Word |
English & Tamil Meaning |
|---|---|
| சலவைமண் | calavai-maṇ, n. <>சலவை +> Earth used for plastering walls; சுவரிற் பூசுதற்குரிய மண். (யாழ். அக), |
| சலன் | calaṉ, n. <>calana. Foot, leg; கால். (பிங்.) |
| சலன்சலனெனல் | calaṉa-calaṉ-eṉal, n. Onom. expr. of tinkling sound; சதங்கை முதலியவற்றின் ஒலிக்குறிப்பு. சதங்கைகள் சலன்சலனென (திருவாலவா. 28, 51). |
| சலனகாலம் | calaṉa-kālam, n. <>calana +. Times of hardship, adversity; துன்பகாலம். (w.) |
| சலனநரம்பு | calaṉa-narampu, n. <>id. +. Motor nerve; சதைகளை எண்ணியபடி அசைவிக்கும் நரம்பு. (இங். வை. 28) |
| சலனம் | calaṉam, n. <>calana. 1. Moving, shaking, trembling; அசைவு. மேருவின சிகரமுஞ்சலன முற்றிட (சிவரக. தேவிநாட். 4). 2. Mental agitation; 3. Trouble, anxiety, affiction; 4. Foot , leg; 5. (šaiva.) Liṅga imagined for mental worship; |
| சலனன் | calaṉaṉ, n. <>calana. Wind; காற்று. (பிங்.) |
| சலனை | calaṉai, n. <>id. See சலனம் சலனை பயனானாலும் (ஒழிபு. சத்திநி. 4) |
| சலச்தம்பவாதம் | cala-stampa-vātam, n. <>jala +. Dysury, painful discharge of urine; நீர்க்கடுப்பு. (w.) |
| சலாக்கியம் | calākkiyam, n. <>šlāghya. Excellence . See சிலாக்கியம். Colloq. |
| சலாக்கு | calākku, n. prob. šalaākā. Burin, engraver's tool; உலோகங்களிற் செய்யும் சிந்திர வேலைகளுக்கு உதவுங் கருவி. (C. G.) |
| சலாகாபுருடர் | calākā-puruṭar, n. <>šlāghā + purusa. (Jaina.) Saints, 63 in number, including the 24 tīrttaṅkarar; 24 தீர்த்தங்கரரை உள்ளிட்ட 63 சைனப்பெரியோர்கள். |
| சலாகு | calākai, n. Spike. See சலாகை, 1. |
| சலாகை 1 | calākai, n. <>šalākā. 1. Needle-like tool of steel; சிறு நாராசம். சலாகை நுழைந்த மணித்துளை (மணி. 12, 66). 2. Magnet; 3. Surgeon's probe; 4. Ramrod; 5. Spear, javelin; 6. Iron rod or stake; 7. Lath for roofing; |
| சலாகை 2 | calākai, n. prob. šlāgh. 1. A superior kind of gem; நன்மணி. (பிங்.) 2. An ornament worn on shoulders; 3. A small coin; |
| சலாகைப்பாரை | calākai-p-pārai, n. <>சலாகை+. Sharp pointed implement for digging; தோண்டுதற்கு உதவும் கூர்முனையுள்ள கருவி. (w.) |
| சலாகையடி - த்தல் | calākai-y-aṭi-, v. intr. <>id.+. To nail on laths, prepare laths; வரிச்சல் சேர்த்தல். (J.) |
| சலாகையாணி | calākai-y-āṇi, n. <>id. +. Lath-nail; வரிச்சலாணி. (J.) |
| சலாங்கு | calāṅku, n. perh. jala-raṅka. (பிங்.) 1. Rail, water-fowl; பொய்யாப்புள். 2. Gnat, mosquito; |
| சலாசத்து | calācattu, n. <>šilā-jatu. See சிலாசத்து. Colloq. |
| சலாசயம் | calācayam, n. <>jala+ ā-šaya. 1. Reservoir, tank; நீர்நிலை. Nā. 2. Urinary bladder, one of cācayam, q.v.; |
| சலாசலலிங்கம் | calācala-liṅkam, n. <>cala+a-cala+. Various kinds of liṅga, such as vāṇa-liṅkam, irattiṉa-liṅkam, etc., used for both private and public worship; ஆன்மார்த்த பரார்த்தபூசைகளுக்குரிய வாணலிங்கம் இரத்தினலிங்கம் முதலிய சிவலிங்கங்கள். (சைவச.பொது.123) |
| சலாசனம் | calācaṉam, n. <>id. +ā-sana. (šaiva.) Pedestals imagined for seating a liṅga when bathing it for worship, six in number,viz., aṉantar, taṉmam, āantar, vairākkiyam, aicuvariyam, patumam; பூசையில் சிவலிங்கம் அமைத்தற்குரிய அனந்தர், தன்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், பதுமம் என்ற அறுவகை ஆசனம், (சைவச. பொது. 523.) |
| சலாஞ்செய் - தல் | calā-cey-, v. tr. & intr. <>சலாம்+. 1. To salute by raising the hand to the forehead; கையை நெற்றியில் வைத்து வந்தித்தல். 2. To bow in obeisance; |
| சலாத்தி | calātti, n. A curtain; திரைச்சீலை. (யாழ். அக.) |
| சலாத்து - தல் | calāttu-, 5 v. tr. To shake, as liquid in a vessel; குலுக்குதலி. Loc. |
| சலாந்தரு | calān-taru, n. <>சலாம்+. (Nāṭya.) A saluting pose in dancing; நாட்டிய வுறுப்பு வகை. தள்ளரிய சலாந்தருவும் (குற்றா. தல. தருமசாமி. 55) |
| சலாபக்குளி | calāpa-k-kuḻi, n. <>சலாபம் +. (w.) 1. Pearl-fishery; diving for pearls; முத்துக் குளிப்பு. 2. Profitable business, as pearl-fishing; |
