Word |
English & Tamil Meaning |
|---|---|
| சவலை 1 | cavalai, n. <>capala. [M. cavala.] 1. Perplexity, confusion; மனக்குழப்பம். சவலைக் கடலுளனாய் (திருவாச.11, 17). 2. Pain, distress; 3. [T. tcavile.] Leanness of an infant not fed on mother's milk; 4. See 5. Tenderness, immaturity; |
| சவலை 2 | cavalai, n. <>capalā. 1. Lightning; மின்னல். 2. Stanza of irregular feet; 3. A kind of musical composition; |
| சவலைக்கன்று | cavalai-k-kaṉṟu, n. <>சவலை +. Young calf; இளங்கன்று. (J.) |
| சவலைக்குட்டி | cavalai-k-kuṭṭi, n. <>id. +. Young, tender animal; விலங்குக்குட்டி. (w.) |
| சவலைக்குழந்தை | cavalai-k-kuḻantai, n. <>id. +. Sucking child which grows lean for want of mother's milk; தாய்ப்பாலின்ற மெலிந்த குழந்தை. |
| சவலைக்கொட்டு | cavalai-k-koṭṭu, n. <>id. +. Loose frequent motion of bowels, in children; மலம் அடிக்கடி நெகிழ்ந்து கழிகை. Loc. |
| சவலைநெஞ்சம் | cavalai-necam, n. <>id. +. Weak mind; உறுதியற்ற மனம். சவலை நெஞ்சமே சிவனலா துயிர்க்குயிர் தானுமோர் துணையாமே (வைராக். சத. 3). |
| சவலைப்பிள்ளை | cavalai-p-piḷḷai, n. <>id. +. See சவலைக்குழந்தை. . |
| சவலைப்புத்தி | cavalai-p-putti, n. <>id. +. See சவலைநெஞ்சம். (w.) . |
| சவலைபாய் - தல் | cavalai-pāy-, v. intr. <>id. +. To grow lean from want of mother's milk, as an infant; தாய்ப்பாலின்றிக் குழந்தை மெலிதல். colloq. |
| சவலைமதி | cavalai-mati, n. <>id. +. Crescent moon; இளம்பிறை. (w.) |
| சவலைரோகம் | cavalai-rōkam, n. <>id. +. A child's ailment believed to be the result of kuḷi-tōṣam; குளிதோஷத்தால் உண்டாவதாகக் கருதும் குழந்தைநோய் வகை. (சீவரட். 230.) |
| சவலைவெண்பா | cavalai-veṇpā, n. id. +. Veṇpā composed of two kuṟaḷ-veṇpā with out an extra detached foot in the middle; தனிச்சொலின்றி இரண்டு குறல்வெண்பாக்களை இணைத்துச் செய்யும் வெண்பா. (மாறனலங். 198, உரை.) |
| சவள்(ளு) - தல் | cavaḷ-, 2 v. intr. [M. cavaḷuka.] Loc. 1. To bend; வளைதல். 2. To be supple, flexible, as the arms of a fencer; |
| சவள்தடி | cavaḷ-taṭi, n. <>சவள்-+. (w.) 1. Flexible stick; துவளுந் தடி. 2. A kind of oar; |
| சவளக்காரர் 1 | cavaḷa-k-kārar, n. <>சவளம் +. 1. A class of fishermen; வலையரின் ஒரு சாரார். 2. Ferryman; |
| சவளக்காரர் 2 | cavaḷa-k-kārar, n. <>சவளம் +. 1. Lancers; ஈட்டிபிடிக்கும் சிப்பாய்மார். 2. Pikemen; |
| சவளச்சி | cavaḷacci, n. An acrid salt; சத்திச்சாரம். (யாழ். அக.) |
| சவளசோழியம் | cavaḷa-cōḷiyam, n. (யாழு. அக.) 1. Refinement, civilised condition; நாகரிகம். 2. Profound learning; |
| சவளம் 1 | cavaḷam, n. cf. šarva-lā. [T. sabaḷamu, K. sabala, M. cavaḷam.] Bearded dart or lance; pike; குந்தம். அடுசவளத் தெடுத்த பொழுது (கலிங். 424) . |
| சவளம் 2 | cavaḷam, n. <>capala. A fish; ஒரு வகை மீன். (யாழ். அக.) |
| சவளம் 3 | cavaḷam, n. A mineral poison; சங்கபாஷாணம். (சங். அக.) |
| சவளம் 4 | cavaḷam, n. perh. saphala. Well-developed or fully ripe condition of tamarind pulp; புளியின் முற்றிய பழச்சுளை. புளி சவளஞ் சவளமாயிருக்கிறது. Loc. |
| சவளி 1 | cavaḷi, n. [T. tjavaḷi, K. javaḷi, M. cavaḷi.] Cloth, piecegoods; வேட்டி சீலைமுதலிய துணிச்சரக்கு. |
| சவளி 2 | cavaḷi, n. <>சவடி. A kind of necklace for woman; மகளிர் அணியும் கழுத்தணிவகை. பூசாரி ராயனிட்ட பொற்சவளி. (விறலிவிடு. 696). |
| சவளை | cavaḷai, n. Lead sand; வங்கமணம். (மூ. அ.) |
| சவளைக்காரர் | cavaḷai-k-kārar, n. A caste of weavers in Tinnevelly district; திருநெல்வேலி ஜில்லாவில் நெசவுத்தொழில் செய்யும் ஒரு சாதியார். |
| சவற்சலம் | cavaṟcalam, n. <>sanvarcala. Rock-salt; கல்லுப்பு. (w.) |
