Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| சரிகைத்திம்மை | Carikai- t - timmai, n. <>id. +. See சரிகைத்திரி. Loc. .  | 
| சரிகைத்திரி | Carikai - t - tiri, n. <>id. +. Skein of gold thread; சரிகைக்கற்றை . Loc.  | 
| சரிகைவெள்ளி | Carikai-veḷḷi, n. <>id. +. Silver obtained by melting silver-lace; வெள்ளிச் சரிகையையுருக்கி எடுத்த வெள்ளி. (பதார்த்த. 82.)  | 
| சரிசமம் | Cari-camam, n. See சரிசமானம். .  | 
| சரிசமானம் | Cari-camāṉam, n. <>சரி + Exact likeness, perfect equality; நேரான ஒப்பு.  | 
| சரிசாமம் | Cari-cāmam, n. <>id. + yāma. Midnight; நடுச்சாமம். Vul.  | 
| சரிசு | Caricu, n. See சரி. 4. (J.) .  | 
| சரிசொல்(லு) - தல் | Cari-col-, v. <>சரி +. tr. To second, support, as a motion, to approve --intr. To answer for, to become responsible; ஆமோதித்தல். பொறுப்பேற்றல். Loc.  | 
| சரித்திரகாரன் | Carittira - kāraṉ, n. Historian; சரித்திர ஆசிரியன்.  | 
| சரித்திரம் | carittiram, n. <>caritra. 1. History, biography; வரலாறு. எம்மான் சரித்திரங் கேட்டோர் (சிவரக. பசாசு. 42). 2. Conduct;  | 
| சரித்திரை | Carittirai, n. <>caritrā Tamarind. See புளியமரம். (மலை.) .  | 
| சரித்து | Carittu, n. <>sarit. River; நதி. (யாழ். அக.)  | 
| சரிதம் | Caritam, n. <>carita. See சரித்திரம், 1. அரிச்சந்திரன்றன் சரிதமதை (அரிச். பு. பாயி. 13). . See  சரித்திரம், 2. நெறியில் சரிதமும் (பாரத. வேத்திர. 40).  | 
| சரிதன் | Caritaṉ, n. <>id. A man of deed; செயலிற் சிறந்தவன். தருமனஞ்சுறு சரிதர் (கம்பரா. அனுமப்.10).  | 
| சரிதி | Cariti, n. <>caritin. See சரிதன். நரியினிற்றொகுதி யெல்லா நற்பரித் திரள்க ளாக்குஞ் சரிதி (திருவாத. பு. குதிரை. 58).  | 
| சரிதை | Caritai, n. <>carita. 1. See சரித்திரம். வேடம் பலவாஞ் சரிதை கண்டேன் (தேவா. 830, 3). . 2. (šaiva.)  See சரியை. சரிதைநற்கிரியை யோகம் (பிரபுலிங். சித்தரா. 69). 3. Alms;  | 
| சரிப்படு - தல் | cari-p-paṭu-, v. intr. சரி +. [T. saripadu.] 1. To be agreeable or satisfactory; ஏற்றதாதல். 2. To suit, agree; 3. To be right, to come up to the mark or standard; 4. To be similar; 5. To be finished, settled;  | 
| சரிப்படுத்து - தல் | Cari-p-paṭuttu-, v. tr. Caus. of சரிப்படு-. See சரிக்கட்டு-. .  | 
| சரிப்பி - த்தல் | Carippi-, v. tr. Caus. of சரி-. To conduct, as ceremonies; நடப்பித்தல். சாத்திரப்படி தப்பாமற் சரிப்பித்து (உத்தரா. அசுவ. 1).  | 
| சரிப்பிடி - த்தல் | Cari - p - piṭi-, v. intr. <>சரி +. 1. To overtake or keep even with one, as in running, learning; பிறனுடன் ஒத்துச் செல்லுதல். (W.) 2. To aim at or plot another's ruin;  | 
| சரிபம் | Caripam, n. cf. subhaga. Asoka tree. See அசோகு. (மலை.) .  | 
| சரிபாதி | Cari-pāti, n. <> சரி +. [K. sari-pālu.] Exact half, moiety; பேர்பாதி.  | 
| சரிபார் - த்தல் | Cari-pār-, v. <>id. +. tr. To compare, check, as a copy with its original; --intr. & tr. To plot one's ruin; ஒத்துப்பார்த்தல். (W.) கேடு சூழ்தல். Loc.  | 
| சரிபோ - தல் | Cari-pō-, v. id. +. [T. saripōvu.] intr. 1.To progress, as a game; நேர்நடத்தல். 2. To become reconciled, as contending parties; 3. To have one's own way; To resemble;  | 
| சரிமணி | Cari-maṇi, n. <>U. sarī +. A kind of girdle set with gems; மகளிர் இடையிலணியும் ஓரணி. (திவா.)  | 
| சரிமணிக்கோவை | Cari-maṇi-k-kōvai, n. <>சரமணி +. See சரிமணி. (பிங்.) .  | 
| சரிமேரை | Cari - mērai, n. <>சரி +. Established rights or privileges of individual ryot; குடிகளின் உரிமை. (R. T.)  | 
| சரியம் | Cariyam, n. <>šāribā. A species of sarsaparilla. See சிறுநன்னாரி. (மலை.) .  | 
| சரியா - தல் | Cari- y-ā-, v. intr. <> சரி + [T. K. sariyāgu.] See சரிவா-. . 2. To be spent, as cash, life;  | 
| சரியாபாதம் | Cariyā-pātam, n. <>Caryā +. (šaiva.) One of the four sections into which civākamam is divided; சிவாகமப்பகுதி நான்கனுள் ஒன்று (பெரியபு. தில்லைவா. சூச. பக். 59.)  | 
