Word |
English & Tamil Meaning |
|---|---|
| சலுகைக்காரன் | calukai-k-kāraṉ, n. <>சலுகை+. 1. Patron; protector; பரிபாலிப்போன். 2. Person arrogant from office, wealth or high connection; 3. Person of wealth and influence; |
| சலுகைக்குவா - தல் [லுகைக்குவருதல்] | calukaikku-vā-, v. intr. <>id.+. To speak on one's behalf; பரிந்துபேசுதல். (w.) |
| சலுகைகாட்டு - தல் | calukai-kāṭṭu-, v. intr. <>id.+. (w.) 1. To carry oneself proudly, on account of office, wealth, etc.; பெருமையாய் இருத்தல. 2. To be dictatorial, overbearing; |
| சலுகைசொல்(லு) - தல் | calukai-col-, v. intr. <>id.+. To apply for redress of grievances; பெரியோரிடத்திற்கு குறைவேண்டுதல். (w.) |
| சலுப்பன் 1 | caluppaṉ, n. prob. jalp. Talkative person, chatterer; ஓயாமற் பேசுபவன். Loc. |
| சலுப்பன் 2 | caluppaṉ, n. Member of a caste whose profession is flax-dressing. See சணப்பன். (E. T.) |
| சலுப்பு 1 | caluppu, n. 1. Small fragment, particle, flake; துண்டு. (J.) 2. Tip of a branch; |
| சலுப்பு 2 | caluppu, n. <>T. tjalubu. Cold, catarrh; சலதோஷம். |
| சலை | calai, n. See சலமூர்த்தி. (சி. சி. பாயி. சிவஸ்துதி. பக். 35, ஞான.) . |
| சலோதயம் | calōtayam, n. <>jala+udaya. Flooding at the beginning of delivery; பிரசவ காலத்திற் பனிக்குடம் உடைகை. |
| சலோதரம் | calōtaram, n. <>id.+udara. Dropsy, ascitis; ஒருவகை மகோதரநோய். (பைஷஜ.) |
| சலோபாதை | calōpātai, n. <>id. + upādhi. 1. Difficulty in passing urine; நீரடைப்பு. (w.) See சலாபாதை |
| சலோர்க்கம் | calōrkkam, n. See சலோர்ச்சம். . |
| சலோர்ச்சம் | calōrccam, n. prob. jala+ūrja. See குங்கிலியம்,1, 5. (மலை.) . |
| சவ்வர்ச்சலலவணம் | cavvarccala-lavaṇam, n. <>sanvarcala+. Mineral alkali, natron one paca-lavaṇam, q.v.; பஞ்சலவணத்துள் ஒன்று. (பதார்த்த. 1101.) |
| சவ்வரிசி | cavvarici, n. <>U. sāba+ அரிசி. cf. sāgū+. Sago, farinaceous and glutinous pith taken out of the stem of several species of a particular genus of palm, especially |
| சவ்வாசு | cavvācu, int. <>U. shābāsh. Well done! bravo! See சபாஷ். Loc. |
| சவ்வாது 1 | cavvātu, n. <>U. zabād. cf. javādi. A kind of scent being the secretion of the civet cat, civet; ஒருவகைப் னையிலினின்று கொள்ளப்படும் வாசனைத் திரவியம். கலவை புழுகொடு சவ்வாதார்ந்த (தனிப்பா. 227, 21). |
| சவ்வாது 2 | cavvātu, n. cf. Port. cassave. Bitter cassava plant; மரவள்ளி. (மலை.) |
| சவ்வாதுப்புலவர் | cavvātu-p-pulavar, n. A muhammadan poet at the court of Setupati of Ramnad and author of Mukaiyatiṉ. āṇṭavar-piḷḷaitamiḷ; சேதுபதியின் வாயிற்புலவருள் ஒருவரும் முகையதினாண்டவர்ப் பிள்ளைத்தமிழின் ஆசிரியருமாகிய மகமதியப் புலவர். |
| சவ்வாதுபூனை | cavvātu-p-pūṉai, v. intr. <>சவ்வு+. Civet cat, Viverra civettina; சவ்வாது உண்டாகும் பூனையினம். |
| சவ்வாயிரு - த்தல் | cavvāy-iru-, v. intr. <>சவ்வு+. To be viscid, viscous; பிசின் போலாதல். (w.) |
| சவ்வியசாசி | cavviyacāci, n. <>savya-sācin. Arjuna, as shooting arrows with his left hand also; [இடக்கையாலும் அம்பு தொடுப்பவன்] அருச்சுனன். (பாரத.அருச்சனன்றீர். 44.) |
| சவ்வியபலம் | cavviya-palam, n. <>cavya+phala. Elephant pepper. See ஆனைத்திப்பலி. (சங். அக.) |
| சவ்வியம் | cavviyam, n. <>savya. Left side, opp. to apa-cavviyam; இடப்பக்கம். |
| சவ்வீரம் | cavvīram, n. <>Sauvīra. 1. A country near the mouth of the indus, one of 56 tēcam, q.v.; ஐம்பத்தாறு தேசங்களுள் சிந்துநதியின் முகத்துவாரத்துக்கருகிலுள்ள நாடு. கற்றவர் புகழ் சவ்வீரம் (திருவிளை .நரிபரி. 106). 2. Strong medicinal compound containing quicksilver, alum, ammonia, etc., sublimated; 3. A mineral poison. See 4. Vinegar; |
| சவ்வு 1 | cavvu, n. prob. chavi. 1. [M. cavvu.] Membrane, as of the diaphragm, the eye; கண்முதலியவற்றின் மெல்லிய மூடுதோல். கண்ணில் சவ்வு வளருகிறது. 2. Thin scales, as on a healed wound; 3. Proud flesh in ulcers, scirrhus formation in cancers; 4. Envelope round the pulp of fruit, of a bulbous root, of a bulb, seed pellicle; |
