Word |
English & Tamil Meaning |
|---|---|
| சல்லிக்காரன் | calli-k-kāraṉ, n. <>id. +. [T. jallikādu, K. jalika.] Liar, hypocrite; பொய்யன். colloq. |
| சல்லிக்கெண்டை | calli-k-keṇṭai, n. perh šalya +. A fresh-water fish, greenish-brown, eyes golden, weighing 25 lbs., Barbus carnaticus; பசும்பழுப்பு நிறமும் பொன்னிறக் கண்ணும் 25 பவுண்டுநிறையும் உள்ளதாய் நன்னீரில் வாழும் கெண்டைமீன்வகை |
| சல்லிகை | callikai, n. cf. jhallikā. A kind of large drum; பெரும்பறைவகை. சல்லிகையென் பது சல்லென்ற ஒசையுடைமையாற் பெற்ற பெயர் (சிலப். 3, 27, உரை). |
| சல்லிசு | callicu, adj. <>U. salīs. Easy, gentle; எளிதான. |
| சல்லித்தரை | calli-t-tarai, n. <>சல்லி +. 1. Rough stony ground; கரடுமுருடான தரை. 2. Floor treated with concrete; |
| சல்லிப்பலகை | calli-p-palakai, n. perh. சல்லி2+. Head-board; கப்பலின் முகப்புப்பலகை. Naut. |
| சல்லிப்பொடி 1 | calli-p-poṭi, n. <>id. +. Small piece; fragment; broken shell; உடைந்த துண்டு. Loc. |
| சல்லிப்பொடி 2 | calli-p-poṭi, n. perh. šalya +. Little fish; சிறுமீன். |
| சல்லிப்பொதி | calli-p-poti, n. <>சல்லி2 +. A great liar, as a bag of lies; [பொய்மூட்டை] பெரும் பொய்யன். (W.) |
| சல்லிமாடு | calli-māṭu, n. <>id. +. 1. Bull trained for bull-baiting; சல்லிக்கட்டுக்குரிய எருது. 2. Stray-cattle; |
| சல்லிமாலை | calli-mālai, n. <>id. +. Decorative wreath for cattle at Poṅkal and on occasions like calli-k-kaṭṭu; பொங்கல் முதலியவற்றில் மாடுகட்குக் கட்டும் மாலை. |
| சல்லியக்கரு | calliya-k-karu, n. <>சல்லியம் +. A drug used in black magic; சூனிய மருந்து வகை. (W.) |
| சல்லியகரணி 1 | calliyakaraṇi, n. prob. vi-šalya+karaṇī. Medicament which heals wounds caused by weapons; அத்திரசத்திரந் தைத்த புண்ணை ஆற்றும் மருந்து. (திவா) |
| சல்லியகரணி 2 | calliya-karaṇi, n. prob. šalya-karaṇī. Madar . See எருக்கு. (பிங்.) |
| சல்லியடி - த்தல் | calli-y-aṭi-, v. intr.<>சல்லி+. 1. To talk lies or scandals; பொய் கூறுதல். 2. To lay concrete; |
| சல்லியம் 1 | calliyam, n. <>šalya. 1. Arrow; அம்பு. (பிங்.) 2. Procupine; 3. Bone; 4. Nali; 5. Iron rod; 6. Sharp point or head of a wealpn; 7. Spear, javelin; 8. Disturbance, trouble mischief; 9. Atr of divining things underground; 10. Magical enchantment for warding off missile weapons; black magic; 11. A treatise on magic; |
| சல்லியம் 2 | calliyam, n. Red sandalwood. See செஞ்சந்தனம். (பிங்.) |
| சல்லியர் | calliyar, n. <>šaly. A caste of magicians; மாயவித்தையில் வல்ல சதியார் (W.) |
| சல்லியள - த்தல் | calli-y-aḷa-, v. intr. <>சல்லி +. See சல்லியடி-இ 1. Colloq . |
| சல்லியன் 1 | calliyaṉ, n. <>šalya. A king of the Madra country, maternal uncle of Nakula and Sahadeva; நகுலசகதேவர்களுடைய மாமனாகிய மத்திரதேத்சத்தான். இவன் சல்லியனென்றுரை சான்ற ... ஏறனையான். (பாரத.திரௌபதிமா. 45). |
| சல்லியன் 2 | calliyaṉ, n. cf. kāvya. The planet šukra; சுக்கிரன. குரவனாகிக் குறிகிய சல்லியன் (கந்தபு. கயமுகனு. 52). |
| சல்லியாதேவி | calliyā-tēvi, n. A demoness; ஒரு சிறுதேவதை. (யாழ். அக.) |
| சல்லியூடகம் | calliyūṭakam, n. perh. šalya + ஊடகம். Sea-fish, silvery, Gerres lucidas; வெள்ளிய கடல்மீன்வகை |
| சல்லிவேர் | calli-vēr, n. <>சல்லி + . [T. jallivēru.] Rootlet, opp. to āṇi-vēr; ஆணிவேரின் பக்கத்திற் செல்லுஞ் சிறுவேர் |
| சல்லு 1 - தல் | callu-, 5 v. intr. (T. tcallu, K. cellu.) To sprinkle water; நீர்தெளித்தல் |
| சல்லு 2 - தல் | callu-, 5 v. tr. [T. tjallicu.] To sift; சல்லடையாற் சலித்தல். (w.) |
| சல்லோபில்லோவென்றிரு - த்தல் | callōpillō-v-eṉṟiru, v. intr. To move freely and familiarly; சங்கோசமின்றிப் பழகுதல். colloq. |
| சலக்கடுப்பு | cala-k-kaṭuppu, n. <>சலம் +. Strangury; நீர்க்கடுப்பு. (w.) |
