாள் (கம்பரா. உருக்கா.20). 2. Hell; |
அருஞ்சுரம் | aru-curam n. <> id.+. Bare, open, torrid plain; நிழலற்ற நீளிடம். (புறநா.119, உரை.) |
அருஞ்சோதி | aru-cōti n. <> id.+. Kind of paddy; நெல்வகை. (ஏரெழு.உரை.) |
அருட்கண் | aruṭ-kaṇ n. அருள்+. 1. Gracious look; கிருபாநோக்கம். 2. Eye of wisdom; |
அருட்குடையோன் | aruṭ-kuṭaiyōṉ n. <> id.+. God, one whose umbrella is grace itself; கடவுள். (W.) |
அருட்குறி | aruṭ-kuṟi n. <> id.+. Sivaliṅga, the symbol of grace; சிவலிங்கம். ஆனு யர்த்தவ னருட்குறி யருச்சனை (காஞ்சிப்பு. சார்ந்தா.21). |
அருட்கொடிவேந்தன் | aruṭ-koṭi-vēntaṉ n. <> id. Arhat, the lord whose banner is grace; அருகன். (சூடா.) |
அருட்சி | aruṭci n. See அரட்சி. . |
அருட்சித்தி | aruṭ-citti n. <>அருள்+ siddhi. Quicksilver; பாதரசம். (W.) |
அருட்செல்வம் | aruṭ-celvam n. <> id.+. 1. Wealth of grace, opp. to பொருட்செல்வம்; கருணையாகிய செல்வம். அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் (குறள்,241). 2. Wealth of divine grace; |
அருட்சோதி | aruṭ-cōti n. <> id.+. 1. God, the embodiment of effulgent grace; கடவுள். 2. A mineral poison; |
அருட்டம் | aruṭṭam n. <> ariṣṭa. Black hellebore. See கடுகுரோகிணி. (மு.அ.) |
அருட்டரிசனம் | aruṭṭāciṉam n. <>அருள்+ daršana. Vision of divine grace; தெய்வதரிசனம். (ஒழிவி. விரதி.9, உரை.) |
அருட்டி | aruṭṭi n. <>அருள்3-. Quaking, trembling, agitation; நடுக்கம். (W.) |
அருட்டு - தல் | aruṭṭu- 5 v.tr. caus. of அருள்3-. 1. To confuse, bewilder, frighten; மயக்குதல். அருட்டிக் கண்சிமிட்டி (திருப்பு.574). 2. To excite, wake from sleep or from inactivity, rouse to exertion; |
அருட்பா | aruṭ-pā n. <>அருள்+. Songs and poems produced under divine inspiration, as the Tēvāram; தெய்வானுக்கிரகத்தாற் பாடப்பட்ட செய்யுள். |