Word |
English & Tamil Meaning |
|---|---|
| சருகுபித்தளை | caruku-pittaḷai n.<>id.+. 1. Thin leaf of brass; மெல்லிய பித்தளைத் தகடு. 2. Talkative person, chatterbox; |
| சருகுபுலி | caruku-puli n. <> id. +. A small panther; சிறுத்தைவகை. (J.) |
| சருகுபுளி | caruku-puḷI n. <> id. +. Dried tamarind fruit; உலர்ந்த புளி. |
| சருகுமுயல் | caruku-muyal n. <> id. +. A kind of rabbit living on dried leaves; சருகுகளை உண்ணும் உக்குளான். (J.) |
| சருகை | carukai n. See சரிகை. (J.) . |
| சருகொட்டி | carukoṭṭI n. <>சருகு+ஒட்டு- A kind of bird; பறவைவகை, Loc. |
| சருச்சரை | caruccarai n. <> சரசர onom. Roughness, ruggedness; சொரசொரப்பு. களிற்றினது சருச்சரையாற் பொலிந்த கழுத்தகத்தே (பு. வெ. 12, பெண்பாற். 2, உரை). |
| சருசபம் | carucapam n. <> sarṣapa. White mustard; வெண்கடுகு. (மலை.) |
| சருத்தி | carutti, n. cf. சத்தி4. (W.) 1. Streamer or flag of a car; தேர்க்கொடி 2. Distinguishing banner; |
| சருப்பதோபத்திரம் | carupatōpattiram n. <> saravatōbhadra. 1. A fancy verse of 32 letters which, when entered twice in a square of 64 compartments, will read identically from any corner of the squre; சதுரமொன்றில் 64 அறைகள் அமைத்து அவற்றில் 32 எழுத்துள்ள செய்யுளை இருமுறை எழுதிச் சதுரத்தின் எந்த சதுரத்தின் எந்தழகத்தினின்று தொடங்கினும் அது படிக்கவரும்படி அமைக்கப்படும் மிறைக்கவி. (தண்டி. 95, உரை). 2. See சர்வதோபத்திரம், 2. போர்யூகஞ் சருப்பதோபத்திரமாக வணிசெய்து (பாரத. ஒன்பதாம். 10). 3. Figure drawn with powers of varied colours on the floor of a sacrificial ground; |
| சருப்பம் | caruppam n. <> sarpa. See சர்ப்பம். . |
| சருப்பராச்சியம் | carupparācciyam n. Smooth volkameria. See சங்கங்குப்பி. (மலை) . |
| சருப்பராசி | caruppa-rāci n. perh. sarpa +. rāji. Kaus. See நாணல். (மலை.) . |
| சருப்பாங்கக்கல் | caruppāṅka-k-kal n. <> id. + அங்கம் +. Serpentine hydrous silicate of magnesia; ஒருவகைக் கல். (M. M. 248.) |
| சருபந்து | carupanthu n. See சருவந்து. . |
| சருமகன் | carumakaṉ n. See சருமகாரன். . |
| சருமகாரன் | caruma-kāraṉ n. <> carmakāra. Leather-worker; செம்மான். |
| சருமசோபை | caruma-cōpai n. <> carman+ šōphā Hypertrophy of the skin; தோல் தடித்திருக்கையாகிய நோற். (இங்.வை.) |
| சருமபந்தம் | caruma-pantam n. cf. dharmapattana. Black pepper. See மிளகு. (தைலவ. தைல. 5.) |
| சருமம் | carumam n. <> carman. 1. Skin, hide, leather; தோல். தைப்பமை சருமத்து தொல். சொல். 402, உரை> 2. Skin commonly of antelope or tiger, used as seat or bed; 3. Shield; 4. Bark of a tree; |
| சருமன் 1 | carumaṉ n. <> id. [M. ceruman.] See சருமகன் (W.) . |
| சருமன் 2 | carumaṉ n. <> šarman See சர்மா. சருமன் வருமன் .... சார்த்தி வழங்குமியற் பெயர்கள் (திருவானைக், கோச்செங். 69). . |
| சருமாசனம் | carumacaṉam n. <> carmāsana A kind of yogic posture; ஒருவகை யோகாசனம். |
| சருவக்கியன் | caruvakkiyaṉ n. See சர்வஞ்ஞன். உயர் சருவக்கியன் (வாயுசங். பாசுப 10). . |
| சருவச்சட்டி | caruva-c-caṭṭI n. <>சருவம் +. See சருவம். 1. . |
| சருவசாதகம் | caruva-cātakam n. See சர்வ சாதகம். 2. (மலை.) . |
| சருவசித்து | caruvacittu n. See சர்வசித்து. . |
| சருவதா | caruvatā adv. See சர்வதா. இருவான்பும் சருவதா ஒருவரன்பாக (சிலப். 1, 62, உரை). . |
| சருவதாரி | caruvatāri n. See சர்வதாரி. . |
| சருவந்து | caruvantu n. <> U. sarband <>širō-bandha Helmet; தலைக்கவசம். சருவந்து கைக்கொண்டு (இரகு திக்குலி. 232). |
| சருவப்பானை | caruva-p-pāṉai n. <>சருவம் +. See சருவம், 1. . |
| சருவம் 1 | caruvam n. <>šarāva. 1. Shallow wide-mouthed vessel; வாயகன்ற பாத்திர வகை. 2. Spatula. |
| சருவம் 2 | caruvam n. <> sarva. See சர்வம். சருவநஞ்சிவைபோம் (பதார்த்த. 1020). . |
| சருவமுத்திப்பிரசங்கம் | caruva-mutti-p-piracaṅkam n. <> sarva-mukti-prasaṅga Theory of Universal salvation; எல்லாரும் முத்திபெறலாமென்ற கொள்கை. |
